கேரை- சரவணன் சந்திரன்இதற்கு முன்னால் ’ரோலக்ஸ் வாட்ச்’ நாவலின் மூலமும், ’தற்செயல்களை விரட்டுகிறவன்’ கட்டுரைத் தொகுப்பின் மூலமும், இன்னபிற சாகஸ எழுத்தின் மூலமும் பெரும் வாசகப் பரப்பை சென்றடைந்திருக்கிற சரவணன் சந்திரனின் புதிய கட்டுரைத் தொகுப்பு இது.சாக்லேட்டின் இரு பக்கமும் சு ற்றியிருக்கும் ஜிகினாப் பேப்பரை திருகிப் பிரிப்பது போன்றதுதான் கட்டுரை வாசிப்பு. இத்தொகுப்பில் உள்ள 43 கட்டுரைகளும் வாழ்வின் பெருவீதியில் நம்மை பயணிக்க வைக்கின்றன.’மழைமரம்’ கட்டுரையில் ’தூர தேசத்து மைதானங்களில் மடிகளை எல்லாம் பார்த்தவர். அதில் பெருங்கனவுகளுடன் துள்ளி மடிந்த முகங்களையும் கண்டவர்’ என்று விளையாட்டு மைதானத்தில் பணிபுரியும் மார்க்கரைப் பற்றிய எழுத்தில் உணர்வின் நுட்பம் புரிகிறது.ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கையிலிருக்கும் கொடி அளவில், எளிய மனிதர்களுக்கு சொந்தமான துண்டு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பதையும் அதனால் பெருகிச் சிதறும் கண்ணீரையும் சொல்கிறது ’இருந்தால் நான்கடி’ கட்டுரை. ’மாணவர்களின் உலகம் எல்லாவித நுகர்வு சம்பந்தமான குழப்பங்களிலும் சிக்கித் தத்தளிக்கிறது’ எனும் யதார்த்தம் ‘ரோலிங் பேப்பர்’ கட்டுரையின் ஆழப்பதிவு. கேரை… கட்டுரை வடிவ நிகழ்த்துக் கலை.! - வெளியீடு: எழுத்து பிரசுரம், 55(7) பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 600 040. போன்: 8925061999. பக்கம்:258. விலை: ரூ.310. .ரத்தின வாத்தியார்- ச.முத்துவேல்1936ல் வெளிவந்த ‘பதிபக்தி’ படத்தில் நடிக்கத் தொடங்கி 1950 வரை 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் காளி என்.ரத்தினம். தமிழ் பேசும்படங்களின் முதல் தலைமுறை நடிகரான இவர், அந்நாளில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞராவார்.அதுமட்டுமல்ல; மதுரை – ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடக நிறுவனத்தில் பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர், போன்ற கலைஞர்களுக்கெல்லாம் நடிப்பு ப் பயிற்சி அளித்த முதல் ஆசானாகவும் திகழ்ந்துள்ளார் காளி ரத்தினம்.நாடகங்களுக்கு மிகப்பெரிய மரியாதையும் வரவேற்பும் இருந்த அக்காலகட்டத்தில் பல ஊர்களில் காளின் என்.ரத்தினத்தின் நாடங்கள் நடைபெற்றுள்ளன.இவ்வளவு பழம்பெருமைவாய்ந்த தமிழ்திரையின் மூத்த கலைஞர் ஒருவரை சிறப்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆவணப்பெட்டகமாகவே இந்நூல் திகழ்கிறது. தமிழ் சினிமாவின் சரித்திர நிகழ்வுகளுக்கு சாட்சி சொல்லும் வகையில் இந்நூலில் கிளாஸிக் டச் கொண்ட ஏராளமான புகைப்படங்கள் கண் சிமிட்டுகின்றன.1945 – 46 காலகட்டத்தில் வெளியான ’ஆரவல்லி’ படத்தில் ’விசித்ரன்’ கேரக்டரிலும், ’மான ஸம்ரக்ஷணம் படத்தில் முக்கியமான கேரக்டரிலும் காளி ரத்னம் நடித்திருப்பதெல்லாம் இந்நூலை வாசிக்கிறபோதுதான் தெரிய வருகிறது.