துள்ளுவதோ இளமை இயக்குநர் கஸ்தூரிராஜா தான். இல்லை, செல்வராகவன் தான். இல்லை மகன் இயக்க, வியாபார நோக்கத்திற்காக தந்தை பெயரைப் போட்டுக் கொண்டார். இப்படியெல்லாம் கலவையான விமர்சனச் செய்திகள் இன்றளவும் உலவுகின்றன! சந்தேகமே இல்லை, கஸ்தூரிராஜாவால் துவங்கப்பட்டு, ஓரளவு படப்பிடிப்பும் நடத்தப்பட்டு, செல்வராகவன் இயக்கிய படம்தான் அது. கஸ்தூரிராஜா அப்பொழுது பிரபலமான இயக்குநர். விநியோகஸ்தர்கள் நம்பகத்திற்காக இயக்குநர் என்று அவர் பெயர் போடப்பட்டது. எது எப்படியோ, காதல் கொண்டேன் தான் செல்வராகவனின் நேரடி முதல் படம்...துள்ளுவதோ இளமை இயக்குநர் கஸ்தூரிராஜா தான். இல்லை, செல்வராகவன் தான். இல்லை மகன் இயக்க, வியாபார நோக்கத்திற்காக தந்தை பெயரைப் போட்டுக் கொண்டார். இப்படியெல்லாம் கலவையான விமர்சனச் செய்திகள் இன்றளவும் உலவுகின்றன! சந்தேகமே இல்லை, கஸ்தூரிராஜாவால் துவங்கப்பட்டு, ஓரளவு படப்பிடிப்பும் நடத்தப்பட்டு, செல்வராகவன் இயக்கிய படம்தான் அது. கஸ்தூரிராஜா அப்பொழுது பிரபலமான இயக்குநர். விநியோகஸ்தர்கள் நம்பகத்திற்காக இயக்குநர் என்று அவர் பெயர் போடப்பட்டது. எது எப்படியோ, காதல் கொண்டேன் தான் செல்வராகவனின் நேரடி முதல் படம்... செல்வராகவன் பிறந்தது 1975 இல், தனுஷ் பிறந்தது 1983 இல்... இருவருக்கும் எட்டு ஆண்டுகள் இடைவெளி! இந்தப் படத்திலே, செல்வராகவன் தன்னை ஓர் இயக்குனராக நிரூபிக்க வேண்டுமென்று போராடினாரா, அல்லது தனது தம்பி தனுசை நிரூபிக்கப் போராடினாரா என்று இன்று வரை பெற்ற தந்தை எனக்கே தெரியாது. அந்தப் படத்திலே நான் தயாரிப்பாளர் மட்டுமே. அண்ணனும் வெற்றி பெற்றார். அண்ணனால் தம்பியும் வெற்றி பெற்றார். இரு மகன்களாலும் தயாரிப்பாளர் என்கிற முறையில் தந்தையும் வெற்றி பெற்றார்..இத்தனைக்கும் செல்வராகவன் எந்த ஒரு பெரிய இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றி அனுபவங்களை சேகரித்துக் கொண்டவரில்லை. ஆங்கில நூல்கள் வாசித்ததன் அறிவு சேமிப்பு, தொழில்நுட்பத் தேடல்களின் தேர்ச்சி,எதையும் புதுமையாகவும், நவீனமாகவும் செய்ய வேண்டுமென்று உறுதி அவரை வெற்றிகரமான இயக்குநராக உருவாக்கியது. சிறுவன் தனுசுக்குள்ளே காதல் கொண்டேன் வினோத் என்னும் மிகக் கடுமையான கதாப்பாத்திரத்தைத் திணித்து ஊற வைத்தது செல்வராகவனின் சாதனை என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது...? இந்தப் படத்திலே செல்வராகவன் நடிக்க வைக்கவில்லை, தனுசாகவே அவதாரம் எடுத்து அவருக்குள்ளே புகுந்து கொண்டார். அதற்கு உதாரணமாக மூன்று காட்சிகள்...ஒன்று, சோனியா அகர்வாலைக் கடத்தி வைத்து தன்னுடைய காதலின் புனிதத்தை புரியவைக்க முயலும் காட்சி... இன்னொரு காட்சி, அந்த கூடைப் பந்து மைதானத்திலே நடக்கும் ஆக்ரோசமான சண்டைக் காட்சி... மூன்றாவது, தங்களை துரத்தி வந்த சோனியாவின் காதலனை தள்ளிவிட்டு “திவ்யா திவ்யா .. திவ்யா திவ்யா ..” என்று அடித் தொண்டையில் உறுமிக் கொண்டே யுவன் சங்கர் ராஜாவின் அற்புதமான இசைக்கு அசுரத் தனமாக வெறிபிடித்து நடனமாடும் காட்சி... எல்லாமே தனுசினுடைய அபார நடிப்பு தான், ஆனால் அது செல்வராகவனின் ஆவேச அவதாரமல்லவா? எத்தனை காலங்கள் ஆனாலும் மக்கள் மனதிலே மறக்காமல் நிலைக்கச் செய்யும் படி காட்சியமைப்பது இயக்குநரின் மாபெரும் வாழ்நாள் சாதனையாக அமைத்துவிடுகிறது. அந்த வகையிலே செல்வராகவனுக்கு இந்தப் படம் வாழ்நாள் சாதனைப் படம் தான்.