கற்பகம் நடைப்பயிற்சி முடித்து விட்டு, நடை பாதையை ஒட்டி போடப்பட்டிருந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தாள். 58 வயதை நெருங்கி விட்ட அவளுக்கு, கொஞ்சம் மூச்சு வாங்கியது. உடம்பு நன்றாக வியர்க்க ஆரம்பித்தது. பார்க்கின் நடுவே ஓங்கி வளர்ந்து நின்ற கொன்றை மரம் காற்றை அள்ளி வீசியது. அது கற்பகத்தின் மேல் பட்டு, உடலில் பரவ, வியர்வை துளிகள் சில்லென்று மாறியது. அந்த அனுபவத்திற்காகவே அவள் அடிக்கடி அங்கு வர ஆரம்பித்தாள்.அவள் உட்கார்ந்திருந்த பெஞ்சிற்கு அடுத்த பெஞ்சில் சாம்பசிவம் வந்து உட்கார்ந்தார். வேஷ்ட்டி கட்டியிருந்தாலும் காலில் வாக்கிங் ஷூ அணிந்திருந்தார். அவருக்கு ஏறக்குறைய 65 வயதிருக்கும். கொஞ்சம் முன் வழுக்கை. மற்றபடி ஆள் திடகாத்திரமாக இருந்தார். அவரும், இப்படி நடைப் பயிற்சி முடித்து விட்டு, சிறிது நேரம் அந்த பெஞ்சில் உட்கார்ந்து தன்னை ஆசுவாச படுத்திக் கொள்வது வழக்கம்.கற்பகமும், சாம்பசிவமும் நடைப்பயிற்சியின் போது பார்த்திருக்கிறார்கள். ஆனால், பேசிக் கொண்டதில்லை. அன்றும், அவர்கள் பார்த்துக் கொண்டார்களே தவிர, எதுவும் பேசிக் கொள்ள வில்லை. சாம்பசிவம் போதுமான ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு, எழுந்து புறப்பட்டார். அப்போது, தான் கையில் கொண்டு வந்த வாட்டர் பாட்டிலை மறந்து வைத்து விட்டுப் போனார். அதை கவனித்த கற்பகம், சாம்பசிவத்தை திரும்பிப் பார்க்க, அவர் அதற்குள் வாசலருகே சென்றுவிட்டார். கற்பகம் அந்த பாட்டலை எடுத்துக் கொண்டு, வாசலை நோக்கி வேகமாக நடந்து வந்தாள். அவர் தனது ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்து விட்டார். கற்பகம் “சார்.. சார்..“ என்று கத்தினாள். சத்தம் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். கற்பகம் கையில் வைத்திருக்கும் பாட்டலை காட்டினாள். அதை கவனித்த அவர் “ஓ.. ஸாரி..“ என்று கூறி ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அவள் அருகே வந்தார். கற்பகம் அதை அவரிடம் கொடுக்க, பெற்றுக்கொண்டு “தாங்ஸ்..“ என்றார். பின் இருவரும் பிரிந்து சென்றார்கள்.மறுநாள், முதல்நாள் நடந்த சம்பவத்தைப் போலவே, இருவரும் நடை பயிற்சி முடித்து, அருகருகே வந்து உட்கார்ந்தார்கள். சாம்பசிவம்தான் அவளைப்பார்த்து முதலில் சிரித்தார். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.“இதுமாதிரி ஆறு பாட்டிலைத் தொலைச்சிருக்கேன். மனசு ஒரு இடத்துல இருக்குறது இல்ல… ஏதேதோ நினைப்பு… இதை மறந்துட்டுப் போயிடுவேன். நேத்து, நல்லவேளையா நீங்க பாத்து எடுத்துக் குடுத்தீங்க!““யாருக்குதான் பிரச்சனை இல்ல… எல்லாருக்கும் இருக்கு. நாமதான் கவனமா இருக்கணும்..““நடைப் பயிற்சியப்ப உங்களப் பக்குறது உண்டு.. வீடு பக்கத்துலயா?““ஆமாம்.. நயன்த் செக்டர்.““நான் டென்த் செக்டர்.““அப்படியா..?““எத்தனை குழந்தைங்க… என்ன பண்றாங்க?