மனம் பொத்தி வைத்துக்கொண்ட உன் பொருட்டுகாதல் கசிந்துநிலமெல்லாம் படர்ந்திருக்கிறதுஇருவிரலால் அதனை பொறுக்கி எடுத்துஇருப்பில் வைத்துக்கொள்ளும்சிறு பிள்ளையின் செயலைத்தான் இதோ என் கவிதைகள்செய்துக்கொண்டிருக்கிறது.****நேசத்தின் நெருக்குதல் பற்றிஅறிந்திருக்க மாட்டாய்அது அத்தனை மனிதர்களையும்ஓரங்கட்டி உன்னை மட்டுமேமையப்படுத்தும் காதலின்அல்கரித வேலை அது..அன்பின் இழைஅறுபடா வண்ணம்ஆயுள் முழுதும்இணைந்திருப்போம் என்ற பரஸ்பர உறுதிமொழிக்குப் பின்னும் நிகழ்த்திக்கொண்ட பிரிவென்பது மனித இனத்தின் வேண்டுதலைப் பொருட்டுபலிபீடத்தில் ஏறியஆடுகளின் அதிர்ஷ்டமற்ற விதியைப் போலானது. *** பொம்மையைப் பழகும் குழந்தை அதனை கொஞ்சிவிட்டு தூக்கி எறிவது இயல்பு தானே காதலைப் பழகும் நீயும்என்னைத் தூர எறிந்துகுழந்தையாகிப்போகிறாய்அவ்வளவுதான்..உன்னை என்னோடுஇணைக்கும் செயலைகவிதைகளும் கைவிட்டபின்கடவுள் என்ன செய்யக்கூடும் தோற்றுப்போனதன் இயலாமையைஎன்னோடு அமர்ந்துபுலம்பிக் கொண்டிருப்பதைத்தவிர!- மதுரை சத்யா