ஆழிப்பேரலையும் ஊழித்தாண்டவமும் நொடிப்பொழுதில் உண்டாக்கும் அதே தாக்கத்தை ஒருவரால் ஆண்டுகணக்கில் உருவாக்க முடியுமா? மொத்த மைதானத்தின் அத்தனை இதயங்களையும் தனது காலடி ஓசையோடும் பேட்டின் அசைவோடும் ஒத்திசைவு செய்ய வைக்க முடியுமா? சுற்றியெழும் அதிர்வுகளை தனது அமைதியால் ஆட்கொண்டு நினைத்துப் பாராதவற்றையும் நடக்க முடியாதவற்றையும் நிகழ்த்திக் காட்ட முடியுமா? இத்தனையும் முடியும், இன்னமும் முடியும் என்றால் அது `தோனி' என்ற ஒற்றை மனிதராக இருந்தால் மட்டுமே!சீசன்கள் உருண்டோடி விட்டன, ஓ.டி.டி. தளத்தில் கேமரா வியூகத்தை மாற்றுமளவு புதுப்புது விஷயங்களையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம். இம்பேக்ட் ப்ளேயர் வரை இறக்கிப் பார்த்தாயிற்று. முதல் சீசனில் பாலகர் பள்ளிச் சீருடையோடு இருந்த சுயாஸ் ஷர்மா மிஸ்ட்ரி ஸ்பின்னராக களமிறங்கி மிரட்ட, ஆரம்ப சீசன்களில் ஆட்டம் காட்டிய பொல்லார்டும் பிராவோவும்கூட பயிற்சியாளர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டார்கள். சண்டைக்காரர்களாக நின்ற ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும்கூட நண்பர்களாக நடமாடுகிறார்கள். ஆனால் சி.எஸ்.கே. அணிக்கான மதிப்பும், தோனியின் மாயமும் இன்னமும் நிலைத்திருக்கின்றன..200 போட்டிகளில் கேப்டன்ஷி மகுடமேற்று சி.எஸ்.கே-வின் சிம்மாசனத்தை அலங்கரித்த சாதனையை சமீபத்தில் தோனி நிகழ்த்தியிருந்தார்; கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வெற்றி விழுக்காடோடு அதில் 120 போட்டிகளை வெல்லவும் வைத்திருக்கிறார். குறிப்பாக, 70-க்கும் அதிகமான வெற்றி விழுக்காட்டை சேப்பாக்கத்தில் பதிவேற்றி அதனை தனது கோட்டையாக உருவாக்கி உள்ளார்.அவரது தலைமையில் சி.எஸ்.கே. படை இதுவரை சந்தித்திருந்த 13 சீசன்களில் இருமுறை மட்டுமே ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டிருந்தது. அதிலும் ஒன்பது முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து அதில் நான்கு முறை சாம்பியன் என தன்னிகரில்லா சாதனையையும் தன்வசம் வைத்துள்ளது. மும்பையிடம் அதிகக் கோப்பைகள் கையிருப்பில் இருக்கலாம். ஆனால் நிலைப்புத்தன்மையில் சி.எஸ்.கே-வை எந்த அணியாலும் அண்ட முடியாது. இது எல்லாமே தோனியின் கைங்கர்யம்தான்.கண்ணில் படும் கால் பதிக்கும் தேசங்களைத் தனதாக்குபவர்களுக்கு நடுவில் சாமானியனாகத் தொடங்கி தனக்கான சாம்ராஜ்யத்தையே உண்டாக்கிய சக்ரவர்த்திதானே தோனி. இந்தியக் கிரிக்கெட்டில் அவர் பதித்த கால்தடங்கள் காலக்கோட்டை வென்றவை. ஐ.பி.எல்-லும் அவரது ராஜ்ஜியம்தான். 2008-ல் எட்டு அணிகளுமே ஏலம் கேட்டது தோனி ஒருவருக்கே. அப்படிப்பட்டவர் சி.எஸ்.கே-யோடு இணைந்தபோது தொடங்கிய வெற்றிப் பயணம் இன்றுவரை தொடர்கிறது..கடந்தாண்டு எதிர்காலத்தை மனதில் வைத்து தோனியின் துணையோடு ஜடேஜாவிடம் தலைமைப் பொறுப்பைக் கொடுத்துப் பார்க்க சி.எஸ்.