(சென்ற இதழ் தொடர்ச்சி)(சென்ற இதழ் தொடர்ச்சி)ஜெமினி கணேசன்: உங்கள் கணவருக்குத் தமிழ் தெரியுமா?உஷா உதுப்: தெரியும்.ஜானி உதுப்: நான் ஊட்டியில் படித்தேன். கொஞ்சம் கொஞ்சம் புரியும்.ஜெ: நீங்கள் எந்தப் படத்தில் பாடியிருக்கிறீர்கள்?உ : பாம்பே டாக்கீஸ் ‘அபர் சன்’ படத்தில் பாடியிருக்கிறேன். ‘பூரம் அவுர் பச்சிம்’ படத்தில் ஒரு இங்கிலீஷ் பாட்டுப் பாடியிருக்கிறேன்.ஜெ: ஹரே ராம ஹரே கிருஷ்ணா படத்தில்கூடப் பாடியிருக்கிறீர்களா?உ: எஸ். அதில் தம்மரதம் பாட்டின் லேடர் பகுதியை ஆஷா பான்ஸ்லேயுடன் பாடியிருக்கிறேன். இன்னும் பாம்பே டு கோவா படத்திலும் பாடியிருக்கிறேன். கிபி-தூப்-கபிசான் படத்தில் முழுப்பாடல் பாடியிருக்கிறேன்.(டிபன் ஆனவுடன் ஒவ்வொருவராக எழுந்து சென்று கையைக் கழுவிக் கொள்கிறார்கள்.)ஜெ: வாங்க. காப்பியை உள்ளே கொண்டுவருவார்கள். நாம் ஹாலில் போய் உட்கார்ந்து கொள்ளலாம்.(ஹாலில் மூடியிருந்த பியானோவைத் திறந்து இரண்டொரு ட்யூன் வாசிக்கிறார் உஷா உதுப்.).உ: சவுண்டு ப்யூடிஃபுலாக இருக்கிறது.(ஜெமினி கணேசன் அதில் தானும் சிறிது இசைக்கிறார். ஹாலில் போய் உட்கார்ந்தவுடன் காபி வருகிறது. காபி சாப்பிட்டுக் கொண்டே)உ: உங்கள் உண்மையான பெயர் என்ன?ஜெ: கணேஷ்!உ: ஜெமினி என்பது?ஜெ: அது, ஜெமினி ஸ்டூடியோவில் வேலைபார்த்ததால் ஒட்டிக்கொண்டது.உ: உங்கள் முழுப்பெயரே கணேஷ்தானா?ஜெ: ஓ சர்மாவா... (பெற்றோர் வைத்த பெயர்) அபி வாதயே வாசிஷ்ட மைத்ராவர்ண... .. ஸ்ரீ கணபதி சுப்பிரம்மண்ய சர்மா நாமாஹம் அஸ்மிபோ! (தங்கள் வழக்கப்படியான வந்தனத்தின் மூலம் பெயரைச் சொல்கிறார்)உ: ஓகோ! உங்களின் ஒரிஜினல் பேரு கணபதி சுப்ரமண்ய சர்மாவா?(ம்யூசிகல் வாய்சில் கலகலக்கச் சிரிக்கிறார்கள்.)ஜெ: நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். (உள்ளே போய் அதை எடுத்துக்கொண்டு வந்து படிக்கிறார்.) ஆர்ட்டிஸ்ட் என்பவர்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள்- மொழிக்கு அப்பாற்பட்டவர்கள். இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்-அவர்களுக்கே உரித்தான ஒன்லி ஒன் லாங்வேஜ்- லவ். அது உதட்டிலிருந்து வரவில்லை. உள்ளத்திலிருந்து வருவது. கேட்பதற்காகச் சொல்லப்படுவதில்லை. யார் சொல்கிறானோ அவன உணர்கிறான். ‘ஆர்ட்’ என்பது இதயம் சம்பந்தப்பட்டது. அதற்கு ஒரு மொழிதான் இருக்கமுடியும்.