மெஜிஷியன் பாக்கியநாத்,தன் மகள் விதுபாலாவுடன்(இவரும் நடிகைதான்) தியாகராய நகரில் இருக்கும் நடிகை லட்சுமியின் தாயார் வீட்டிற்கு வருகிறார்.பாக்கியநாத்: குட் ஈவினிங் மேடம்.லட்சுமி: வணக்கம். வாங்க, உட்காருங்கள்.பா: உடம்பு சரியில்லீங்களா?ல: நான்கு நாட்களாக ‘கோல்டா’க இருக்கிறது. அதோடு ஷூட்டிங் வேறு.பா: இவள் என்னுடைய பெண் விதுபாலா.ல: ஓ. நான் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே. ஷி இஸ் எ குட் டான்சர். ‘வெள்ளி விழா’வில் ஆக்ட் பண்ணியிருக்கிறார்கள், இல்லையா?பா: எஸ். ஒன்றிரண்டு மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறாள்.ல: (விதுபாலாவின் பக்கம் திரும்பி) இப்போ என்ன பண்றீங்க?விது: பி.ஏ. படிக்கிறேன். மேலே படித்து பி.ஹெச்டி., பண்ணவேண்டுமென்று ஆசை. அதனால்தான் இப்போது அசெயின்மென்டு வந்தாலும் ஒப்புக்கொள்வதில்லை.ல: நோ.. நோ.. ஐ டோன்ட் அக்ரி. தங்களைப் போல நல்ல உயரம், ஃபேஸ்கட்- அழகு உடையவர்கள்-- டான்ஸ் தெரிந்தவர்கள் இந்தத் துறைக்கு வரத்தான் வேண்டும். பி.ஹெச்டி., பண்ண நிறையப் பேர் இருக்கிறார்கள் இல்லையா?பா: நீங்கள் டிராமாவில் நடித்துக் கொண்டிருந்தீர்களே… அதைவிட்டுவிட்டு சினி ஃபீல்டுக்கு வந்தபோது உங்கள் ஃபீலிங் எப்படி இருந்தது?ல: ‘த்ரில்லிங்’காக இருந்தது என்பதைத் தவிர, டிபரன்ஷியேட் பண்ணிச் சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால், அப்போது எதையுமே நான் உணரவில்லை. ஐ வாஸ் ஸோ யங்- பதினாறு வயசுதானே.பா: நீங்க முதலிலே நடித்த டிராமா?.ல: ஃபஸ்ட் ப்ளே- ‘சோ’ நடத்திய ‘மனம் ஒரு குரங்கு’ என்கிற நாடகம்தான்.பா: நடித்த படம்?ல: நான் நடித்த முதல் படம் ஜீவனாம்சம். அதிலே ‘லலிதா’ என்கிற மிகவும் துடுக்கான பெண் ரோல். எனக்கு ரொம்பப் பிடிச்சது. முதல்லே நான் நடித்த காட்சி விஜயகுமாரியைப் பெண் பார்க்கப் போகிறது. ‘உனக்குப் பாடத் தெரியுமா?’ன்னு கேட்டுவிட்டு, பதிலுக்கு நானே, ‘ஓ உன்னைவிட நான் ரொம்ப நல்லாப் பாடுவேன்’னு ரொம்ப அலட்சியமாகச் சொல்லுவேன். பிரசாத் ஸ்டூடியோவிலேதான் படம் எடுத்தார்கள்.பா: டிராமாவில் ஆக்ட் பண்ணுவதற்கும் சினிமாவில் ஆக்ட் பண்ணுவதற்கும் என்ன வித்தியாசம்?ல: டிராமாவில் ஆக்ட் பண்ணுவதற்கு ரொம்ப டாலன்ட் வேண்டும். காரணம் த்ரீ அவர்ஸ் ப்ளே- ஸ்டேஜுக்கு வந்துவிட்டால் ஆடியன்ஸ் முன்னாடி கிருகிரு என்று டிராமா ஓடிவிடும். தப்புப் பண்ணினால் தப்புத்தான்-- டயலாக்கை மறந்துவிட்டால் மறந்ததுதான்- சினிமாவில் அப்படி இல்லையே. ஒரே டயலாக்கைப் பலமுறை சொல்லி- சரியாகச் சொல்ல வரவில்லை என்றால் டைரக்டர் சொல்லித் தருகிறார்-- அது சரியாக வருகிறபோது படம் எடுக்கிறார்கள். டிராமா அப்படி இல்லை. ரியல் எஃபீஷியன்சி இருந்தால்தான் டிராமாவில் பெயர் வாங்க முடியும்.