பார்க்காத காதலிக்குப் பக்கம் பக்கமாய்க் கடிதம் எழுதி, அஜித்தை வைத்து அகத்தியன் கட்டிய காதல் கோட்டை, தாஜ்மகாலை விடவும் அழகு! சில்வர் ஜூப்ளி கண்ட அந்தப் படம் சிறந்த இயக்கம், சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான தேசிய விருதுகளுடன் மாநில அரசின் விருது, ஃபிலிம்ஃபேர் விருது என ஏராளமான விருதுகளையும் அள்ளிக் குவித்தது. தவிர கன்னடம், ஹிந்தி, பெங்காலி மொழிகளிலும் ஹிட் அடித்தது. அஜித்தின் அந்த ஹாட்ரிக் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த இயக்குநர் அகத்தியனை ஏ.கே.யின் பிறந்த நாள் சிறப்பிதழுக்காக சந்தித்தோம்..ஒரே ஆண்டில் (1996-ல்) அடுத்தடுத்து இரண்டு படங்களை அஜித்துக்குக் கொடுக்கக் காரணம் என்ன? “ம்ம்… ‘வான்மதி’ படத்துக்கு ஒரு பையன் தேவைப்பட்டார். யெங்கா, ஜாலியா இருக்குற மாதிரி கேரக்டர். அந்த நேரத்துல அஜித் அதுக்குப் பொருத்தமா இருந்தார். அதனால அவரைத் தேர்ந்தெடுத்தேன். ’வான்மதி’ பண்ணும்போது நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. அதனால, அடுத்த படமும் அவரையே வெச்சுப் பண்ணலாம்னு முடிவு பண்ணேன். ’காதல் கோட்டை’ நல்ல அழகான, ஹீரோவுக்கான சப்ஜெக்ட். அந்த நேரத்துல அழகா, யெங்கா, சுறுசுறுப்பா இருந்த ஒரு ஹீரோங்கிறதால பெண்களுக்கு அவர்மேல ஒரு க்ரேஸ் இருந்தது. ஏற்கெனவே ’வான்மதி’படம் பண்ணியிருந்ததால அவர் கூடயே அடுத்த படத்தையும் பண்றதுக்கு வசதியாக இருந்தது, அதுதான் காரணம்.”அதுக்கப்புறம் ஏன் நீங்க அவரை வெச்சுப் படம் பண்ணலை? “இதை நீங்க அவர்கிட்டதான் கேட்கணும்.’’அவருடனான உங்களின் நினைவுகளைச் சொல்ல முடியுமா? “நிறைய இருக்கு… ‘வான்மதி’படத்துக்காக அஜித்தை சந்திச்சப்போ அவர்கிட்ட இருந்த அந்த டெடிகேஷனும் எளிமையும் ரொம்ப முக்கியமான விஷயங்களாஎனக்குப் பட்டது. அவர் இப்ப எப்படி இருக்கறார்னு எனக்கு எதுவும் தெரியாது. ஆனா, அன்னைக்கு ’வான்மதி’ சமயத்துல சந்திச்சப்ப அவர்கிட்டே இருந்த அந்தத் துடிப்பு, அந்த இளமை, ’எப்படியாச்சும் பெஸ்ட் ஆர்ட்டிஸ்டா சக்சஸ் ஆகிடணும்’கிற அந்த டெடிகேஷன் இதெல்லாம் அவர்கிட்டே இருந்துச்சு.இன்னும் சொல்லப்போனா, அவருக்கு எப்பவுமே ’தனக்கு எந்த பேக்கிரௌண்டுமே இல்ல, இருந்தாலும் விடா முயற்சியோட நாம போராடி ஜெயிச்சே ஆகணும்’என்கிற வெறி நிறைய இருந்துச்சு. ‘வான்மதி’செட்ல தொடர்ந்து 36 மணி நேரம் 40 மணி நேரமெல்லாம் டெடிகேட்டடா வேலை பார்த்திருக்காரு. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்… அவர் தனக்கு இதுதான் வேணும், அதுதான் வேணும்னெல்லாம் எதையுமே கேட்டு அடம் பிடிக்க மாட்டாரு. கொடுக்கற டிரஸ்ஸை எந்தக் குறையும் சொல்லாம போட்டுக்குவார். இப்ப உள்ள ஆர்ட்டிஸ்டுங்க நிறைய பேர் ’என்ன சார் இப்படி இருக்கு?