திருமணங்களில் வைதிக முறையைக் கைவிட்டுப் புரோகிதரையும் வழமொழியையும் விலக்கிச் சீர்த்திருத்த முறையில் நடத்துவதன் பெருமையை பலவிதங்களில் விளக்குகிறார் இந்நூலில் பேராசிரியர். ‘சீர்திருத்தத் திருமண முறை என்பது ஒரு கட்சிக்கும் மட்டுமே உரியதாகாது. இதனைப் பொதுவுடைமைக் கட்சி, காங்கிரஸ் முதலான பல கட்சித் தலைவர்களில் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பகுத்தறிவும், சுயமரியாதையும், தமிழும் எல்லோருக்கும் பொதுவே’ என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டு, தமிழகத்தில் விழிப்புணர்ச்சிக் கொண்ட பலர் இத்திருமண முறைய வரவேற்பதை சான்றாக்குகிறார் நூலாசிரியர்..‘திருமணம் – வாழ்க்கை ஒப்பதம் என்னும் கருத்தோடு நிகழ்த்துபவர்கள், தமது ஒப்புதல் உறுதிமொழியை மணமக்கள் இருவரும் , ஒவ்வொருவராக அவை முன் படிக்கச் சொல்லலாம். அப்படி படித்துக் கையெழுத்திடுவதால் மணம் செய்துகொள்வது உறுதியாகிறது. இதன் மூலம் மனைவியை கணவன் இழிவாக நடத்துவதற்கோ, உரிமையற்றவளாக நடத்துவதற்கோ, ஒடுக்குவதற்கோ இடமில்லை என்பதும் உணர்த்தப்படுகிறது. மேலும், மனைவியின் உரிமையை கணவன் புறக்கணிக்கலாகாது. மதித்து நடத்த வேண்டும். தோழமை உரிமை வழங்க வேண்டும் என ஆடவரைத் தெளியச் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும்’ என்கிற டாக்டர் மா. இராசமாணிக்கனார் கருத்தை இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் பேராசிரியர் அன்பழகன்.வெளியீடு: தேநீர் பதிப்பகம், 24/1. மசூதி பின் தெரு, சந்தைக்கோடியூர், ஜோலார்ப்பேட்டை – 635851. போன்: 9080909600 பக்கம்:556. விலை: ரூ.550..மெளனக் கூத்து- புனிதஜோதிகவிஞனின் வீட்டுக்குப் புதிய புதிய சொற்கலை அனுப்பிவைக்கிறது தமிழ்’ என்று இந்நூலின் அணிந்துரையில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் சொல்லியிருப்பதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன.‘பெயரில் எல்லாமும் இருப்பதாய் கூறுகிறார் பாவாடைசாமி/அவமானங்களும் அவஸ்தைகளும் என்ற தலைப்பில் /கதை எழுதலாம் என்கிறார்.ஜோசப் என்றவுடன் /சிவாலயங்களில் மறுக்கப்படுகிறது /அர்ச்சனை.மாரியம்மாள் என்றவுடன்/தேதி குறிக்கப்படுகிறது/ ஞானஸ்தானத்திற்கு.பாத்திமா என்றவுடன்/கேட்கப்படுகிறது பிரியாணியின் இரகசியம்.காளியம்மா முனியம்மா மொக்கசாமி முனியப்பன்/ பிரதிபலிக்கிறது பட்டிக்காடுகளை.அம்பேத்கர் பெரியார் முத்துராமலிங்கம் காமராசன்/ இனத்தின் அடைமொழியாய்…இன்னும் ஏராளமான பெயர்கள் /அவமானப் பெயராய்/ பட்டப்பெயராய்/ கெளிக்கைப்பெயராய்/ சாதிப்பெயராய்/ மதப்பெயராய்/நடமாடுகிறது சந்தையில்.பெயரில் என்ன இருக்கிறது/ பெயரில்தான் எல்லாமும் இருக்கிறது’ என்கிற ஒரு கவிதை போதும் இந்நூலின் வளம் பேச.