அதுதான் அன்பு. உலகத்திலுள்ள எல்லா விஷயங்களுக்கும் அந்த அன்புதான் காரணமாகிறது. அன்பை எவ்வளவுக்கெவ்வளவு குறையாமல் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது திரும்பி வரும் என்பதைப் புரிந்துகொண்டு கடவுளை நெருங்குகிறான் மனிதன். கடவுள் என்பவன் அளவிட முடியாத அன்பு கொண்டவன். (தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரையைப் படிக்கிறார்.)உ: நன்றாக இருக்கிறதே!(ஜெமினி கணேசனின் கடைசிப் பெண், கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.)ஜெ: கம் ஹியர் மை ஜுஜி.(அவள் மீண்டும் கதவைச் சாத்திக்கொண்டு ஓடிவிடுகிறாள்.) அவள்தான் இங்கே என்னுடைய நான்காவது பெண். ஜெயலட்சுமி என்று பெயர். நாங்கள் ஜுஜி என்று கூப்பிடுவோம். இவள்தான் என்னுடைய மூன்றாவது பெண் நாராயணி.ஜெ: நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். (உள்ளே போய் அதை எடுத்துக்கொண்டு வந்து படிக்கிறார்.) ஆர்ட்டிஸ்ட் என்பவர்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள்- மொழிக்கு அப்பாற்பட்டவர்கள். இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்-அவர்களுக்கே உரித்தான ஒன்லி ஒன் லாங்வேஜ்- லவ். அது உதட்டிலிருந்து வரவில்லை. உள்ளத்திலிருந்து வருவது. கேட்பதற்காகச் சொல்லப்படுவதில்லை. யார் சொல்கிறானோ அவன உணர்கிறான். ‘ஆர்ட்’ என்பது இதயம் சம்பந்தப்பட்டது. அதற்கு ஒரு மொழிதான் இருக்கமுடியும்.அதுதான் அன்பு. உலகத்திலுள்ள எல்லா விஷயங்களுக்கும் அந்த அன்புதான் காரணமாகிறது. அன்பை எவ்வளவுக்கெவ்வளவு குறையாமல் கொடுக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அது திரும்பி வரும் என்பதைப் புரிந்துகொண்டு கடவுளை நெருங்குகிறான் மனிதன். கடவுள் என்பவன் அளவிட முடியாத அன்பு கொண்டவன். (தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அக்கட்டுரையைப் படிக்கிறார்.)உ: நன்றாக இருக்கிறதே!(ஜெமினி கணேசனின் கடைசிப் பெண், கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்க்கிறாள்.)ஜெ: கம் ஹியர் மை ஜுஜி.(அவள் மீண்டும் கதவைச் சாத்திக்கொண்டு ஓடிவிடுகிறாள்.) அவள்தான் இங்கே என்னுடைய நான்காவது பெண். ஜெயலட்சுமி என்று பெயர். நாங்கள் ஜுஜி என்று கூப்பிடுவோம். இவள்தான் என்னுடைய மூன்றாவது பெண் நாராயணி..உ: நீ எங்கே படிக்கிறே?நா: ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்.உ: யாரைக் கேட்டாலும் ஸ்டெல்லாவிலே படிக்கிறதாகச் சொல் கிறார்கள். உங்க இரண்டாவது டாட்டருக்கு மேரேஜ் ஆகிவிட்டது இல்லையா?ஜெ: எஸ். தட் சன் இன் லா ஆல்ஸோ எ டாக்டர்.உ: நீங்கள் ஏன் டிராமாவில் நடிப்பதில்லை?