அபூர்வ சந்திப்புபாப் பாடகி உஷா உதுப் – நடிகர் ஜெமினிகணேசன்பாப் மியூசிக்கில் புகழ் பெற்ற உஷா உதுப், தன் கணவருடன், ஜெமினி கணேஷின் வீட்டிற்கு வருகிறார். டெலிபோனில் பேசிக்கொண்டிருந்த ஜெமினிகணேசன் டெலிபோனை மூடிக்கொண்டு, “குட் ஈவினிங்- வாங்க! கொஞ்சம் உள்ளே உட்காருங்கள், இதோ வந்து விடுகிறேன்.” என்று சொல்ல,(வந்தவர்கள்ஏர் கண்டிஷன் ரூமில் போய் உட்கார்ந்து கொள்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜெமினி கணேசன் உள்ளே வருகிறார்.)திருமதி உஷா உதுப்: மீட் மை ஹஸ்பண்ட் ஜானி உதுப். (தன் கணவனை அறிமுகம் செய்து வைக்கிறார்.)ஜெமினி கணேசன்: ஐ ஆம் ஷ்யூர், ஹி இஸ் மலையாளி?உ: எஸ்.ஜெ: எங்கே வேலையில் இருக்கிறார்?உ: எஸ்டேட்டில் இருக்கிறார். உங்களுக்கு மலையாளம் தெரியுமா?ஜெ: மலையாளப் படத்தில் நடித்தும் இருக்கிறேன். ஐ கேன் மேனேஜ் மலையாளம்.உ: இஸ் இட்?ஜெ: இருபது வருடங்களுக்கு முன்னாடியே ஆசாதீபம் என்ற மலையாளப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்.உ: நானும் (தன் கணவரைக் காட்டி) இவரும் சமீபத்தில் கேரளா போயிருந்தபோது, ‘மாயா’ என்கிற மலையாளப் படத்தைப் பார்த்தோம்.ஜெ: சாரதா நடித்த படம்தானே?உ: யெஸ். சாரதா-ப்ரேம் நசீர் நடித்த படம்தான்.ஜெ: டூ இயர்ஸ் பிஃபோர் பத்மினி என்னிடம் ‘குமார சம்பவம்’ என்கிற மலையாளப் படத்தில் பரமசிவனாக நடிக்க வேண்டும் என்றார்கள். நான் அதில் நடித்திருக்கிறேன்..உ: நீங்கள் எனக்கு ஒருவகையில் ரிலேடிவ். உங்களுக்கு ஆமுவைத் தெரியுமா? ஹி இஸ் ஒன் ஆப் மை கசின்.ஜெ: எனது முதல் மாப்பிள்ளைதான் ஆமு. நானே உங்களை வந்து, நீங்கள் தங்கியிருக்கும் இடத்தில் பார்க்கவேண்டும் என்று இருந்தேன். ஆயினும் உங்களை என் வீட்டிற்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் வரவில்லை. ப்ளீஸ் கம் இன்- ஐ வில் இன்ட்ரட்யூஸ் மை ஒஃய்ப்.(உஷாவையும் உஷாவின் கணவரையும் உள்ளே அழைத்துச் சென்று தன் மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஜெமினி கணேசன் மனைவி, டைனிங் டேபிளில் டிபனுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.)ஜெ: லெட் அஸ் டேக் லைட் டிபன்.(எல்லோரையும் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். ரவா கேசரி, வெங்காய பஜ்ஜி, வடை- கேக் என்பதாகப் பல அயிட்டங்கள். சாப்பிட்டுக்கொண்டே பேச ஆரம்பித்தார்கள்.)உ: நாங்கள் ஒருநாள் ஷூட்டிங் பார்க்கவேண்டும். கேன் யு அரேன்ஜ் இட்?ஜெ: இட் இஸ் எ ப்ளஷர். நீங்கள் என்றைக்கு ஊருக்குப் போகிறீர்கள்?உ: தர்ஸ்டே.ஜெ: அதற்குள் எந்த ஸ்டுடியோவிலாவது ஷூட்டிங் நடக்கிறதா என்று விசாரிக்கிறேன்.உ: பெஸ்ட் நடிகர்கள் நடிப்பதாக இருக்க வேண்டும்.ஜெ: (தம் ஐந்து விரல்களைக் காட்டி) இவற்றில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? அவரவர் ரோலை அவரவர்கள் திறமையாக நடித்துவிட்டால், பெஸ்ட் நடிகர்கள்தான்.உ: நீங்கள் ஹெரால்ட் ராபின்ஸ் எழுதிய ‘ட்ரீம் மர்ச்சண்ட்’ என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா?ஜெ: இட் இஸ் ய வொண்டர்ஃபுல் புக்.உ: எஸ். ஆரம்பத்தில் இருந்து மூவி பிக்சர்ஸ் பற்றி டீல்லா அதில் சொல்கிறார்கள். அதைப் படித்தால் போதும். ஹோல் ஹிஸ்டரி ஆஃப் த மூவிஸ் தெரிந்துவிடும்.ஜெ: நடிப்பு என்பது எல்லோருக்கும் இயல்பானது. சிலர் அதை நன்கு வளர்த்துக் கொள்கிறார்கள். சிறு குழந்தைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா- அப்பா என்று நடிக்கிறது. நான் சீதை, நீ இராமன், அவன் அனுமான், என்று நடிக்கிறது. பூச்சாண்டி என்று நடிக்கிறது. இப்படி விளையாட்டாக குழந்தைகளிடத்திலேயே நடிப்புத்தன்மை அமைந்திருக்கிறது..