கோடம்பாக்கத்தின் பயாஸ்கோப் பதிவு! வெளியீடு: மின்னங்காடி பதிப்பகம், 24 அண்ணா 3வது குறுக்குத் தெரு, அவ்வை நகர், பாடி, சென்னை – 600 050. போன்: 7299241264. பக்கம்: 180 விலை: ரூ.180.. துப்பட்டா போடுங்க தோழி- கீதா இளங்கோவன்’கற்பு, பெண் உடலின் மீதான குற்றவுணர்ச்சி, குடும்பப்பெண், நகையலங்காரம், சுயபரிவு, உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், வாகனம் ஓட்டுதல் எனப் பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்புவதோடு தீர்வின் திசையையும் விவாதிக்கிறது’ என்று அணிந்துரையில் ஜாகிர் உசேன் சொல்லியிருப்பதற்கு நூறு விழுக்காடு நியாயம் சேர்க்கிறது, இந்நூல். ‘ஹவுஸ் வொய்ஃபாக இருக்கும் பெண்கள் காலை முதல் இரவு வரை செய்யும் வேலைகளையும் அந்தப் பணிகளுக்கான ஊதியத்தையும் பட்டியல் போட்டால் கார்ப்பரேட் ஊதியத்திற்கு இணையாக இருக்கும்’ ’குடும்ப் ஆண்’, ’குடும்ப ஆண் அல்லாதவர்’ என்று சமூகம் பிரித்துப் பார்ப்பதில்லையே. பெண்களிண்டம் மட்டும் ஏன் இந்தப் பாகுபாடு?’’சுயமரியாதையுள்ள பெண்ணுக்கு உண்மையான பொருளாதாரச் சுதந்திரம் என்பது ஊதியத்தைத் தானே கையாள்வது என்பதுதான். ஆனால், அவள் ஊதியம் என்பது குடும்பத்திற்கானதாக மட்டுமே பார்க்கப்படுகிறது’ என்பன உள்ளிட்ட கீதா இளங்கோவனின் கருத்துகள் விழிப்புணர்ச்சியூட்டும் சிந்தனைகளாகும்.அதிகாரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு ஆணவத்தின் வேரை ஆழப்பதிக்க நினைக்கும் ஆண்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.உரிமையின் நெடுஞ்சாலை!வெளியீடு: ஹெர் ஸ்டோரிஸ், 15.மகாலட்சுமி அபார்ட்மெண்ட், 1. ராக்கியப்பா தெரு, சென்னை – 600 004. போன்: 7550098666. பக்கம்: 128 விலை: ரூ.160 .வளங்குன்றா வளர்ச்சி அல்ல;தேவை… மட்டுறு வளர்ச்சி- ம.ஜியோடாமின் தார்மீக அறமும், நேர்மையுமற்ற இன்றைய சந்தைப் பொருளாதார அமைப்பின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி, அதற்கு தடைபோடாமல் சூழல் நலனையும், நீதியையும் நாம் அடைய முடியாது. இந்தப் பின்னணியில்தான் இந்நூல், தமிழுக்கு அறிமுகம் செய்கிறது 'மட்டுறு வளர்ச்சி' என்கிற வாழ்வியல் பதத்தை.‘’இப்படி வாழ்வதற்கு நான் செத்துப்போய்விடலாமே?’’ என்ரு ஒருவரை கதற வைத்தால், அது ‘பிழைத்திருத்தல்’. இத்தனை அழகான புவியில் இன்னும் கொஞ்ச நால் வாழ எனக்கு அவகாசம் கிடைக்காதா?’ என்று ஒருவரை ஏங்கச் செய்வது ‘வாழ்தல்’. நமக்கு பிழைத்திருத்தல் வேண்டாம்’ வாழ்தல்தான் வேண்டுமென்று நினைப்பவர்களுக்கான புத்தக வரிசையில் இது பத்தாவது நூல்.’நான்’ எனும்போதே ’நாம்’ தோற்றுப்போகிறோம். தனிநபர்களாக சிந்திக்கும்போதே நாம் உதிரிகளாகிவிடுகிறோம். வலுவிழந்து போகிறோம். உதிரிகளால் சமூக மாற்றங்களை உருவாக்க முடியாது’ என்கிற கருத்தை விதைத்து, சமூக அக்கறைகொண்ட கூட்டு சிந்தனைக்கு இந்நூலில் வழிகாட்டுகிறார் ஜியோடாமின். வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், 6/2. 