சோனியா அகர்வால், சாதாரணப் பெண்ணா ? புத்தம் புதிய மலர் , வானத்து தேவதை. வசீகரக் கண்கள், வட்டமுகம். அவருடைய உடல் மொழி ,விழி மொழி ,நடை மொழி ,நடிப்பு மொழி அத்தனையுமே அந்தப் படத்தினுடைய மைய அஸ்திவாரம்...காதல் கொண்டேன் படத்திக்காக திவ்யாவை வலை விசித் தேடினோம்... கேரளா, ஹைதராபாத், பெங்களூர் , மும்பை என்று... இறுதியாக எங்களது வலையில் சிக்கியவர் தான் இந்த சோனியா. சுஷ்மா கவுல் என்கிற ஏஜெண்ட் இந்த அழகுக் கிளியை எங்கள் முன்னே தேர்வுக்காக பறக்க விட்டார் . சண்டிகரிலே பிறந்து, மும்பை வானிலே வட்ட மடித்துப் பறந்து கொண்டிருந்த அந்த வெண்ணிறத்துவண்ணத்துப் பூச்சியை வலை விசிப் பிடித்து , நீண்டகால ஒப்பந்தம் போட்டு சென்னைக்கு கடத்தி வந்தோம்..அதுதான் படத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தக் கண்கள் தான் படம் முழுக்க காதலை விதைத்தது. ”திவ்யா திவ்யா” என்று படம் பார்த்த அத்தனை ரசிகர்களையும் புலம்ப வைத்தது . அந்த அனுபவம் இல்லாத அழகுச் சிலையை செல்வா தான் செதுக்கிச் சிற்பமாக்கி வண்ணம் பூசி மெருகேற்றினார். சோனியா எங்கே நடித்தார்? அவரது விழிசைவுகளிலே கூட செல்வாதான் சுழன்றார். துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன் ஆகிய இரு படங்களிலும் தனுஷ் குழந்தைத்தனமான முகத்தையே பெற்றிருந்தார். இதன் பிறகு மெல்ல மெல்ல வாலிபப் பருவம் அவரது முகத்திலே படர்ந்திருந்தது. ஆகவே கதையோட்டத்திலே அழுத்தமான கதாபாத்திரமாக தனுசுக்கு அமைக்க முடிவெடுத்தார் செல்வா. புதுப்பேட்டை படத்தின் அத்தனை காட்சிகளும் தனுசினுடைய முழுத்திறமையும் வாலிப முத்திரைகளும் பதிவு பெற்ற படமாக அமைந்தது. தனுஷ் வளர்ந்து வளர்ந்து மொருகேற,செல்வா அவருடைய உடல் மொழிக்கும் , முகப்பொலிவிற்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பிற்கும் தகுந்தாற்போல கதைகளை உருவாக்கினர். தனுஷை செதுக்கி செதுக்கிஒரு முழு கதாநாயகனுக்கு வேண்டிய அத்தனை தகுதிகளோடும் திறமைகளோடும் திரையிலே பதித்தவர் செல்வராகவன் என்னும் தகப்பன் உருவில் நின்ற அண்ணன் தான் . தனுஷின் திறமைகளை, பட்டை தீட்டி முழு கதாகாநாயக அந்தஸ்தைக் கொடுத்தவர் செல்வராகவன் தான். செல்வராகவனின் இத்தனை பணிக்கும் சகோதரத் தோழன் போல கைகோர்த்து தனது கந்தர்வ இசையினால் உருக்கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா தான். செல்வாவின் அடி மனசுக்குள்ளே வேர் போட்டுப் புகுந்து அவருடைய எண்ணப் பதிவுகளை ஆராய்ந்து , தன் இசையின் மூலம் செல்வாவின், உருவாக்கத்திற்கு உயிர்க் காற்று கொடுத்தவர் யுவன் சங்கர் ராஜா. தனுசினுடைய வளர்ச்சியிலே பாதிபங்கு யுவனுக் சொந்தம். செல்வா ,யுவன் ,தனுஷ் இந்த மூவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல இரத்த பாசம் மீறாமல்செயல்பட்டதே இந்தக் கூட்டணியின் சரியாத வெற்றிக்குக் காரணம். .என் மகன் செல்வராகவன், தன்னுடைய இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் தானே தக்க வைத்துக் கொண்டு நிலை பெற்றிருக்கிறார். அவரது தம்பி தனுஷ் தன் திறமை வளர்த்து வளர்த்து , எழுத்து,இயக்கம் ,பாடலாசிரியர் ,பாடகர் ,தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை விதைத்து வெற்றி கண்டு நிற்கிறார். என்றாலும் இவை அத்தனையும் என் கிராமிய மண் கொடுத்த வளமாகும். முதல் முதலாக அந்த ஆணிவேரிலே ஈரப்பதத்தைப் பாச்சியாது , தமிழ் மண்ணின் ஈர வாசனை தான் என்பது உண்மையாகும்.