பா: நீங்கள் என்னுடைய மேஜிக் ஷோக்களைப் பார்த்திருக்கிறீர்களா?ல: அநேகமாக எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். நான் மிஸ் பண்ணினது ஒன் ஆர் டூ தான் இருக்கும். டைம் போவது தெரியாது. அதுவும் ஸ்கெலிடன் வருகிற காட்சி என்றால் நான் பயந்துவிடுவேன் என்று, மம்மியும் என் கணவர் பாஸ்கரும் சேர்ந்து என் கண்களையே தம் கையினால் மறைத்துக்கொண்டு விடுவார்கள். காரணம் அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால்கூட நான் எப்படியாவது எட்டிப் பார்த்து விடுவேன். கண்ணைப் பொத்தினதும் மூச்சுத் திணறுகிற மாதிரி இருக்கும். பை த பை... நீங்க என்ன சாப்பிடுகிறீர்கள்? காபி சாப்பிடுகிறீர்களா, கூல்ட்ரிங்க் சாப்பிடுகிறீர்களா?பா: கூல் டிரிங்க் போதும்..(எல்லோருக்கும் கூல் ட்ரிங்க் கொண்டுவந்து தருகிறார்கள்.)பா: தாங்க் யூ. (கூல் ட்ரிங்க் பருகிக்கொண்டே) உங்களுக்கு எப்போது திருமணம் ஆயிற்று? லவ் மேரேஜா?ல: லவ் மேரேஜ்னு சொல்லலாம். என் கணவர் பாஸ்கர் ’67 மே மாதம் என்னை முதலிலே ஒரு ஃபங்ஷன்லே மீட் பண்ணினார். என்னை விரும்புவதாக அவர் தன் பெற்றோரிடம் சொன்னதும் அவர்களும் என் தாயாரும் கலந்து பேசி, எங்கள் திருமணத்தை முடிவு பண்ணினார்கள். ’67 அக்டோபர்லே என்கேஜ்மென்ட் நடந்தது. ஆனால் 1970 ஜூலை மாதம் எட்டாம் தேதி ‘ஹேமமாலினி’யில் கல்யாணம் நடந்தது. அந்த மூன்று வருட இடைக்காலத்திலே நாங்க ‘லவ்’ பண்ணினோம்; இன்ஃபாக்ட் நான் பிலிம்லே ஆக்ட் பண்ண ஆரம்பித்ததே திருமணம் நிச்சயமான பிறகுதான்... சின்ன வயதிலே இருந்தே மேஜிக்கில் உங்களுக்கு ஒரு இன்ட்டரஸ்ட்டா?.பா: எஸ். என்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே நான் மேஜிக் பண்ண ஆரம்பித்தேன். பிறகு அதை- டெவலப் செய்துகொண்டேன்.ல: நீங்கள் காலேஜ் லெக்சரராக இருந்தீர்கள் இல்லையா?பா: சிறிது காலம் பச்சையப்பன், மலபார் க்றிஸ்டியன் காலேஜிலே இங்கிலீஷ் லெக்சரராக இருந்தேன். என்னுடைய தகப்பனார் சிவராம மேனன் கொச்சின் மினிஸ்டராக இருந்தார். மேஜிக் சம்பந்தமாக இயற்கையிலேயே என்னிடம் அமைந்திருந்த இன்ட்ரஸ்ட்டை வளர்ப்பதற்கு, நிறைய ஃபாரின் புக்ஸ் எல்லாம் வாங்கித் தந்திருக்கிறார். நான் காலேஜில் படிக்கிறபோதே பல பர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறேன்.ல: உங்களுடைய நேடிவ் ப்ளேஸ்?பா: திருச்சூர்.ல: ஒய்ஃப் சைட்?பா: பாலக்காடு. நீங்கள் அந்தப் பக்கம் போயிருக்கிறீர்களா?ல: மலம்புழா, கண்ணனூர் பக்கம் படப்பிடிப்புக்காகப் போயிருக்கிறேன். உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?பா: ஒரு கேர்ள்- ஒரு பாய்தான்! அவன் பூனா இன்ஸ்ட்யூட்டில் மோஷன் பிக்சர் போட்டோகிராஃபி (திரைப்பட ஒளிப்பதிவாளர்) பயிற்சி பெறுகிறான்.