'என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா!' அஜித்தின் ரியல் வாழ்க்கைக்கும் பொருந்திப்போன ரீல் பஞ்ச். மே முதல் தேதியன்று தனது 52 வது பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கும் அஜித் பற்றிய எக்ஸ்ளூசிவ் தகவல்கள் இங்கே…தகவல்கள் இங்கே…1. காலணி விளம்பரம் உள்ளிட்ட சில உப்புமா விளம்பரங்களில் நடித்துவிட்டு, சரியாக 30 ஆண்டுகளுக்கு முன் ‘பிரேம பொஸ்தகம்’என்ற தெலுங்குப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார், அஜித். அந்தப் படத்துக்கு அவருக்கு இன்ட்ரோ கொடுத்தவர், அமரர் எஸ்.பி.பி.2. முதலும் கடைசியுமாக அவர் நடித்த தெலுங்குப் படம் அது. அதன் பின்னர் ஒரே ஒரு இந்திப்படம் தவிர்த்து அவர் வேற்று மொழிப் படங்கள் எதிலும் நடித்ததில்லை. 3. பல படப்பிடிப்புகளில் அடிபட்டு தையல்களால் ஆனது அஜித்தின் உடம்பு. அப்படி முதல் விபத்து ஏற்பட்ட படம், ‘பவித்ரா’. படத்தில் விபத்தில் அடிபட்ட நோயாளியாக இவர் நடித்த காட்சிகள், நிஜமாகவே விபத்தில் காயப்பட்ட நிலையில் நடித்தவைதான்.4. அஜித் - விஜய் இணைந்து நடித்த ஒரே படம், ‘ராஜாவின் பார்வையிலே’. சென்னையில் அதன் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யின் அம்மா ஷோபா, இருவருக்கும் சேர்த்து ஒரே கேரியரில் உணவு கொண்டுவருவார்.5. 96ம் ஆண்டு வெளிவந்த ‘மைனர் மாப்பிள்ளை’படம் வரை டூவீலரில் தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவுடன் ஷூட்டிங் வந்த அஜித், இந்தப் பட ரிலீஸுக்குப் பின் தான், மாருதி 800 கார் ஒன்றை வாங்கினார்..6. 98ம் ஆண்டு சுபாஷ் இயக்கத்தில் நடித்த ‘நேசம்’28 லட்சம் பணப் பற்றாக்குறையால் ரிலீஸாகமுடியாமல் தவிக்க, தன் கையில் பணம் இல்லாதபோதும், நண்பர்களிடம் கடன் வாங்கி பட ரிலீஸுக்கு உதவினார், அஜித்.7. 99ல் சரணின் ‘அமர்க்களம்’முதல் நாள் படப்பிடிப்பில் ஷாலினியை கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சியில் கத்திபட்டு ஷாலினிக்கு லேசாக ரத்தம் கசிந்துவிட, அப்போது துடிதுடித்துப்போன அஜித்தைக் கரம் பிடித்தார் ஷாலினி.8. மைத்துனர் ரிச்சர்ட், மைத்துனி ஷாம்லி உள்பட யாருக்கும் சிபாரிசு செய்வது அஜித்துக்குப் பிடிக்காது. அவரவர் திறமையால் அவரவர் முன்னேற வேண்டும் என்பதே அவரது கொள்கை.9. ஷாம்லியை அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவைக்க ஒன்றிரண்டு இயக்குநர்கள் முயன்றபோது, ‘என்னதான் அக்காவின் கணவர் என்றபோதும் அவர் என் சொந்த அண்ணனைப்போல’ என்று மறுத்துவிட்டார், ஷாம்லி.10. “எனக்கு கட் அவுட், பாலாபிஷேகம் வேண்டாம். அவரவர் அம்மா, அப்பாவை கவனியுங்கள்” என்பது தன் ரசிகர்களுக்கு அஜித்தின் கண்டிப்பான அறிவுரை. ஒரு கட்டத்தில் தனது ரசிகர் மன்றங்களை முற்றாகக் கலைத்த துணிச்சல் மிக்க இந்திய நடிகர், இவர் மட்டுமே..11. ”எனது பணி நடிப்பதோடு முடிந்துவிட்டது”என்று தயாரிப்பாளர்களுக்கு திட்டவட்டமாக அறிவித்து, பட புரோமோஷன்கள் பக்கமே கடந்த 15 வருடங்களாக அஜித் திரும்பியதே இல்லை!12. இதே 15 ஆண்டுகால இடைவெளியை மீடியா நபர்களின் சந்திப்பைத் தவிர்ப்பதிலும் மிகக் கறாராக கையாள்கிறார் ஏ.