கே. நிர்வாகம் முயற்சித்தது. இதுகுறித்து தோனியிடம் பேசினீர்களா என்ற கேள்விக்கு, "அவரிடம் என்றைக்கு நாங்கள் விவாதம் செய்திருக்கிறோம்? அவர் எடுக்கும் முடிவுகளை நடத்திக் காட்டிதானே எங்களுக்குப் பழக்கம்... அது என்றைக்கும் தவறானது இல்லை" என்று கூறியிருந்தது. எந்தளவிற்கு சி.எஸ்.கே. அவரை மையமாக வைத்து அவரைச் சுற்றியே இத்தனை ஆண்டுகாலமும் பயணித்திருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று. உண்மையில், தோனியும் சி.எஸ்.கே-யும் வேறென்பதே அறிவீனம்தான். அவரின்றி ஆங்கே ஓர் அணுவும் அசையாது.தோனி ஆடமுடியாத சமயத்தில் ஆறு போட்டிகளில் ரெய்னா சி.எஸ்.கே-வுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார். ஆனால், அதில் இரு போட்டிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜடேஜா கேப்டன்ஷியும் அப்படியொரு மறக்கவேண்டிய கசப்புதான். ஆக மொத்த சி.எஸ்.கே-வுமே தோனி எனும் அச்சாணியால்தான் முன்னோக்கி நகர்ந்திருக்கிறது. அணியை ஒருமுறை அல்ல... இருமுறை தோனி கட்டமைத்திருக்கிறார்.அதற்கு முன்பாக வாங்கிய கோப்பைகளைக்கூட விட்டுவிடலாம். இரு ஆண்டுகள் தடைக்குப் பின் வந்து அணியை ஒருங்கிணைத்து கோப்பையை வெல்வதற்கெல்லாம் எத்தனை திறமை வேண்டும் ? இதோ இந்த சீசனிலும் அவரது மாயங்கள் தொடர்கின்றன..காகித அளவில் நம்பிக்கை தரும் பெயர்களில்லாத அணியைக் கொண்டுகூட வெல்ல வைக்கும் வித்தையறிந்தவர் தோனி. கலைநயம் மிக்க ஓவியன், எந்த நிறங்கள் எப்படிப்பட்ட அற்புதங்களை வெளிப்படுத்தும் என்று தெரிந்து வைத்திருப்பதைப்போல தோனிக்கு யாரை, எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிகிறது. அதிலும் யாராலும் அதிகம் நம்பப்படாத வீரர்களைக்கொண்டே தனது வெற்றி சூத்திரத்தை உருவாக்குபவர்.அம்பதி ராயுடு, உத்தப்பா என பலரும் இதற்கான சான்றுகள். சமீபத்தில் வான்கடேவில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ரஹானேவை அவர் பயன்படுத்திய விதம் அந்த மாயத்தின் நீட்சியே. நடப்பு சீசனில்கூட காயத்தால் பல வீரர்களும் ஆட முடியாத போதும், தானே முழங்கால் காயத்தால் அவதிப்படும் போதும் இருப்பதைக் கொண்டே வெல்லும் வழிகளை உருவாக்கி வருகிறார். குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விகளில்கூட போட்டியை இறுதிவரை நகர்த்திச் சென்றிருந்தார்.கேப்டனாக, விக்கெட் கீப்பராக, ஃபினிஷராக என முப்பரிமாணத்திலும் அவரது பங்கு சீசன்கள் கடந்தும் சிலாகிக்கப்படுகிறது. மின்னலை மிஞ்சும் அவரது விக்கெட் கீப்பிங் திறன் பற்றியும், தோனி ரிவ்யூ சிஸ்டமும் (DRS) அதன் துல்லியத்தன்மையும் கணிப்பொறிக்கும் தேர்ட் அம்பயருக்கும் சேர்த்தே சவால் விடுப்பதைப் பற்றியும் சொல்லவே தேவையில்லை. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சூர்யக்குமார் யாதவ் விக்கெட் விஷயத்தில் நடந்ததுபோல எத்தனையோ சந்தர்ப்பங்களில் தோனியின் அற்புதத்தை களம் கண்டுள்ளது. வானை அளக்கும் கழுகின் பார்வையில் எதுதான் தப்ப முடியும் ?அதிக ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிய சாதனை (238) ஏற்கெனவே அவர் வசம். சமீபத்தில் 5,000 ஐ.பி.