வெளியீடு: படி வெளியீடு, 1080 ஏ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு,சென்னை – 600 078. போன்: 9940446650. பக்கம்:120. விலை: ரூ.150..தமிழ் ஹரிஜன்தொகுப்பு: கிருங்கை சேதுபதி – அருணன் கபிலன்மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில், சுதந்திரப் போராட்டத்திற்கு இடையே அவர் வெளியிட்ட பத்திரிகைகளில் மிக முக்கியமானது ’ஹரிஜன்’. அப்பத்திரிகையின் 52 இதழ்கள் தொகுக்கப்பட்டு பெரும் நூலாக்கப்பட்டுள்ளது.75 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய வரலாற்று நிகழ்வுகளின் தமிழ் ஆவணமாக திகழ்கிறது இத்தொகுப்பு.’இந்து – முஸ்லிம் ஒற்றுமை, இயற்கை மருத்து வம், அஹிம்சையின் அடிப்படை, சாதிச் சிக்கல் கள், உலகப்பார்வை, புலனடக்கம், கதர், மொழிப் பிரச்னை, மதுவிலக்கு, கடவுள், சத்தியாகிரஹம், வேளாண்மை, நீர் மேலாண்மை, சிறை சீர்த்திருத்தம், புகைபிடித்தல், ராமராஜ்யம், இயந்திரங்களின் ஆதிக்கம், கல்வி என பரந்து விரிந்த இந்தியாவின் அனைத்து சிக்கல்களையும் குறித்த காந்தியின் பார்வையை அளந்து காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது தமிழ் ஹரிஜன்’ என்று கவிஞர் சிற்பி இத்தொகுப்பைப் பற்றி போற்றியிருப்பது, உண்மை என சொல்லும் தொகுப்பு இது வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10. கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை– 600 040. போன்: 9840358301. பக்கம்: 944. விலை: ரூ.1,500..நிழல் நதிகளந்தை பீர்முகம்மதுஒரு காலகட்டத்தில் ஒரு நிலப்பரப்பின் மக்கள் வாழ்வை சொல்லும் நாவல் இது. தான் பிறந்து வளர்ந்த நெல்லை மண்னின் வாழ்வியலை பதிவுசெய்யும் நோக்கில் இஸ்லாமிய ஜோடியின் மெல்லிய காதல் கதையை புறக்கணிப்பு, கண்டுகொள்ளாமை, காதலுக்கு எதிர்ப்பு, மறக்க இயலாமை என்கிற உணர்வு முடிச்சுகளுடன் எழுதியுள்ளார் களந்தை பீர்முக்கம்மது.சமீரா – கபீர் என்கிற இரு உள்ளங்கள் காதலின் பெருவீதியில் கை வீசி நடக்க எத்தனிக்கின்றன.. சமீராவின் அண்ணன் ரஹ்மத்துல்லா, மற்றும் இரண்டு இஸ்லாமியர் அல்லாத இளைஞர்கள் என மூவர், கபீருக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் ரஹ்மத்துல்லாதான் தனது காதலுக்கு எதிர்ப்பாளனாக இருந்திருக்கிறான் என்பது தெரிந்து மனம் வருந்துகிறான் கபீர். இந்நிலையில் காலத்தின் விசித்திரத்தால் கபீரை மறந்து சமீரா வேறொரு இஸ்லாமியரை மணந்து சென்னைக்கு சென்றுவிடுகிறாள் என கதை பயணிக்கிறது. கதைக்கு இடையே புலிப்பத்து எனும் ஊர் மக்களின் வாழ்வியல், மத நல்லிணக்கம், மதம் மற்றும் சாதி கடந்த நட்பின் வலிமை என தனித்திறன் காட்டியுள்ளார் நூலாசிரியர்.வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், 669, கே.பி.சாலை, நாகர்கோவில் – 629001. ப்-ஓன்: 91-4652-278525. பக்கம்:304. விலை: ரூ.375-பேராசிரியர் க.அன்பழகன்