12வது தெரு, வைகை காலனி, அசோக் பில்லர், சென்னை – 600 083. போன்: 9094990900. பக்கம்: 96 விலை: ரூ.80..புத்தக அறிமுகம் சொல்லினும் நல்லாள்சக்திஜோதிவாழ்வின் நேர்க்கோட்டுச் சித்திரங்களை எழுத்துகளுக்குள் கொண்டு வந்துவிடுகிற வித்தையறிந்த சக்திஜோதியின் பதின்மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. ‘பயணங்கலை மேற்கொள்ள ஆரம்பித்த பிறகுதான் நான் எழுதத் தொடங்கினேன். என்னுடைய பயணங்களில் நான் சந்திக்கிற மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கவிதைக்கான குறிப்பினை வழங்கத் தவறுவதில்லை’ என்கிற கவிஞர்,‘ஒரு குறுகலான பாதையில் தடுமாறி பயணிக்கையில் அல்லது நெருக்கடியான காலத்தை நீண்டபெருமூச்சோடு கடக்கையில்தான்உங்களையறியாமலே நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள் அகலாது அணுகாது உறவாட!’ - என்று உறவின் பெருவெளியில் பிரவேசிக் கும் நுட்பத்தை கவிதையாக்கியிருக்கிறார். எல்லா கவிதைகளும் மொழியின் எல்லா பக்கத்திலும் மயிலிறகை வைக்கின்றன.வெளியீடு: தமிழ்வெளி, 1. பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர், மலையம் பாக்கம், சென்னை – 600122. போன்: 90940 05600. பக்கம்: 80. விலை: ரூ.100..வரையாட்டின் குளம்படிகள்- கோ.லீலா ’’காடுகளுக்குள் பயணிக்கும் எல்லோரும் இயற்கையை எழுதிவிட முடியாது. இயற்கையை எழுதுபவர்கள் எலோரும் காடுகளுக்குள் பயணிக்க முடியாது. காடுகளுக்குள் பயணித்து இயற்கையை எழுதும் க்ப்ப்.லோலாவின் பார்வையில் பறவைகல் சிறகைசைக்கின்றன. பூச்சிகள் ரீங்கரிக்கின்றன. யானைகள் பிளிறுகின்றன. இவருக்கான வானத்தில் இருவாய்ச்சிகளின் பறத்தலை, இவருக்கான வனத்தில் வரையாடுகளின் வரிசையை வியந்து ரசிக்கிறார். சூழலியல் இலக்கியங்கள் பரவலாக கவனம் பெற்று வருகின்றன. ’வரையாட்டின் குளம்படிகள்’ எனும் நூலும் கவனம் பெறவேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்று இப்புத்தக்கத்துக்கு சூழலியலாளர் கோவை சதாசிவம் எழுதியிருக்கும் அகவுரை ஒன்று போதும் இந்நூலைப் பற்றி நாம் அனைவரும் அறிந்துகொள்வதற்கு. ’’இந்த மண்ணில் கரையான் அண்ட் கோ 90 சதவீத வேலையை ஓவியர் மருதுவின் தூரிகையில்காதல் கதை சொல்லட்டுமா?- தமிழ்க்காரிசங்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தினால் ஓவியர் மருதுவின் தூரிகையில் காதல் கதை சொல்லட்டுமா? என்னும் தலைப்பில் குறிஞ்சிப்பாட்டு மற்றும் பூக்கள் பூக்கும் தருணம் என்னும் தலைப்பில் 30 குறுந்தொகைப் பாடல்களை தொடர்களாக எளிமையான விளக்கத்துடன் எழுதியுள்ளார் தமிழ்க்காரி எனும் சித்ரா மகேஷ்.பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூல் தொகுப்பில் அடங்கியது குறிஞ்சிப் பாட்டு. கபிலரால் இயற்றப்பட்டது. அகப்பொருளில் குறிஞ்சித்திணைப் பண்பாட்டை விளக்கும் இப்பாடலை மையமாகக் கொண்டு , தனக்கே உரிய அழகுத் தமிழில் வசீகர நடையில் இக்காதல் நூலை எழுதியிருக்கிறார் தமிழ்க்காரி.