சத்யராஜ் சினிமாவுக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பவும் தென்னிந்திய சினிமாக்களில் அவருக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது. பாகுபலியிலும் இருப்பார், லவ் டுடேயிலும் நடிப்பார். எந்த தலைமுறை இயக்குநர் என்றாலும் ஈகோ இல்லாமல் இறங்கி வேலை செய்வார். அவருக்காக உருவான கேரக்டரில் வேறு ஒரு நடிகரை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. கொள்கை அடிப்படையில் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், தன் தொழிலில் அதை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். இத்தனை வயதிலும் அவரைத்தேடி ஹீரோ வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ‘தீர்க்கதரிசி’. அந்தப் படம் பற்றியும், சினிமாப் பயணம் பற்றியும் சத்யராஜிடம் பேசினோம்....தீர்க்கதரிசி’ என்ன மாதிரியான படம்? “இனிமேல் நடக்கப் போகிற விஷயங்களை, முன்கூட்டியே கணிக்கக்கூடியவரைத் தான் ‘தீர்க்கதரிசி’னு சொல்வாங்க. இந்தப் படத்துல எனக்கு அப்படியொரு கேரக்டர். அதனாலத் தான் படத்துக்குத் தலைப்பாவும் அதையே வெச்சிட்டாங்க. போலீஸ் கன்ட்ரோல் ரூம் தான் படத்தின் கதைக்களம். முகம் தெரியாத யாரோ ஒருவர் தினமும் போன் பண்ணி, நடக்கப்போற விஷயங்களை முன்னாடியே சொல்றதா படத்தின் திரைக்கதை இருக்கும். அந்த முகம் தெரியாத நபர் நான் தான்னு படம் பார்க்குற ஆடியன்ஸுக்குத் தெரியும். ஆனா, படத்துல இருக்குற மத்த கேரக்டர்களுக்குத் தெரியாது.”.நீங்க பகுத்தறிவாதியாச்சே... இந்த மாதிரியான விஷயங்களை எப்படி ஒத்துக்கிட்டு நடிக்கிறீங்க? “படத்துல அதெல்லாம் பார்க்கவே முடியாது... (சிரிக்கிறார்). அப்படிப் பார்த்தா இதுவரைக்கும் நான் 10 படங்கள்ல தான் நடிச்சிருக்க முடியும். 250 படங்கள்ல நடிச்சிருக்கவே முடியாது. எம்.ஆர்.ராதா சாரே அப்படியெல்லாம் பார்த்தது கிடையாது.”இந்தப் படத்துல நடிக்க என்ன காரணம்? “தமிழ்நாட்டுல 2010 இல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையா வெச்சிக்கிட்டு இந்தப் படத்தை எடுத்திருக்காங்க இரட்டை இயக்குநர்களான மோகன் - சுந்தரபாண்டி . ஹரி இயக்குன ‘பூஜை’ படத்துல இருந்தே எனக்கு சுந்தர் சார் நல்ல பழக்கம். ‘உங்ககிட்ட கதை சொல்லணும் சார்’னு கேட்டார். ‘அப்புறம் பார்த்துக்கலாம்’னு நினைச்சேன். இப்ப ‘லா அண்ட் ஆர்டர்’னு ஒரு படம் நடிக்கிறேன். அந்தப் படத்தோட இயக்குநர் மகேஷ், ‘சுந்தர் சார் வெச்சிருக்குற கதை சூப்பர் சார். நீங்க நடிச்சா பிரமாதமா இருக்கும்’னு தினமும் ஷூட்டிங் ஸ்பாட்ல சொல்லிக்கிட்டே இருந்தார். ஒரு இயக்குநர், இன்னொரு இயக்குநரோட கதையை இந்த அளவுக்கு பாராட்டிச் சொல்றார்னா, நிச்சயமா அதுல ஏதோ ஒரு விஷயம் இருக்கும்னு தோணுச்சு. சுந்தர் சாரைக் கூப்பிட்டு கதை கேட்டேன். எனக்கும் பிடிச்சிருந்தது. தாஸ் என்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கேன்..