(டெலிபோன் மணி அடிக்கிறது. திரு. ஜெமினி கணேசன் சென்று பேசிவிட்டு மறுபடியும் வந்து அமர்ந்து கொள்கிறார்.)ஜெ: நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?உ: எஸ்.எஸ்.எல்.சி.தான். பிறகு ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட்டில் பயின்றேன்.ஜெ: உங்களுக்கு பெயின்டிங்ஸ் வருமா? (சுவரைக் காட்டி) அதோ இருக்கிறதே அந்தப் படம் என் செகண்ட் டாட்டர் கமலா பெயின்ட் பண்ணினது.உ: எனக்கு பெயின்டிங் சுமாராகத்தான் தெரியும். உங்களது ரீசன்ட் பெஸ்ட் பிக்சர் எது?ஜெ: (புன்னகை)- லாஸ்ட் இயர் பிக்சர் ‘காவியத் தலைவி’. மம்தா என்று இந்தியில் வந்த படத்தைத்தான் ‘காவியத்தலைவி’ என்று எடுத்தார்கள். இந்தியில் அசோக்குமார் நடித்த ரோலைத் தமிழில் நான் நடித்திருக்கிறேன். ஹவ் யு பிகேம் ய சிங்கர்?உ: என்னுடைய ஃபாமிலியே ம்யூசிகல் மைண்டட். பாடும் ஆற்றல் என்னிடம் இயற்கையாகவே அமைந்தது.ஜெ: அப்கோர்ஸ்! ரிதம்- ம்யூசிக்- மோஷன் என்ற மூன்றுமே ஒவ்வொருவரிடமும் இயற்கையாக அமைவதுதான். ஒருவருக்கொருவர் அளவு வேறுபடலாம். இந்த மூன்றும் இல்லாத லைஃப்பே இல்லை. உங்களுக்குத் தமிழ் தெரியுமா?உ: தெரியும். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்தான்.ஜெ: அஃப்கோர்ஸ்- சவுத்திலேயிருந்து வடக்கே போகிறவர்கள் பெண்களாக இருந்தால் நன்றாகத்தான் அங்கே புகழ்பெற்று விடுகிறார்கள். நாட் எ மேன்.உ: யு ஆர் கரெக்ட்.ஜெ: வைஜயந்திமாலா, ஹேமமாலினி, பத்மினி, வகிதா ரகிமான். ரேகா- இவர்கள் எல்லாம் இந்திப் படத்துறையில் ஃபேமஸ் ஆகத்தான் இருக்கிறார்கள்.(ஜெமினி கணேசனுடைய செக்ரடரிகளில் ஒருவரான சுப்பிரமணியம் சாப்பிடுகிறவர்களின் பிளேட்டுகளில் மேலும் மேலும் பண்டங்களை எடுத்துப் பரிமாறி வருகிறார்.)உ: பாப் ம்யூசிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாகப் பாடுகிற ஆண்கள்-- பாண்டு செட்டோடு பாடினாலும்கூட ஐந்நூறு, அறுநூறுதான் கொடுக்கிறார்கள். பெண்கள் பாடுகிறபோது மினிமம் ஆயிரத்திற்கு மேல் கொடுக்கிறார்கள்.ஜெ: பெண்கள்தான் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். கணவனே கண்கண்ட தெய்வம் என்கிற படத்தை இந்தியில் எடுத்தார்கள். அதில் நானே இரண்டு ரோலில் நடித்தேன். முதல் போர்ஷனில் இந்தி நடிகர் வாய்ஸே டப் செய்யப்பட்டது. பின் போர்ஷனில் நானே இந்தியில் பேசி நடித்தேன். ஆனாலும் க்ரிடிசைஸ் பண்ணுகிறபோது முதல் போர்ஷன் நான் பேசியது என்று நினைத்துக் கொண்டார்களோ என்னவோ ‘முன்பகுதி உச்சரிப்பு சரியாக இல்லை. பின்னால் நன்றாக இருந்தது. கூனனாக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார்’ என்று எழுதினார்கள். கூனனாக நடித்திருப்பதும் நான்தான் என்று தெரியாமல் அப்படி எழுதி இருந்தார்கள்..உ: டு எ சர்டன் எக்ஸ்டென்ட் மதராசி என்றால் இருக்கத்தான் செய்கிறது.ஜெ: நீங்கள் இந்திப் படத்தில் பாடியிருக்கிறீர்களா?(நடுவில் ஜெமினி கணேசன் ஜானி உதுப்பின் பிளேட்டைப் பார்க்கிறார். அவர் வெங்காய பஜ்ஜியின் மேல் மாவை மட்டும் சாப்பிட்டுவிட்டு வட்ட வட்டமாக உள்ள வெங்காயத்தை பிளேட்டில் ஒதுக்கி வைத்திருப்பதைக் கவனித்தவுடன்,)ஜெ: நோ நோ- -பஜ்ஜியிலுள்ள அந்த ஆனியனைச் சாப்பிடவேண்டும். அதுதான் டேஸ்ட்.உ: (சிரித்துக்கொண்டே) டேஸ்ட் டிஃபர். இஸ் இட் நாட் ஜானி? (உஷா உதுப்பின் கணவரும் சேர்ந்து சிரிக்கிறார்.)ஜெ: அவருக்குத் தமிழ் தெரியுமா?