அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருந்த ரங்கு, சத்தமாய்ச் சொன்னான்.அவன் வலது கையில் ஊசியும் நூலும்.இடதுகை விரல்கள் அவளின் ஒரு சான் அகல டிராயரின் எலாஸ்டிக் பட்டைக்குள் இருந்தன. அவன் விரல்கள் இழுக்கும்போது ஜில்லியின் தொப்புள் எட்டிப் பார்த்தது.ஜில்லியை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த அவன் உதடுகளில் ஏகமாய் ஜொள்ளு.“டேய்... இதவிட எப்படிடா அகட்றது..?’’ அவள் எரிச்சலாகச் சொன்னாலும் அவன் சொன்னபடியே செய்தாள்.ரங்கு சரசரவென லாகவமாக விரல்களை இயக்கி, அவளின் ஜிகுஜிகுத்த கால் டிராயரை இறுக்கினான்.அவளோ ‘மயிலாடுதுறை இபா’ வின் ‘வானம்பாடிக் கவிதைகள்’ தொகுப்பை எந்தவித சலனமும் இன்றி படித்துக் கொண்டிருந்தாள்.சுற்றிலும் யூனிட் ஆட்கள். டைரக்டர், அசிஸ்டென்ட் டைரக்டர்கள். லைட்மேன், வாட்டர் பாய்...யாரைப் பற்றியும் கவலைப்-படவில்லை அவள். படித்துக்-கொண்டிருந்தாள்.இப்போதெல்லாம் தன்னை அநாவசியமாக மொய்க்கும் ஆசாமிகளிடம் இருந்து தப்பிக்க... அவள் செல்போனைப் பயன்படுத்துவதில்லை. புத்தகங்களைக் கையில் எடுத்துக்-கொள்கிறாள்.‘சிறகு கிடைத்தவுடன்பறப்பது அல்ல நட்புசிலுவை கிடைத்தாலும்சுமப்பதுதான் நட்பு’‘அட..!’வியந்து படித்துக் கொண்டிருக்கும்போதே, ரங்கு “அக்கா டைட்டாக்கிட்டேங்கா’’ என்றவன் வாயைத் திறந்து, அதிகமான நூலை பல்லால் கடித்துத் துப்பினான்.ஊசியை விடுவித்துக்கொண்டு எழுந்தவனிடம்,”இதையும் கொஞ்சம் பாரு’’ என்றாள்.அவன், அவளின் மேல் கச்சையின் நாடாவை பட் பட் என இழுக்க அது ‘சட் சட்’டென சத்தம் போட்டது.“வலிக்குதுடா...’’“ஸாரிக்கா’’ என்ற ரங்கு, கப்பின் கீழ்ப் பகுதியில் ஊசி நூல் விட்டு, லாகவமாக இறுக்கினான்.“முடிஞ்சுதாம்மா..?’’என முந்தைய ஷூட்களை டிஜிடலில் ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் ஜாய்மோன் கத்தினார்.“ஓகே சார்...’’ என்ற ஜில்லு, ரங்கு சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், ‘நங்’ என்று அவன் தலையில் கொட்டினாள்.“அக்கா... இது எதுக்குக்கா..?’’“அவர் கூப்பிடுறது மாதிரி லேட் பண்ணிட்டியேடா’’ என்றவள், கவிதைப்புத்தகத்தை அவனிடம் அவசரம் அவசரமாகத் திணித்தாள்.அடுத்த சில நிமிடங்களில்...“ஆன் லைட்ஸ்...’’“ஸ்டார்ட்கேமரா...’’.“சவுண்ட்...’’பலவித கட்டளைகள்.ஜில்லியின் அட்டகாசமான கவர்ச்சி நடனம் –‘‘ஒன்...டூ...த்ரீ...’’ஆரம்பித்துவிட்டது.ரங்கு வலித்த மண்டையைத் தடவிக்கொண்டே திரும்பியபோது அவனைப் பார்த்தான். அதிர்ந்தான்.“டேய்... எப்படிடா உள்ளே நுழைஞ்சே?’’