கே. ஏதாவது அறிவிக்க விரும்பினால், அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் ட்விட்டரில்தான் தகவல் வரும்.13. சம்பள விவகாரத்தில் பெருந்தன்மையாக இருப்பதோடு, தன்னிடம் வேலை பார்க்கும் அத்தனை ஊழியர்களுக்கும் சொந்த வீடு கட்டிக்கொடுத்திருக்கும் ஒரே ஜீவன் அஜித் மட்டுமே.14. தன் பெற்றோரின் பெயரில் ‘மோகினி- மணி’அறக்கட்டளை தொடங்கி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோருக்கு உதவி வரும் அஜித்தின் ஒரே கண்டிஷன், தன்னிடம் உதவி பெற்றதை வெளியே சொல்லக்கூடாது என்பதுதான்.15. பைக் பயணத்துக்கு அடுத்தபடியாக அஜித்துக்கு பிடித்த பொழுதுபோக்கு, புகைப்படங்கள் எடுப்பது. சக நடிகர்கள், உதவி இயக்குநர்கள் என அனைவரையும் தனது கேமராவில் சுட்டுக்கொண்டே இருப்பார்..16. லிப்ஸ்டிக் வாய் ஹீரோக்களுக்கு மத்தியில்,மேக் அப் என்றாலே அஜித்துக்கு அலர்ஜி. ஷாட்டுக்கு முன்னால் குளிர்ந்த நீரில் முகத்தை நன்கு அலம்பிக்கொள்வது மட்டுமே அவரது மேக் அப்.17. இளம் வயதில் படிப்பு ஏறவில்லையே தவிர, ஒரு கட்டத்துக்குப் பின்னர் புத்தக வாசிப்பில் மூழ்க ஆரம்பித்தவரின் வீட்டில், இன்று ஒரு நூலகமே இருக்கிறது.18. படப்பிடிப்பில் ஷாட் இடைவெளிகளில் கூடுமானவரை அரட்டை அடிப்பதைத் தவிர்க்கும் அஜித், புத்தக வாசிப்பில், குறிப்பாக ஆன்மிக புத்தக வாசிப்பில் மூழ்கிவிடுவார்.19. ரஜினி பரிசளித்த ‘லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்’என்கிற புத்தகம் தன் வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிப்போட்டது என்று அடிக்கடி குறிப்பிடுவார் அஜித்.20. படு தீவிரமான சிக்கன் பிரியாணி , சிக்கன் ஃப்ரைடு ரைஸ் பிரியர். பல சமயங்களில் தானே சமைத்து யூனிட் ஆட்களுக்கு முரட்டு உபசரிப்பும் செய்வது உண்டு..21. இயக்குநர்களிடம் கதை கேட்பதற்கு முன்பு தனது கருத்துகளை துணிந்து சொல்பவர், கதை ஓகே என்று சொன்னபிறகு இயக்குநரின் எந்த டிபார்ட்மென்டிலும் தலையிடமாட்டார்.22. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு ஆஜராவதில் அஜித்தை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அதேபோல் படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குநரிடம் சொல்லிவிட்டே கிளம்புவார்.23. புது இயக்குநர்கள் கதை சொல்லவந்தால், கதை கேட்பதற்கு முன்பே, ஒன்றிரண்டு முறை சந்திப்பார். தன் கேரக்டருடன் அந்த கேரக்டர் செட் ஆகுமா என்று ஜோடிபோட்டுப் பார்ப்பார். பிடிக்காவிட்டால் கட்.24. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சமையலறைக்குள் மேடம் ஷாலினி நுழைய முடியாது. பெற்றோர், பிள்ளைகள், ஷாலினி அனைவரும் இவரது சமையலைத்தான் சாப்பிட்டாகவேண்டும்.25. கெட் அப் போடுவதில் அவ்வளவு ஆர்வமில்லாத அஜித், ‘சிட்டிசன்’ படத்துக்காக பல கெட் அப்கள் போட்டு மெனக்கெட்டார். படம் தோல்வி. அதன் பிறகு கெட் அப் கதைகளோடு யார் வந்தாலும் கெட் அவுட் தான்..26. தனது படங்களின் வெற்றி, தோல்வி குறித்து எப்போதும் அலட்டிக்கொள்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படம் ரிலீஸாகிவிட்டால், அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்.27. இரவு 9 மணிக்கு மேல் தனது பட இயக்குநர்கள் உட்பட யாருக்கு போன் செய்வதாயிருந்தாலும், ‘இது நான் உங்களுக்கு போன் செய்ய உகந்த நேரமா?’ என்று ஆங்கிலத்தில் மெஸேஜ் அனுப்பிவிட்டே அழைப்பார்.28.படப்பிடிப்பு இல்லாத நேரங்களைப் பெரும்பாலும் தன் பிள்ளைகளோடு பெற்றோரோடு, மனைவியோடு செல்வழிப்பதற்கே முக்கியத்துவம் அளிப்பார். பார்ட்டி கலாசாரம் அஜித்துக்கு ஆகாது.29. படப்பிடிப்பின்போது சக நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களின் குடும்ப விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் அஜித், அவர்களை படப்பிடிப்புக்கு வரவழைக்கச்சொல்லி புகைப்படம் எடுத்துக்கொள்வார்.30. படப்பிடிப்பு தளங்களில் பிறரைப்பற்றி கிசுகிசு பேசுபவர்களை தனது பக்கத்தில் சேர்த்துக்கொள்ளவே மாட்டார். சக நடிகர்கள் குறித்து கிண்டல், அவதூறு செய்வதும் அஜித்துக்கு அலர்ஜி..31. அஜித்தின் ஆல்டைம் ஃபேவரிட் நடிகை ஸ்ரீதேவிதான். அவருடன் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் நடித்தபோது கிடைத்த நட்புதான் இன்று போனிகபூருக்கு அடுத்தடுத்து லாட்டரி அடிக்கிறது32. அஜித் நடித்த ஒரே இந்திப்படம், சந்தோஷ் சிவன் இயக்கத்தில் ஷாருக் கானுடன் ‘அசோகா’. அடுத்து இந்திப்பட வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் , ‘முஜ்கோ இன்ட்ரஸ்ட் நஹி ஹை’ என்று மறுத்துவிட்டார்.33. யுவனின் நெருங்கிய நண்பர் என்றாலும் இதுவரை நடித்துள்ள 61 படங்களில் அஜித்தின் ‘தொடரும்’என்கிற ஒரே ஒரு படத்துக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார், இளையராஜா.34. 2021 மார்ச் 7 அன்று 46ம் தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைஃபிள்ஸ் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித், தங்கப் பதக்கம் உள்பட ஆறு பதக்கங்களை வென்றார்.35. தோல்விப் படம் என்றாலும் அஜித்துக்கு மிகவும் பிடித்த படம் ‘முகவரி’. ‘நான் சினிமாவில் மனம் தளர்ந்து நின்ற ஒருநாள் என்றால், அது முகவரி தோல்வி அடைந்தநாள்தான்’என்பார் அஜித்.36. நேரடியான தயாரிப்பாளர்களாக இல்லாமல், பினாமிகளாக யார் படம் தயாரிக்க வந்தாலும் அவர்கள் எவ்வளவு பெரிய சம்பளத்தை ஆஃபர் செய்தாலும் என்கரேஜ் செய்யமாட்டார்.37. சம்பள விவகாரத்தில் கருப்பு, வெள்ளை கணக்கு வழக்கு அஜித்துக்கு அறவே செட் ஆகாது. தமிழில் அவருக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை, குறுக்கு வழி.38. இயக்குநர்கள் விவகாரத்திலும் யார் யாரை சிபாரிசு செய்தாலும் அவருக்கு அலர்ஜி. அந்த இயக்குநரின் முந்தைய படம் பிடித்திருக்கவேண்டும். முக்கியமாக அவருடைய பிஹேவியர் பிடிக்கவேண்டும். கதைக்கு மூன்றாவது இடம்தான்.39. அஜித்தின் ஃபேவரிட் ஹாலிவுட் நடிகர், ராபர்ட் டி நீரோ. அவரது ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் அமெரிக்கா’ படத்தின் இசை பிட் ஒன்றைத்தான் தனது போனின் ரிங் டோனாக நீண்டகாலம் வைத்திருந்தார்.40. தமிழில் பிடித்த நடிகர்கள் என்றால் ரஜினி, கமல் என்று இருவர் பெயரையும் கேப் விடாமல்தான் சொல்வார். இருவருக்கும் தீவிர ரசிகர்..41. படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் அஜித்தின் ஃபேவரிட் உடைகளின் நிறம் பெரும்பாலும் பிளாக்தான். தன்னைப்போலவே தனது உதவியாளர்களும் படு ஸ்மார்ட்டாக உடை அணிய வேண்டும் என்று நினைப்பார்.42. படத்தில் காஸ்ட்யூம் சேஞ்ச் செய்வதுபோல் அடிக்கடி மேனேஜர்களை மாற்றுகிறவர்களுக்கு மத்தியில், ஓர் அபூர்வ மனிதர், அஜித். சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த சுரேஷ் சந்திராதான் அஜீத்தின் ஒரே மற்றும் நிரந்தர மேனேஜர்.43. அஜித் தவறவிட்ட எட்டு ஹிட் படங்கள் என்று ஒரு பட்டியல் நடமாடுகிறது. அவை 8. கோ (2011) 7. நான் கடவுள் (2009) 6. கஜினி (2005) 5. காக்க காக்க (2003) 4. சாமி (2003) 3. ரன் (2002) 2. ஜெமினி (2002) 1. நந்தா (2001).44. சிவாஜியின் மேல் கொண்ட அபிமானத்தால், அவரது நிறுவனமான சிவாஜி புரடக்ஷன்ஸுக்கு சரணின் இயக்கத்தில் ‘அசல்’படத்தில் நடித்தார்.45. ‘அசல்’படத்தில் மட்டும்தான் கதை, திரைக்கதை, வசனம் உதவி -அஜித்குமார்’ என்று அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம் பெற்றிருந்தது..45. ‘அசல்’படத்தில் மட்டும்தான் கதை, திரைக்கதை, வசனம் உதவி -அஜித்குமார்’ என்று அவரது பெயர் டைட்டில் கார்டில் இடம் பெற்றிருந்தது.46. பான் இந்தியா படங்களுக்கு மற்ற நடிகர்கள் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ் ரசிகர்கள் தவிர யாரையும் டார்கெட் பண்ண வேண்டியதில்லை எனும் எண்ணம் கொண்டவர்.47. அதையொட்டியே போனிகபூர் சிபாரிசு செய்த மூன்றுக்கும் மேற்பட்ட இந்திப்படங்களையும், இந்தி இயக்குநர்களையும் தமிழ் இண்டஸ்ட்ரிக்கு அழைத்து வந்தார், அஜித்.48.இன்னும் பத்து வருடம் படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவிட்டு தன் 60 வயத்துக்குமேல் படங்களை இயக்கவேண்டும் என்கிற ஸ்ட்ராங்கான எண்ணம் அஜித்துக்கு உண்டு.49. இந்தப் பிறந்தநாள் அன்றும் சென்னையில் இருக்கமாட்டார், அஜித். உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தற்போது அவர் பயணித்துக்கொண்டிருப்பது நேபாள், பூடான் ஏரியாவில்.50. அஜித்தின் அடுத்த படம் ‘ஏ.கே 62’ குறித்து இன்னும் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள் சிலர். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் மே மாதத்தின் கடைசி வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.51. மே மாதம் தொடங்கி இந்தப் படத்துக்கு ஒவ்வொரு மாதமும் 15 நாட்கள் என்று 8X15 =120 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார், அஜித்.52. இந்தப் படத்தின் தலைப்பு, ஹீரோயின் மற்ற முக்கிய நடிகர், டெக்னீஷியன்கள் விவரம் அவரது பிறந்தநாளன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவிருக்கிறது.