ஸ்ரீமாதவன், மானம்புச்சாவடி, தஞ்சாவூர்.மனைவியிடம் அசடு வழிவது சரிதானா?மற்ற பெண்களிடம் வழிவதற்கு, மனைவியிடம் அசடு வழிவது ஒன்றும் தவறில்லை!கே.காசி, வந்தவாசி.முட்டாள், எப்போது புத்திசாலி ஆகிறான்?அவன் முட்டாள் என்று உணரும்போது!ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்..அம்மாவின் சமையல், மனைவியின் சமையல் – ஒப்பிடுங்களேன்? (ரூ.200)முன்னது மருந்து, பின்னது விருந்து!எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.குடும்பப் பெண்களை இல்லதரசி என்று அழைப்பது ஏன்?ஆண்கள் ஒருபோதும் இல்லத்து அரசன் ஆக முடியாது என்பதால்!அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.ஆண்கள் VS மகளிர் ஐ.பி.எல் போட்டி வைத்தால் எப்படி இருக்கும்?பேட்ஸ்மேன்கள் திணறித்தான் போவார்கள்!சி.சுந்தர்மணிகண்டன், விருகம்பாக்கம், சென்னை.சுஹாசினி கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ளும் அளவுக்கு மணிரத்னம், குஷ்புவிடம் அப்படி என்னதான் பேசியிருப்பார்?பர்சனல்!ஜெ.மணிகண்டன், ஆம்பூர்.இளைய தலைமுறையினர் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியிருக்கிறாரே?மதுவுக்கு அடிமையானால் மட்டும் சரிதானா முதல்வர் அவர்களே!கோ.குப்புசுவாமி, சங்கராபுரம்.கடவுள் இல்லை என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை என்கிறாரே நடிகர் ரஜினிகாந்த்?கடவுளை நெருக்கத்தில் பார்த்துவிட்டு திரும்பியவர் அல்லவா… அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்!அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி..இனிமேல் கைக்கட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம் என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?தனது கைகள் கட்டப்பட்டுள்ளதை எவ்வளவு நாசுக்காக சொல்கிறார் பாருங்களேன்!வண்ணை கணேசன், சென்னை..பன்னீர் தனிக்கட்சி தொடங்கினால், அதனால் யாருக்கு பலன்?இத்தனைக் காலம் அவரால் பலன் பெற்ற ஒரே ஒருவரை சொல்லுங்கள். உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன். சொல்லப்போனால் பன்னீரால் பன்னீருக்கே பலன் இல்லையே!ஜெ.மணிகண்டன், ஆம்பூர்..அன்புமணி ராமதாஸின் முதல்வர் கனவு பலிக்குமா?உதயநிதி, இன்பநிதி, கனிமொழி, விஜய், சீமான், அண்ணாமலை, எடப்பாடி… சாரி பாஸ்… கியூ நீளமாக இருக்கிறது!@ ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்.பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள 1.34 லட்சம் கோடி மதிப்புள்ள தி.மு.க அமைச்சர்களின் சொத்து பட்டியல் எப்படி?எண் கணித விளையாட்டில் ஒருமுறை வென்றிருக்கலாம். மறுபடி மறுபடி வெல்ல முடியாது!@ பா.ஜெயப்பிரகாஷ், தேனிஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை எடப்பாடி பழனிசாமி ஏலம் எடுத்து அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று எழுந்திருக்கும் கருத்து பற்றி?வைக்கலாமே... ஊழல் காட்சியகம் என்ற பெயரில் வைத்தால் பொருத்தமாக இருக்கும்!