ல: ‘பர்னிங்க் கேர்ள் அலைவ்’ ஷோ ஒன்று காட்டுகிறீர்களே, அதிலே ரிஸ்க் இல்லையா?பா: இருக்கத்தான் செய்கிறது. அது முடிகிற வரையில் எங்களுக்கெல்லாம் ஒரே திகிலாக இருக்கும். எக்யுப்மென்ட்ஸ் கொண்டு போகிறோம் இல்லையா- டிரான்ஸ்போர்ட்டிலே சிலவற்றின் ஸ்க்ரூ கழண்டிருக்கலாம். போனவுடன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கச் சில சமயங்களில் நேரம் இருப்பதில்லை. ஒருசமயம் மயிலாப்பூர் ஆர்.ஆர். சபாவிலே ஒரு பர்ஃபாமன்ஸ் கொடுத்தேன். அந்தப் பெண்ணைப் படுக்க வைத்து, கிரசின் ஊற்றி எரிய விட்டுவிட்டு நான் லெக்சர் அடித்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று ஒரு முனகல். நான் கவனிக்கவில்லை. அந்த எக்யுப்மென்டிலே ஒரு சின்ன மெகானிகல் மிஸ்டேக். மிஸ்கால்குலேஷன்-- நல்லவேளை- என் பையன் மது கவனித்திருக்கிறான். உடனே திரையை விட்டுவிட்டு ஒரு படுதாவைப் போட்டு அந்தப் பெண்ணைச் சுருட்டி அவள் உயிரைக் காப்பாற்றினான். ஒரு செகண்டு தப்பிப் போயிருந்தால்கூட அவள் இறந்திருக்க வேண்டும். உடம்பெல்லாம் பொசுங்கி-- மூன்று மாதம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றாள்.ல: மை காட்! இப்போது அந்தப் பெண்.....பா: உயிரோடுதான் இருக்கிறாள். பெயர் மைதிலி. தைரியமாக இப்பவும் அந்த ஆக்டில் அவள்தான் நடிக்கிறாள். நான் அதை மிகவும் பாராட்டுகிறேன். ஆனால் அன்றைக்கு மறுநாளே கமிஷனர் ஆஃப் போலீஸ் பேப்பரைப் பார்த்துவிட்டு அந்த ஷோவே நடத்தக்கூடாது என்று தடை செய்ய ஆரம்பித்தார். அஃப்கோர்ஸ்- எனது தம்பி ஒரு பத்திரிகை ஆசிரியர். பத்திரிகையில் வந்ததுபோல எதுவும் ஆக்சிடென்ட் நடக்கவில்லை, அது ஒரு பப்ளிசிடி ஸ்டன்ட் என்று என்னவோ சொல்லிச் சமாளித்து விட்டான்.ல: சினி ஃபீல்டில் நீங்கள் ஏதாவது மேஜிக் செய்திருக்கிறீர்களா?பா: படத்தில் இல்லை; மனோகரின் மாலிக்காஃபூர் நாடகத்தில் எலும்புக் கூடுகள் நடனம் ஆடுவது போன்று ஒரு காட்சி வருகிறது. அந்தக் காட்சியை நான்தான் அமைத்தேன்.ல: ஓ. எஸ். ஐ ரிமம்பர். அந்த சீனைப் பார்க்கிறபோது அப்படியே நம்ம மூச்சுத் திணறுவது போல இருக்கும்.பா: மேஜர் சுந்தரராஜன் நாட கம் சலனம் என்பதில் அவர் ஸ்டேஜில் வந்து ஆடியன்ஸைப் பார்த்துக்கொண்டு உட்காருவார். அதே நேரம் வேறு ஒரு பக்கமிருந்து அவரே நடந்து வருவது போன்ற ஒரு காட்சி ரொம்ப சென்சேஷனாக இருக்கும். அதையும் நான் டைரக்ட் செய்திருக்கிறேன்-மேஜிக் என்பதே சாதாரணமாகச் சாதனங்களை வைத்துக்கொண்டு அவை மூலம் மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகத் தெரியும் அசாதாரண நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிப்பதுதான்.