சி.எம்.ஆதவன் “தாத்தா… நான் பாத்தேன்…” என்று அப்பாவியாக சொன்ன அந்த சிறுவனை நினைவிருக்கிறதா? அதெப்படி மறக்க முடியும் என்கிறீர்களா? மூன்று வயதில் நடிக்கத் தொடங்கி 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார் ‘மாஸ்டர்’ மகேந்திரன். அவரது நடிப்பில் ‘ரிப்பப்பரி’படம் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருந்த மகியுடன் பேசினோம்.... ‘ரிப்பப்பரி’யில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?“ஈரோடுக்குப் பக்கத்துல இருக்குற கொடுமுடி தான் படத்திற்கான களம். காமெடி ஹாரர் படமா எடுத்திருக்கோம். லவ்வுக்காக நடக்குற ஹாரர், அதை ஹேண்டில் பண்றப்போ நடக்குற காமெடி தான் படம். அதேசமயம் ஆக்ஷனும் இருக்கு. ஹீரோ யாரை லவ் பண்றான், அதுல எப்படி பேய் வருது, அதனால என்னவெல்லாம் நடக்குதுன்னு காமெடியா சொல்லிருக்கார் டைரக்டர் அருண் கார்த்திக்.சத்யராஜ்ங்கிற கேரக்டர்ல நான் நடிச்சிருக்கேன். என்கூட பாக்யராஜ், பாண்டியராஜ் கேரக்டர்ல ரெண்டு ப்ரண்ட்ஸ் வர்றாங்க. நாங்க 3 பேருமே வௌங்காத பசங்க. எந்த வேலையும் உருப்படியா செய்யத் தெரியாது. எப்பப் பார்த்தாலும் ஏழரையை இழுத்துக்கிட்டே இருப்போம். சுருக்கமா, நாங்க ராஜாங்கம் இல்லாத ராஜாக்கள்ன்னு சொல்லலாம்.ஜாலியா இருக்கலாம்னு ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ நடத்தப்போயி, ஒரு லவ் செட் ஆயிரும். அப்படி லவ் பண்றது பேயா, பொண்ணான்னு ஒரு காமெடி களேபரம் பண்ணிருகோம். நோபிள் கே ஜேம்ஸ், ‘புட் சட்னி’ மாரி, ஶ்ரீநி, யூட்யூபர் தனம் அம்மா, செல்லா உட்பட புது முகங்கள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க.”பேய் மேல பயம் விட்டுப்போயிடுச்சோ.?“அப்படிச்சொல்லிபேய்கிட்டகோத்துவிட்டுட்டுப்போயிறாதீங்கப்ரோ. படத்துலபேயைவெச்சுசெஞ்சிருக்கோம். படத்தப்பாத்துட்டுகுழந்தைங்க, ‘அம்மா.. அம்மா... எனக்குஅந்தப்பேயைக்கொஞ்சம்காட்டுங்க!’ன்னுசொல்வாங்கபாருங்க. அந்தளவுக்குபேயைஅலறவிட்ருக்கோம். மொத்தத்துலகாமெடிக்குநாங்ககேரண்டி.உங்களுக்குப் பேய்னா பயமா.. இல்லையா.?“பேயைப் பத்தின உண்மைகள் தெரியறதுக்கு முன்னாடி நிறையவே பயந்திருக்கேன். இப்போலாம் அந்தப் பயம் இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, பேயைவிட மோசமானவங்களா மனுஷங்க இருக்காங்க. அதனால், என் முன்னாடி பேய் வந்துச்சுன்னா வெல்கம் பண்ணத் தயாரா இருக்கேன். பேய் ஸ்க்ரிப்ட் கேட்டும், பேய்ப் படங்களாப் பாத்ததுனாலயும்கூட அந்தப் பயம் போயிருக்கலாம்னு நினைக்கிறேன்.”.