இவ்வளவு செக்யூரிட்டி இருக்கும்போது எப்படி வந்தான், இவன்?“நல்லா இருக்கியா தம்பி? ஞாபகம் இருக்கா? வேணு’’ என்றான், தன் காவிப்பல் காட்டிச் சிரித்து. அழுக்கு பேன்ட். கறை படிந்த அரைக்கை சட்டை.“தெரியும்டா... அதான் ஒவ்வொருவாட்டியும் சொல்லித் தொலைக்கிறியே... என்ன வேணும்..?’’ கடுப்பெல்லாம் திரட்டிக்கேட்டான்.“உனக்குத் தெரியாதா தம்பி...’’“எவ்வளவு வெச்சிருக்கே?’’“ரெண்டாயிரம்...“ஹலோ...இப்ப அவங்க ரேஞ்சே தனி.... காணாது!’’“தெரியும் தம்பி... அதுக்காக சும்மா பார்த்துட்டுப் போறதுக்கு இவ்வளவா..? ஆட்டோகிராப் கூட கேக்கலை...’’“போவியா... இந்த மாதிரி எத்தனை கிராமத்தானைப் பார்க்கிறேன்... நிறைய வெச்சிருப்பே கொடு’’“இதுக்கு மேல இல்ல தம்பி... தயை பண்ணுப்பா...’’.ஒரு ஐந்நூறு கைமாறியது.“சரி... சரி... கொஞ்சம் ஓரமா நில்லு...’’ஆனால், அவன் ஜில்லியிடம் சொல்லவே இல்லை.ஜில்லி பலமுறை கேரவானுக்கு வந்தாள். சென்றாள்.ரங்கு அவளிடம் சொல்லவே இல்லை.கடைசியில் பேக்அப் ஆகி வரும்போது... வேணுவே அவளை நோக்கி ஓடினான்.ரங்கு கொத்தாக அவன் காலரைப் பிடித்து இழுத்து பின்னால்விட்டான்.ஜில்லியும் அதைப் பார்க்கத்தான் செய்தாள்.கேரவான் கிளம்பிவிட்டது.வேணு பரிதாபமாகப் பார்த்தான்.அவனுக்கு நிழல் தந்து கொண்டிருந்த அந்தப் புளியமரம் மட்டும் கொஞ்சம் அனுதாபம் காட்டியதுபோல் தொப்பென்று ஒரு பழத்தை அவன் தோளில் போட்டது. ஜீவா காத்திருந்தான்.‘ராஸ்கல்’ அவனையே பார்த்துக் கொண்டிருந்தது.விட்டால் குரல்வளையை கடித்து கால்கிலோ சதையைச் சாப்பிட்டுவிடும்.ஜீவா அவ்வப்போது ஜில்லியைப் பார்க்க வருவான். ஆகவே, அவனுடைய மோப்ப தோஷம் கொஞ்சம் சலுகைக் காட்டியது. பொல்லாத அல்சேஷன்.“சீக்கிரம் வாம்மா...’’ கரடுமுரடான குரலில் மீன் மார்க்கெட் பெண்போல குரல்கொடுத்தாள் வேலம்மாள். ஜில்லியின் கேஷுவல் ஹெல்ப்பர்.ஜில்லி உள்ளேயிருந்து கத்தினாள். “கொஞ்சம் இரும்மா. நாப்கினோடவா வரமுடியும்? உன்னல்லாம் யாரும்மா இங்க வரச் சொன்னது. குரங்குப் பய ரங்கு எங்க போனான்?’’.“அவன் திருவிழாவுக்குப் போறான்னு நீதானேம்மா என்னை வரச் சொன்னே இரண்டு நாளைக்கு...’’“அந்த ரிப்போர்ட்டர பெறகு வரச்சொல்லு... டிவி ஸ்டேண்டுல கவர் இருக்கு... எடுத்துக் குடு...’’கவரை ஜீவாவே டிவி ஸ்டாண்டில் இருந்து எடுத்துக்-கொண்டு கிளம்பினான். வண்டிச் சாவி கீழே விழுந்துவிட குனிந்து எடுக்கையில் குபீர் என-ப் பாய்ந்தது ராஸ்கல்.அவன் கையைக் கவ்விவிட்டது. ‘ஆ’வென்று அலறினான் ஜீவா.“மேடம்... மேடம்...’’பெருங்குரலில் கத்தினான்.“விட்றா... விட்றா...’’ வேலம்-மாளின் அலறலும் வீணாகப் போனது.ஜிவ்வென்ற இனம்புரியாத ஒரு சுகந்த மணத்துட ன் அரை நிக்கருடன் ஓடிவந்தாள் ஜில்லி. மேலே ஒரு கண்ணாடி துணி மட்டும். அதைப் பார்த்த ஜீவா ஒரு கணம் கழண்டு விழுந்துவிட்டான்.ராஸ்கலின் வாயிலிருந்து சாவியையும் ஜீவாவின் கையையும் மீட்டாள்.“ராஸ்கல் இருக்குறப்ப தரையில எதையும் போடாதே... போட்டாலும் குனிஞ்சு எடுக்காதேன்னு உனக்கு எத்தனைவாட்டிப்பா எச்சரிக்கிறது?’’என்றவள் உள்ளே போய் ஒரு பெரிய வால்கிளாக்கை எடுத்துவந்து ஜீவாவிடம்கொடுத்தாள்.“வெச்சுக்கோ...’’“மேடம்... ஏற்கெனவே கொடுத்துட்டீங்க...’’“அட... பரவாயில்ல... ‘ஜில்லி நாய் கடிச்சிருச்சு’ன்னு எழுதிடாதே சரியா. அப்படியே எழுதினாலும் ‘ஜில்லி வீட்டு நாய் கடிச்சிருச்சு’ன்னு எழுது...’’ என்று கலகலவென்று சிரித்தபடியே, அவன் கன்னத்தில் செல்லமாய் படபடவென்று தட்டினாள். சிலிர்த்துப் போனான் ஜீவா.வெளியே வந்தவன் பைக்கில் வந்துகொண்டு இருந்த ரங்குவை பார்த்தான்..‘அடப்பாவி... கதை கந்தல்’ என்று நினைத்தவன், நண்டு வளைக்குள் நுழைவதுபோல் சரேலென்று ஒரு செல் ரிப்பேர் கடைக்குள் நுழைந்தான்.‘ஒருதலக் காதல தந்த... இந்த தறுதல மனசுக்குள் வந்த’ என்று ஸ்வேதா மோகன் தேனில் குழைத்த குரலில் அங்கு இருப்பவர்கள் காதிற்குள் தவழ்ந்து கொண்டிருந்தார்.காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை ஜீவாவுக்கு.ஏதோ விஷயமாக அதே கடைக்குள் நுழைந்தான் ரங்கு. இவனைப் பார்த்ததுதான் தாமதம். வந்த வேலையை மறந்து ஜீவாவைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோனான். ‘‘டேய் ஜீவா... எனக்கு நாலு வயசு சின்னவன் நீ. உன்னை ஜில்லிகிட்ட இழுத்துவிட்டதே நான்தான்... எனக்கே துரோகம் பண்றே?’’“துரோகமா நானா? என்ன-தலைவா சொல்றீங்க?’’“ம்... நல்லண்ண நாறுதுங்கிறேன்... போடா...’’“அய்யோ புரீல...’’ பூசாரிகிட்ட மாட்டிக்கிட்ட கடாவைப்போல் பரிதாபமாகப் பார்த்தான் ஜீவா.“பின்ன என்னடா... நான் அவளை பிராக்கெட் பண்ணிட்டு இருக்கேன்...’’“என்னது பிராக்கெட்டா... அவங்கள அக்கா அக்கான்னு சொல்றீங்க?’’பட்டென்று அவன் வாயில் அடித்தான் ரங்கு.‘‘முட்டாப்பாய மவனே... நீ கூட என்னை ‘தலைவா தலைவா’ங்கிறே... நான் உனக்குத் தலைவனாடா? போட்டுறுவேன் போட்டு... அதென்ன கையில் பார்சல்?’’ வெடுக்கென பிடுங்கினான்.அட வால் கிளாக்... உனக்கு எதுக்குடா? வேறெதுவும் கொடுத்தாளா?’’ஜீவாவின் சட்டை பேன்ட் பைகளுக்குள் கைவிட்டுத் துளாவினான். கவர் சிக்கியது..“கில்லாடிடா நீ... உனக்கு எதுக்குத் தனியா... அதான் நான் வைக்கிற பிரஸ் மீட்ல வாங்கித் தர்றேனே...’’