ஜெ: ஏதாவது நிதி வசூல் சம்பந்தமாகப் போடப்படுற ஒன்றிரண்டு நாடகங்களில் நடிப்பது உண்டு. எனக்கே டிராமா ட்ரூப் வைத்துக்கொள்ள ஆசை. இன்னமும் செயல்படவில்லை. நீங்கள் ஏன் தமிழில் பாடக் கூடாது?உ: எனக்கு பாடத்தான் விருப்பம். உச்சரிப்பு எப்படி இருக்குமோ? பட் ஐ ஆம் கீன் ஆன் சிங்கிங் டமில்.ஜெ: நான் அடுத்த தமிழ்ப்படம் எடுக்கிறபோது உங்களையும் பாடச் சொல்வேன். நீங்கள் ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்.உ: முன்பே கூட சம்படி அப்ரோச்ட் மி. இப்போ நீங்கள் சமீபத்தில் நடித்த மலையாளப் படம் எது?ஜெ: புரொபஸர் என்ற படத்தில் நடித்தேன். அதில் நல்ல காரெக்டர். ரொம்ப நல்லவர்கள், உயர்ந்தவர்கள் மதிக்கப்படும் சிலர் கூட சில சமயங்களில் அற்ப ஆசைக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஆர்.எல். ஸ்டீவன்ஸன் எழுதிய டாக்டர் ஜெகில் அண்ட் மேன். அந்த ஜெகில், அற்ப ஆசைகள் தோன்றும்பொழுது மருந்து சாப்பிட்டுவிட்டுத் தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அக்காரியத்தில் ஈடுபடுவார். பிறகு ஜெகிலாக மாறிவிடுவார். இந்த அற்ப ஆசை அவரை எத்தகைய கஷ்டங்களுக்கு ஆளாக்குகிறது என்பதுதான் கதை. கிட்டத்தட்ட புரொபஸர் காரெக்டரும் அந்த மாதிரியானதுதான்!உ: நீங்க மீனாகுமாரியோட நடிச்சு நான் பார்த்திருக்கிறேன். ஷி இஸ் எ லவ்லி ஆக்ட்டரஸ்..ஜெ: ஐ அக்ரி. மிஸ்ஸியம்மா படத்தை மிஸ் மேரி என்று இந்தியில் எடுத்தபோது நான் மீனாகுமாரியுடன் ஆக்ட் பண்ணினேன். (உள்ளே போய் ஒரு படத்தைக் கொண்டு வருகிறார். ஜெமினிகணேஷ், சாவித்திரி, மீனாகுமாரி, ஆகிய மூவரும் உள்ள அந்தப் படத்தை உஷா வாங்கிப் பார்க்கிறார்.)ஜெ: எனக்கு அப்போது வயது 31. சாவித்திரிக்கு 21. மீனாகுமாரிக்கு 16.உ: நவ் வாட் இஸ் யுவர் ஏஜ்?ஜெ: ஃபார்ட்டிசிக்ஸ். உங்களுக்குப் பிடித்த படம் எது?உ: நன்றாக நடிக்கப்படுகிற கருத்துள்ள படம் எதுவுமே பிடிக்கும்.ஜெ: இந்தி நடிகர்கள்...உ: திலீப்குமார், ராஜ்கபூர் இரண்டுபேர் நடிப்புமே பிடிக்கும்.--ஜெ: எனக்கு என்ன என்ன பிடிக்கிறது என்று சொல்ல நினைக்கிறேனோ அவற்றையே நீங்களும் சொல்கிறீர்கள்.(ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொள்வதற்காகக் கொண்டு வைக்கிறார் செக்ரடரி.)உ: (பாக்கை எடுத்துப் போட்டுக்கொண்டு) இட் இஸ் அல்ரெடி லேட். இன்றைக்கு ம்யூசியம் தியேட்டரில் ப்ரோக்கிராம் இருக்கிறது.(பிறகு உஷா உதுப் தம் கணவருடன் விடைபெற்றுச் செல்கிறார்.)படங்கள்:ஞானம்.அடுத்துநடிகை லட்சுமி, மேஜிஷியன் பாக்யநாத்