அதென்னங்கஇட்லிப்பொடிமாதிரி, ஹீரோயின்ஆரத்தி“ரொம்ப எளிமையான பொண்ணுங்க. டவுன் டு எர்த்துன்னு சொல்லலாம். அவங்கள ஷீட்டிங் ஸ்பாட்ல ஜாலியா கிண்டல் பண்ணிட்டே இருப்போம். அவங்க பேரச் சொல்ற மாதிரி, ‘ஆரத்தி இங்க வாடி’, ‘ஆரத்தி அங்க போடி..!’ன்னு செமயா கிண்டல் பண்ணுவோம். பாவம் ப்ரோ அந்தப் பொண்ணு. நம்மள பேர் சொல்லிக் கூப்பிடுறாங்கன்னு நினைச்சுக்கிட்டு சீரியஸ் ஆகாம போயிருவாங்க. இவங்க தவிர, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ காவ்யா, ப்ளாஷ்பேக்ல லீடு ரோல் பண்ணிருக்காங்க.”ஆக்கு பாக்கு, தங்கமே பாடல்கள் நல்லா ரீச் ஆயிருக்கே..?“அதுக்கு மியூசிக் டைரக்டர் திவாகரா தியாகராஜனுக்கு பெரிய நன்றி. யூத் ஜெனரேஷன் மட்டுமில்லாம, எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் ‘தங்கமே..!’ பாட்டு பிடிச்சிருக்கு. பேக் ரவுண்டு மியூசிக்லயும் பிரமாதப்படுத்திருக்கார். பாடல்களை டைரக்டர் ஏ.கே-வே எழுதிருக்கார். எடிட்டர் முகன்வேல், ஆர்ட் டைரக்டர் சிங்கம், டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீக்ரிஷ், ஃபைட் மாஸ்டர் ‘ஸ்டன்னர்’ ஷாம்ன்னு எல்லோரும் நல்லா ஒர்க் பண்ணிருக்காங்க.”.டைரக்டர் அருண் கார்த்தியும் நீங்களும் நல்ல பிரண்ட்ஸாமே..?“ஏ.கே., வெரி நைஸ் பெர்சன். எல்லோருக்கும் மரியாதை தர்ற மனுஷன். இந்த சொசைட்டியில எல்லாருக்கும் இடமிருக்கு. அவங்கவங்களுக்கு கொடுக்க வேண்டிய ரெஸ்பான்ஸை கட்டாயம் கொடுக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். ரெண்டு பேருக்குமே நிறைய விஷயங்கள் ஒத்துப்போகும். அவர் என்னை எந்த இடத்துலயும் விட்டுக்கொடுக்க மாட்டார். படத்துல அவரோட ஒர்க் பண்ணதே தெரியல. ரொம்ப ஜாலியா இருந்தோம். தமிழ் சினிமாவுல அவருக்குன்னு ஒரு இடத்தை ரிசர்வ் பண்ணிக்கிட்டார்.”.சின்னச்சின்ன கேரக்டர்கள்லயும் நடிக்கிறீங்களே.. இமேஜ் பாதிக்காதா.?“புரியுது... ‘மாஸ்டர்’, ’மாறன்’ படங்கள்ல நடிச்சதாலதான் இப்படிக் கேட்கறீங்க. நான் எந்தப் படத்துல நடிச்சாலும், அதுல நான் என்ன பண்ணணுமோ அதைச் சரியாப் பண்ணணும்னு நினைப்பேன். அந்தப் படங்கள்ல நான் வர்ற சீன்ஸ்ல நான்தான் லீடு ரோல். அதனால், அதைப் பத்தியெல்லாம் நான் யோசிக்கறதே இல்லை. அடுத்தடுத்து எக்சைட்டிங் ஆன நிறைய புராஜக்ட்ஸ் பண்றேன். மத்தபடி, இமேஜ் பாதிக்கும்னு எல்லாம் நான் நினைக்கறதே இல்லை. ரெண்டு முறை தமிழ்நாடு அரசின் விருது, ரெண்டு முறை நந்தி அவார்டு வாங்கிட்டேன். ஒரு நடிகனா இதெல்லாம் எனக்கான அங்கீகாரம்தானே? தமிழ், தெலுங்கு, மலையாளம்ன்னு 50 ப்ளஸ் படங்கள் நடிச்சிட்டேன். தவிர, ’கனா’ டைரக்டர் அருண்ராஜா காமராஜ் சார் டைரக்ஷன்ல ‘லேபிள்’, தெலுங்கில் ‘நீலகண்டா’ன்னு படங்கள் பண்ணிட்டிருக்கேன்.”