ஆசையாய் வாங்கிய கோன் ஐஸ் கைதவறி மண்ணில் விழுந்த மாதிரி இருந்தது ஜீவாவுக்கு.“இத பாரு... ‘ஜில்லிக்கும் எனக்கும் ஒரு இது’ மாதிரி கிசுகிசு எழுது... சரியா. அவளோட ஜாதகமே எங்கிட்ட இருக்கு. நான் அவளுக்கு உதவியாளனாகவும் டிசைனராகவும் வந்த பிறகுதான் ஃபீல்டில் உச்சம் தொட்டாளாம். நான் ராசிக்காரனாம். சுனாமியே வந்தாலும் என்ன கட்டிப்-பிடிச்சுட்டுத்தான் சாவா... புரியுதா? எழுது. எழுது... அவ திருமணம் பற்றி அடுத்தவாரம் பிரஸ் மீட்... போ போ...’’“அடிக்காதீங்க அடிக்காதீங்க... அடிக்காதீங்க’’அலறல் சத்தம் கேட்டு பால்கனிக்கு வந்தாள் ஜில்லி.ராஸ்கல் பயங்கரமாகக் குரைத்தது. ஜீவா, வேணுவைத் தாக்கிக் கொண்டிருத்தான்.கீழே தள்ளி மிதித்தான். ‘’போடா... அவங்க ஊர்ல இல்லைன்னு எத்தனை வாட்டி சொல்றது?’’“ஜீவா... நிறுத்து ஜீவா...’’ கத்தினாள் ஜில்லி.ஒரு துணியை மேலே போட்டுக் கொண்டு தடதட வென இறங்கிவந்தாள்.“அவர ஏன் இந்த அடி அடிக்கிற... என் ரசிகன் அவர். இந்த மாதிரி ரசிகர்களால்தான் நான் இப்படிப் புகழுடன் இருக்கிறேன் ஜீவா. இந்த கார், பங்களா, பணம், பவிசு எல்லாம் இவங்க போட்ட பிச்சை... மன்னிப்புக் கேள்’’“அய்யோ அம்மா... அதெல்லாம் வேண்டாம்மா.. இன்னிக்கு இரண்டாம் ஞாயிறு... படப்பிடிப்பு இருக்காதுன்னு வந்தேன். உங்களுக்கு ‘கொல்லாம் பழம்’ பிடிக்கும்னு ஒரு பேட்டியில சொல்லி--யி--ருந்தீங்கம்மா... கொண்டு வந்திருக்கேன்.’’ஒரு பை நிறைய மணக்க மணக்க கொல்லாம் பழம்!“ஜீவா...பார்த்தியா? எவ்வளவோ தரம் சொன்னேன் உங்கிட்ட... முடிஞ்சுதா உன்னால?’’ஜீவா தலை கவிழ்ந்து இருந்தான்.“உன் பேர் என்னப்பா?’’“வேணும்மா...’’ என்றவன், ‘‘ஒரு செல்ஃபிமா..’’“ஓ...ஷுர்...’’ஜீவாவுக்குப் பற்றி எரிந்தது.அன்றிரவு ஜில்லிக்குத் தூக்கம் வரவில்லை.செல்லை எடுத்தாள். நம்பரைப் போட வீராச்சாமி என்றது டிஸ்ப்ளே.“ஏங்க... ஒவ்வொரு முறையும் ஒரு ரசிகன் மாதிரி நடிச்சி வந்து என்னைப் பார்க்கச்சொன்னேன்... அடி வாங்கவா சொன்னேன். இந்த ஜீவா தடியன்தான் நான் கோடம்பாக்கம் வந்தபோது எனக்கு அடைக்கலம் கொடுத்து ஒரு ஸ்டாராகவும் ஆக்கிவிட்டான். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் அவன்ட்ட கழுவுற மீன்ல நழுவுற மீனா இருக்கேன். எல்லாம் இரண்டு மூணு வருஷம்தான். வேண்டியத சேர்த்தாச்சு... பத்திரமா இருந்துக்குங்க...’’ எழுந்துபோய் பூஜை ரூமில் இருந்த தாலியைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டு படுக்கைக்குத் திரும்பினாள் ஜில்லி. -கே.ஜி.ஜவஹர்