ஒரு நகை கடையில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு அதிர்ஷ்ட குலுக்கலில் பத்து லட்ச ரூபாய் சொகுசு கார் பரிசாகக் கிடைக்கிறது. அந்தக் காருக்கு ஐஸ்வர்யா, அவரது அம்மா, அக்கா என ஒரு குரூப்பாகவும், அண்ணன், அவரது மனைவி, மச்சான் என மற்றொரு குரூப்பாகவும் உரிமை கொண்டாட, பிரச்சனை போலீசுக்குப் போகிறது. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரோ, ஐஸ்வர்யாவுக்கு சாதகமாக பிரச்னையை முடித்துக் குடுக்க அவரை படுக்கைக்கு அழைக்கிறார். கடைசியில் கார் யாருக்குப் போனது? சொப்பன சுந்தரி ஐஸ்வர்யா ராஜேஷை அந்த இன்ஸ்பெக்டர் தன் ஆசைக்கு இணங்க வைத்தாரா? என்பதுதான் கதை…ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா சங்கர், கருணாகரன், லக்ஷ்மி பிரியா, ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி என அனவரும் வழக்கம் போல் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஒளிப்பதிவு ஓகே. இசை ரொம்ப சுமார். காட்சி அமைப்புகள் முழுக்க காமெடியாகவும் இல்லாமல், சீரியஸாகவும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக இருப்பதால் பார்க்க முடிகிறதே தவிர, நம்மை ஈர்க்கவில்லை. நடு ராத்திரியில் ஒரு வீட்டில் போய் ஐஸ்வர்யா நகைக்கான பில்லை திருடும் காட்சி, அம்மாவும் இரண்டு மகள்களும் சேர்ந்து இன்ஸ்பெக்டரை உருட்டி எடுக்கும் கிளைமேக்ஸ் ஃபைட்… நகைச்சுவை என்றாலும் சிறுபிள்ளைத்தனமாக தெரிகிறது. இன்ஸ்பெக்டரை ஐஸ்வர்யாவே ரேப் பண்ண சொல்லி வீடியோ எடுப்பதெல்லாம் ஓவர்… கடுமையான பண பிரச்சனையில் இருக்கும் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு சொகுசு கார் இலவசமாக கிடைத்தால் என்ன நடக்கும் என்பதை யதார்த்தமாக, நகைச்சுவையாக சொல்லியிருந்தால் படம் தேறியிருக்கும். ஆனால் அவர்களை வைத்து மசாலாத்தனமாக டபுள் கேம் ஆடி வெற்றியை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ்.