என்கூட சேர்ந்து அஜ்மல், துஷ்யந்த், ஜெய்வந்த்னு மூணு ஹீரோக்கள் நடிச்சிருக்காங்க. ஆனா, என்னைத் தவிர யாருக்குமே ஜோடி கிடையாது. எனக்கு மட்டும் பெரிய மனசு பண்ணி இயக்குநர்கள் ஜோடி கொடுத்துட்டாங்க. பூர்ணிமா பாக்யராஜ் எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராம், தேவதர்ஷினி, ஸ்ரீமன், இமான் அண்ணாச்சி, ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காங்க.”சிவாஜி, பிரபு... இப்போ துஷ்யந்த்னு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறைகளுடன் நடிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு? “துஷ்யந் மகனும் ஹீரோ ஆகுறதுக்காக நான் வெயிட் பண்றேன். அப்படின்னா 4 தலைமுறைகளுடன் நடிச்சவன்கிற பேர் எனக்குக் கிடைக்கும் (சிரிக்கிறார்). ஒவ்வொருத்தருடனும் நடிச்சது ஒவ்வொரு விதமான அனுபவம். அதுவும் நடிகர் திலகத்துடன் நடிச்சது எப்போதுமே மறக்க முடியாத அனுபவம்.”இரட்டை இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து... “எனக்கு எதுவும் வித்தியாசமா தெரியலை. ஏற்கெனவே தேவராஜ் - மோகன் கூட்டணில நடிச்சிருக்கேன். பாரதி - வாசு இயக்கத்துல ‘நீதியின் நிழல்’ படத்துல நடிச்சிருக்கேன். அவ்வளவு ஏன்... சமீபத்துல ரிலீஸான ‘வீட்ல விசேஷம்’ படமே ஆர்.ஜே. பாலாஜியும், சரவணனும் சேர்ந்து இயக்குனதுதானே... இரட்டை இயக்குநர்கள் கூட ஒர்க் பண்றது எனக்குப் புதுசு கிடையாது.”.45 வருட சினிமாப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன தோணுது? “ஜஸ்ட் லைக் தட் ஓடுன மாதிரி இருக்குது. இப்பத் தான் சினிமாவுக்குள்ள வந்த மாதிரி இருக்கு. ஆனா, அதுக்குள்ள 45 வருஷங்கள் ஓடிடுச்சு. சிவாஜி சார் கூட நடிக்கும்போது, அவரும் இப்படித்தான் சொன்னார். ‘இப்பதான் ‘பராசக்தி’ல நடிச்சது மாதிரி இருக்கு. அதுக்குள்ள 30 வருஷம் ஓடிடுச்சு’னு சிவாஜி சொன்னார். நீங்க சொன்னதுக்குப் பிறகு திரும்பிப் பார்த்தாதான் மிகப்பெரிய ட்ராவல்னு புரியுது.”இந்தி, தெலுங்குலயும் இவ்வளவு பிரபலமாவோம்னு நினைச்சுப் பார்த்திருக்கீங்களா? “இல்லவே இல்லை. தமிழ்ப் படங்கள்ல நடிக்கிறதுதான் என் விருப்பமா இருந்துச்சு. தமிழ்ப் படங்கள்ல எனக்குக் கிடைச்ச பிரபலம் தான், மற்ற மொழிகளுக்கு என்னைக் கொண்டுபோச்சு. இப்போ ரசூல் பூக்குட்டி இயக்கத்துல மலையாளத்துலயும் நடிக்கிறேன். தெலுங்குல ரெண்டு படங்கள், இந்தியில ஒரு படம் நடிச்சிக்கிட்டு இருக்கேன். தமிழ்ல சில படங்கள்ல நடிக்கிறேன்.”‘பாகுபலி’ படத்தோட சாயல் தெரியக்கூடாதுனுதான் ‘பொன்னியின் செல்வன்’ படத்துல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலையா? “ ‘நண்பன்’ படம் ரிலீஸான சமயத்துல விஜய், மகேஷ் பாபுவை வெச்சு ‘பொன்னியின் செல்வன்’ படம் எடுக்கப்போறதா சொன்னாங்கள்ல... சரத்குமார் நடிச்ச பழுவேட்டரையர் கேரக்டர்ல அப்போ நான் தான் நடிக்க வேண்டியதா இருந்துச்சு. இப்போ கால்ஷீட் பிரச்னையால நடிக்க முடியலை. மற்றபடி, ‘பாகுபலி’க்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது.”ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா நடிக்க வேண்டியது மிஸ் ஆயிடுச்சேனு வருத்தமா இருக்கா? “ஹா... ஹா... அப்படி எந்த வருத்தமும் இல்லை. சொல்லப்போனா, ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியா நடிக்குறதைவிட, ‘நடிகன்’ படத்துல மனோரமா ஆச்சிக்கு ஜோடியா நடிச்சதைத் தான் பெருமையா நினைக்குறேன்.”போலீஸ் கேரக்டரை ஹீரோயிசமா பயன்படுத்துன காலங்கள் போய், காவல்துறையோட இன்னொரு முகத்தைக் காட்டக்கூடிய ‘ரைட்டர்’, ‘விடுதலை’ மாதிரியான படங்கள் வெளிவருவதை எப்படிப் பார்க்குறீங்க? “எதார்த்தத்தை, எதார்த்தமாகவே சொல்லக்கூடிய களம் சினிமாவுல இன்னைக்கு அமைஞ்சிருக்கு. அது நல்ல விஷயம் தான். ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் கறுப்பு, வெள்ளைனு ரெண்டு குணங்களுமே இருக்கு. வெள்ளையை மட்டும் காண்பிச்சவங்க, இப்போ கறுப்பையும் காண்பிக்கிறாங்க. மலையாளத்துல இந்த மாதிரியான படங்கள் ஆரம்பத்துல இருந்தே வந்துக்கிட்டு இருக்கு. தமிழ்ல இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம்.”‘வில்லாதி வில்லன்’ படத்துக்குப் பிறகு அடுத்து படமே இயக்கவில்லையே... இனிமேலாவது இயக்குற ஐடியா இருக்கா? “நான் ஜாலியா இருக்கேன். என்னை ஏன் சிக்கல்ல மாட்டிவிடப் பார்க்குறீங்க... (சிரிக்கிறார்). எனக்காக இயக்குநர்கள் விதவிதமான கேரக்டர்களை யோசிக்கிறாங்க. இந்த வாய்ப்பு எல்லா நடிகர்களுக்கும் அமையாது. ஆனா, எனக்கு அமைஞ்சிருக்கு. அதை நல்லபடியா பயன்படுத்திக்கிட்டாலே போதும். வெளிநாட்டுக்காரன் யார்கிட்டயாவது கட்டப்பாவையும், ‘நண்பன்’ வைரஸையும் காண்பிச்சா, ரெண்டும் ஒரே ஆள்னு நம்ப மாட்டான். அப்படி நல்ல இயக்குநர்கள்கிட்ட நடிகன் சத்யராஜை ஒப்படைச்சா போதும்.”சமூகக் கருத்துகளை மேடையில பேசுற நீங்க, அரசியலுக்கு வராதது ஏன்? “நடிக்கிறதுதான் எனக்கு ஜாலியா இருக்குது. எனக்குத் தோணுகிற விஷயங்களை, என் மனசுக்கு ‘சரி’னு படுற விஷயங்களை மேடையில பேசுறேன். மத்தவங்களுக்கு அது சரியாவும் தெரியலாம்; தப்பாவும் தெரியலாம். நடிப்புங்கிறது ஒரு பிசினஸ்தான். அதுக்கு பாதகம் வந்தாலும் பரவாயில்லைனு மேடைகள்ல பேசுறேன். அந்த அளவுல மனத்திருப்தி கிடைக்குது, அது போதும்.”இத்தனை வருட சினிமா அனுபவத்துல, இதைப் பண்ணக்கூடாதுனு நீங்க நினைக்கிற விஷயம் எது? “ஓவரா ஆராய்ச்சி பண்ணி, கதை கேட்டு நடிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்... ஹா... ஹா... கொஞ்சம் ஜெயிச்ச குதிரை மேல ஏறி சவாரி பண்ணா போதும். ஏன்னா, ஹீரோவா நான் மிஸ் பண்ண பல படங்கள், ‘ஓஹோ’னு ஓடியிருக்கு. அதைப் பார்த்து, நெஞ்சுல அடிச்சிக்கிட்டு அழுதுருக்கேன். நான் எடுத்த தவறான முடிவுகள் தான் அதுக்குக் காரணம். அப்படிப்பட்ட முடிவுகளை இனிமே எடுக்க மாட்டேன்.”- சி.காவேரி மாணிக்கம்