வெளியீடு: அந்தரி பதிப்பகம், புதிய எண்:120, மேற்கு சம்பந்தம் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை – 641002. பக்கம்: 164. விலை: ரூ. 30.புத்தக விமர்சனம் ராதிகா சாந்தமானாள்தெலுங்கு மூலம்: முத்துப்பழனிதமிழில்: பி.எம்.சுந்தரம் தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்மன்அரசவையில் நடனமணியாக இருந்த முத்துப்பழனி என்பவரால்தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட இந்நூல், இதுவரை ஆங்கிலம் தவிரவேறு மொழிகளில் வெளிவரவில்லை. பி.எம்.சுந்தரம் மொழிபெயர்க்க,‘ராதிகா சாந்தமானாள்’ என தெலுங்கிலிருந்து நேரடியாக தமிழில்மொழிபெயர்க்கப்பட்டு முதல்முறையாக வெளிவந்துள்ளது.மெட்ராஸ் பிரசிடென்சியில் புத்தகங்கள் மீதான தணிக்கையில்முதன்முதலில் தடைசெய்யப்பட்ட நூல் ‘ராதிகா ஸாந்த்வனமு’.1912ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் ஆபாச இலக்கியம் என்றுதடை செய்யப்பட்டது. பெங்களூரு நாகரத்தினம்மாள், குஜிலிப் பாடலாகப் பதிப்பிக்கப்பட்டிருந்த இந்நூலை, கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தில் இருந்த முத்துப்பழனியின் கையெழுத்துப் பிரதியைப் பெற்று, மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து, 1910ல் விரிவான முன்னுரையுடன் வெளிக்கொண்டு வந்தார். அதுவரை இப்புத்தகத்துக்கு இருந்த தடையானது 1947ல் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த டங்குடூரி பிரகாசம் ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.கிருஷ்ணனுக்கும் ராதைக்கும் இருந்த உறவு பற்றி சிருங்கார ரசத்துடன் மன்மதக் கலை அம்சத்துடன் எழுதப்பட்ட இந்நூல் ’கிளாசிக் டச்’ எனும் இலக்கிய வகைமையைக் கொண்டுள்ளது. வெளியீடு: அகநி வெளியீடு, 3. பாடசாலை தெரு, அம்மயப்பட்டு, வந்தவாசி – 604408. போன்: 94443560421. பக்கம்: 312. விலை: ரூ.450..தமிழ்ப் பாடம் கற்பித்தலில் புதிய உத்திகள்!முனைவர் கடவூர் மணிமாறன் பிழையின்றி எழுதுவதும் பயிற்றுவிப்பதும் முதன்மையான விஷயம். மாணவர்கள் எழுதும் எழுத்தில் பிழைகள் ஏற்படலாம். அதை கவனித்து திருத்தும் நிலையில் இருக்கும், ஆசிரியர்களில் பலரும் பிழையோடு எழுதுபவர்களாக இருப்பதுதான் வருத்தத்துக்குரியது. பிழையின்றி எப்படி கற்பிப்பது எனத் தெளிவான நடையில், இக்கால ஆசிரியர்களுக்குத் தேவையான விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார் கடவூர் மணிமாறன். ‘கேட்பவை எளிதில் மறக்கப்படுகின்றன. பார்த்-தவற்றை நாம் நினைவில் வைத்துக்-கொள்-கிறோம். ஆனால் நாமே பங்குகொண்டு செயலில் ஈடுபட்டால், அதன் தன்மையையும் அடிப்படையாக அமைந்துள்ள கருத்துகளையும் நாம் நன்கு அறிந்துகொள்கிறோம். இந்த அடிப்படையில்தான் கற்பித்தல் என்பது நடக்க வேண்டும். உளம் ஆர்ந்த