‘னு டிரஸ்ஸை குறை சொல்லுவாங்க. அவர் அப்படியெல்லாம் சொல்லமாட்டார். அவர்கிட்ட அப்ப எனக்குப் பிடிச்சிருந்த இன்னொரு விஷயம் என்னன்னா, செட்ல யாராவது நல்ல சட்டை போட்டிருந்தாங்கன்னா, ‘இது நல்லா இருக்குண்ணா கொடுங்க’ன்னு சொல்லி வாங்கிப் போட்டுகிட்டு ’சார் கண்டினியூட்டி பிரச்னை இல்லையே?’ன்னு கேட்டு ஆக்ட் பண்ணுவார். அந்த மாதிரியெல்லாம் ரொம்ப நல்ல டைப். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ’காதல் கோட்டை’யில நான் பழகின வரைக்கும் அஜித் எனக்கு ரொம்பப் பிடிச்ச நேர்மையான நல்ல மனிதன்!”.சமீப காலங்கள்ல அவர்கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் எது? “இப்போ எனக்கு அவர்கிட்ட நேரடியான தொடர்பு இல்லை. இருந்தாலும், அவரைப் பத்தின விஷயங்களை பார்க்கறேன், படிக்கறேன். மனசுல பட்டதை எப்பவும் வெளிப்படையாப் பேசறாரு, அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. சமீபத்துல ’தல’னு கூப்பிடாதீங்கன்னு சொன்னாரு. ரசிகர் மன்ற விஷயங்கள்ல எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரு. ரசிகர்களை அவர் பயன்படுத்திக்கறதில்லை. தன்னை ரசிக்கறாங்க, படம் பார்க்கறாங்க-ன்னா படம் பாருங்க அவ்ளோதான் அப்படீங்கிற அளவுலதான் அவர் இருக்கறார்ங்கிறது வித்தியாசமாத் தெரியுது. சமீபத்துல அவங்க அப்பா இறந்தப்பகூட ’இது என்னோட குடும்ப நிகழ்வு தயவு செய்து தொந்தரவு பண்ணாதீங்க’ன்னு ரொம்ப டீசன்டா கேட்டார். இப்படித் தனிப்பட்ட முறையில அவர் ரொம்ப ரொம்ப நல்லவரா இருக்கார். தனக்கு நியாயம்னு பட்டதை வெளிப்படையா பேசறாரு. அது அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!” .பிறந்த நாளில் அஜித்துக்கு நீங்க சொல்ல விரும்பும் செய்தி? “அஜித் ரொம்ப வித்தியாசமானவர். அவர் மிகப் பெரிய நடிகர்… நல்ல நடிகர்னு எனக்குத் தெரியும். அவர் நிறைய நிறைய படங்கள் பண்ணணும். நிறைய நாள் இண்டஸ்ட்ரீயில இருந்து நிறைய சாதிக்கணும். அதே நேரத்துல நான் அவர்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு விரும்பறேன், அது என்னன்னா, ஆரம்ப காலத்துல அவர் நல்ல நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்தாரு. அந்த மாதிரி இன்னைக்கு இருக்குற இளைஞர்களோட சில நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் நடிக்கணும். இப்போதைய படங்கள் அவரோட நடிப்புத் திறமைக்கு சரியா தீனி போடலையோன்னு எனக்கு ஒரு எண்ணம். தன் முழு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தறது மாதிரியான கதைகளை அவர் தேர்ந்தெடுக்கணும் அப்படீங்கிறது என்னுடைய விருப்பம். அவர் நிறைய நிறைய நல்லப் படங்களைப் பண்ணணும்னு இந்தப் பிறந்த நாள்ல அவரை வாழ்த்தறேன்!” -வாசுகி லட்சுமணன்