எல். ரன்கள் என்ற மைல்கல்லையும் தோனி எட்டியிருக்கிறார். இத்தனை தூரம் ஓடியும் இத்தனை சாதனைகளைப் புரிந்தும் இன்னமும் அவரது பேட்டின் வேட்கை அடங்கவில்லை. அதிலும் கடந்த சில சீசன்களில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனத்திற்கான பதிலடியாகவே ஒவ்வொரு இன்னிங்ஸும் மாறி வருகிறது. குஜராத்துக்கு எதிரான போட்டியில் 200, லக்னோவுக்கு எதிராக 400, ராஜஸ்தானுக்கு எதிராகவோ 188.2 என அவரது ஸ்ட்ரைக்ரேட் புருவங்களை உயர்த்த வைக்கிறது. மொத்தத்தில் இந்தத் தொடரில் இதுவரை 58 ஆவரேஜோடு 214.81 ஸ்ட்ரைக்ரேட்டோடு கர்ஜிப்பதோடு சிங்கம் அடுத்த பாய்ச்சலுக்கு ஆயத்தமானதையே காட்டிக்கொண்டுள்ளார்.42 வயதை நெருங்கி விட்டார்... ஆனால் பேட்டிங்கில் இன்னமும் அதே ஆற்றலும், ஆளுமையும், உத்வேகமும் உறைந்திருக்கிறது..கண்கள் - கைகள் ஒருங்கமைப்பும், சிக்ஸருக்கு பந்தை செலுத்துவதற்கான அசாத்திய பலமும், எந்த பௌலரை டார்கெட் செய்வது என்ற புத்திக்கூர்மையும், ரன்ரேட்டை எப்படி கட்டமைத்து இலக்கை அடைவது என்று கணக்குப் போடும் கால்குலேட்டிவ் மைண்டும் என எல்லாமே அப்படியேதான் இருக்கிறது. ஒரு மீடியம் பேஸ் பௌலரை எதிர்கொள்வதுபோல் உலகின் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பௌலர்களில் ஒருவரான மார்க் உட்டின் வேகத்துக்கு அஞ்சாமல் பின் வாங்காமல் அதனை பேக் டு பேக் சிக்ஸர்களுக்கு அனுப்பிய அந்த அறைகூவலை எல்லாம் என்னவென்று வர்ணிப்பது?சேஸிங்கின் போது டெத் ஓவர்களில், அதுவும் இறுதி ஓவரில் தோனி களத்தில் நின்றால் பயம் பௌலருக்குத்தான் என்ற அந்த வார்த்தைகள் எப்போதுமே உயிர்தாங்கியே இருக்கின்றன. ஏனெனில், 2019-க்குப் பிறகான காலகட்டத்தில் தோனியின் கடைசி ஓவரின் ஸ்ட்ரைக்ரேட் 275. அதாவது, 76 பந்துகளில் 19 சிக்ஸருக்கும் 13 பவுண்டரிக்கும் பறந்திருக்கிறது. சந்தீப் ஷர்மாவும் மனக்கண்ணில் இப்படி ஒரு மரணபயத்தை பார்த்திருப்பார். சிக்ஸர் பெயர் தாங்கி மண்ணுக்கு விடைசொல்லிப் புறப்பட்ட அந்த இரு பந்துகளுமே அந்த பயத்தை கண்டிருக்கும். கடந்த ராஜஸ்தானுடான போட்டியிலும் இறுதிப் பந்து ஆஃப் சைடில் யாக்கர் ஆகாமல் சற்றே தள்ளி தரையிறங்கியிருந்தால், ஹெலிகாப்டர் ஷாட் காணக்கிடைத்ததோடு சி.எஸ்.கே-வும் வென்றிருக்கும்..இவற்றை எல்லாம்விட அவர் களத்தில் இறங்கி வரும்போது களத்தை கையகப்படுத்தும் அந்த அதிர்வுகள் காற்றில் மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டே இருக்கின்றன. ரசிகர்களின் ஆரவாரமும் மந்திரமாக அவர்கள் உச்சரிக்கும் அவரது பெயரும் அந்த மின்னாற்றலை இரட்டிப்பாக்குகின்றன. எத்தனை ஆண்டுகளாகியும் அவர் மீதான அந்த பிரமிப்பு மட்டும் அடங்கவே இல்லை, என்றைக்குமே அது தணியாது!கடல் பயணத்தில் எதிர்க்காற்றினை குறை கூறுபவன் எதிர்மறைச் சிந்தனையாளன், அது மாறும் எனக் காத்திருப்பவன் நேர்மறைச் சிந்தனையாளன், காற்றின் திசைக்கேற்றவாறு தனது படகைச் செலுத்துபவன்தான் உண்மையான தலைவன் எனச் சொல்லப்படுவதுண்டு. இக்கட்டுகளைச் சந்திக்கும் அத்தகைய படகு சி.எஸ்.கே. என்றால் அதனை செலுத்தும் நிரந்தரக் கேப்டன் தோனிதான்!