வாழ்த்து என்பதை ‘உளமார’ என்று சொல்வதுதான் சரியானது. ஆனால் பலரும் ‘உளமாற’ என்றே எழுதுகின்றனர். கற்பிக்கின்றனர். கால்கள் என்பதை Ôகாட்கள்’ என்றோ, தோள்கள் என்பதை ‘தோட்கள்’ என்றோ நாம் எழுதுவதில்லை. அதேபோல்தான் நாள்கள் என்பதை Ôநாட்கள்’ என எழுதுவதும் தவறு. தமிழ் அற்புதமான, நுட்பமான மொழி இதை உணர்ந்து, கற்று மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். கற்போம்... கற்பிப்போம்! வெளியீடு: விடியல் வெளியீட்டகம், 1-53 பெரியார் நகர், குளித்தலை _639104. பக்கம்: 144 விலை: ரூ. 150 . நாடோடியாகிய நான்இயக்குநர் பி.சமுத்திரக்கனி புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி தன் வாழ்வின் சில கட்டங்களை இந்நூலில் அழகுற பதிவு செய்துள்ளார். ‘’இன்னும் என்கிற ஒரு வார்த்தைதான் என்னை இயக்குகிறது. அந்த ‘இன்னும்’தான் இன்னும் இன்னும் என்னை ஓட வைக்கிறது. நேர்மையான, உண்மையான, எளிமையான, வெகுளியான கலைஞர்களை சினிமா என்றுமே கைவிட்டதில்லை. எங்கோ ஓரிடத்தில் இழுத்துப் பிடித்து தனக்குள் இருத்தி வைத்திருக்கும். அப்படித்தான் நானும்’’ என்று சமுத்திரக்கனி சொல்வது நன்னம்பிக்கை வரிகள்.’’ ‘அப்பா’ படம் ரிலீஸான சில நாட்களில் கோபிசெட்டிபாளையத்தில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, ‘தயவுசெய்து உங்கள் குழந்தைகளோடு தியேட்டருக்குச் சென்று அப்பா படத்தைப் பாருங்கள்’ என்று கடிதம் எழுதியதை அறிந்து மகிழ்ந்தேன் ’’ என்று பதிவு செய்திருப்பது நெகிழ்வு நிகழ்வு! வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், 9. 1080ஆ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600 078. போன்: 9940446650 பக்கம்: 136. விலை: ரூ.150முக்கோண மனிதன்- பிருந்தா சாரதிஅன்பின் புன்னகைகளை, வாழ்வின் வலிகளை பழகுமொழியில் எழுதுவதில் கைத்தேர்ந்தவர் பிருந்தா சாரதி. இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து கவிதைகளிலும் நிபந்தனையற்ற மனிதநேயம் மிளிர்கிறது.‘எங்கிருக்கிறது உன் அழகு?’ எனத் தலைப்பிட்ட கவிதையில் ஓரிடத்தில் ‘அடைமழை நாளொன்றில் /சேற்றில் சரிந்து கிடந்த செடியொன்றை எடுத்து/மீண்டும் நட்டு வைத்தாயே/ அந்தக் கருணையில் இருக்கிறது/உன் கரங்களின் அழகு’ எனும்போது கவிஞரின் மனசின் அழகு நமக்குத் தெரிந்துவிடுகிறது. ’பெயரில் என்ன இல்லை’ என்று ஒரு கவிதை. ‘எளிதாகச் சொல்கிறீர்கள்/ பெயரில் என்ன இருக்கிறது என்று/ பெயரில் என்ன இல்லை/அடையாள அட்டை இன்றியே/ஒருவரைப் பற்றிய/ ஏராளமான விவரங்களை /அது உளறிவிடுகிறது’ என்றெழுதியிருப்பதை வாசித்தப் பிறகு பெயரில் என்னதான் இல்லை என்கிற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது.வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், எண்: 9, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600 078. போன்: 99404 46650 பக்கம்: 224. விலை: ரூ.250