““ஒரே ஒரு பையன்தான். பேரு மகேஷ். ஐ டி கம்பெனில ஒர்க் பண்றான்.““கல்யாணம் ஆயிடுச்சா?““ஆயிடுச்சு.““மருமக என்ன பண்றா..?“ “கல்யாணத்துக்கு முன்னால வேலை பாத்துகிட்டு இருந்தா.. கல்யாணம் ஆனதும், மகேஷ் வேலைக்கு போக வேண்டாம்ன்னு சொல்லிட்டான்..““நல்ல விஷயம்!““உங்களுக்கு எத்தனை பசங்க?““ரெண்டுபேர். பொண்ணு ஒண்ணு, பையன் ஒண்ணு… பொண்ணு பேரு லில்லி. கல்யாணமாகி புருஷன் கூட டொரோன்டாவுல செட்டில் ஆயிட்டா. பையன் பேரு ரமேஷ். அவனும் கல்யாணம் ஆகி மனைவி கூட ஆஸ்திரேலியாவுல செட்டில் ஆயிட்டான்.““உங்க ஒய்ஃப்?““ரெண்டு புள்ளைங்க பொறந்ததுமே போய்ச் சேந்துட்டா. ரெண்டு பேரையும் கஷ்டப்பட்டு நான்தான் வளர்த்தேன். உங்க வீட்டுக்காரர்..?““பத்து வருஷமாச்சு. ஒரு நாள் நெஞ்சு வலிக்குதுன்னு சுருண்டு விழுந்தார்.. டாக்ஸி புடிச்சு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டு போறதுக்குள்ளாறயே உயிர் போயிடுச்சு… கற்பகம் கற்பகம்னு உயிரா இருப்பார். என்ன பண்றது… நான் குடுத்து வச்சது அவ்வளவுதான்!“அவள் கண்கள் லேசாகக் கலங்கின. அப்போது அவள் போன் ஒலித்தது. நம்பர் பார்த்தவள் “மருமகதான் கூப்பிடுறா..“ என்று கூறி போனை ஆன் பண்ணினாள். “கிளம்பிட்டேன்மா... இதோ வந்துடுறேன்.“ என்று சொல்லி, போனை கட் பண்ணினாள். சாம்பசிவத்திடம், “நாளைக்கு வருவீங்கதான..?“ எனக்கேட்டாள்.அவர் “வேற பொழுது போக்கு..“ என்றார். கற்பகத்திற்கு லேசாக சிரிப்பு வந்தது. “ஓகே.. நாளைக்குப் பார்க்கலாம்..“ என்று கூறிப் புறப்பட்டாள்.மறுநாள்.கற்பகம் நடைப் பயிற்சி முடித்து வந்து உட்கார்ந்தாள். சாம்பசிவம் கொஞ்சம் தாமதமாக வந்தார். கற்பகத்திடம் “டென் மினிட்ஸ்.. வாக் பண்ணிட்டு வந்துடுறேன்..“ என்று கூறி நடக்க ஆரம்பித்தார்.பத்து நிமிடத்தில் நடைப்பயிற்சி முடித்து வந்தவர், கொண்டுவந்த பையிலிருந்து ஒரு டிபன் பாக்ஸை வெளியே எடுத்தார். கற்பகத்திடம் கொடுத்தார் “என்னது..?““பால் கொழுக்கட்டை..!““யார் பண்ணது?““யார் பண்ணுவா… நான்தான் பண்ணேன்.“அவள் ஆச்சரியமாகப் பார்த்தாள்.“எனக்குத் தேவையானத நானே சமைச்சுக்குவேன். ஹோட்டல்ல சாப்பிடுறதில்ல… அவன் என்னத்த கலப்பான்னு சொல்ல முடியாது. எதாவது ஒண்ணுன்னா, கூட இருந்து பாத்துக்குறதுக்கு ஆள் கிடையாது..“அவள் ஸ்பூனால் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். அதன் சுவை அவளுக்குப் பிடித்திருந்தது. லேசாக சப்புக் கொட்டி சாப்பிட ஆரம்பித்தாள். அதை சாம்பசிவம் ரசித்தார் “இப்படி சாப்ட்டு ரொம்ப வருஷமாகுது..““இது சாதாரன பால் கொழுக்கட்டைதான… விருப்பப்படும்போது செஞ்சு சாப்பிடலாமே?“ “செஞ்சு சாப்பிடலாம்தான்... ஆனா அதுக்கான சூழ்நிலை வீட்டுல இல்ல..““என்ன சொல்றீங்க..?““என் மருமக அவ்வளவு நல்லவ இல்ல…“சாம்பசிவம் அதிர்ச்சியுடன் பார்த்தார்.“சதா சண்டை… என் புள்ள இருக்கும் போது ஒரு பேச்சு, அவன் இல்லாதப்ப ஒரு பேச்சு. சொந்த வீட்டுலயே அந்நிய மனுஷியா வாழ்ந்துகிட்டு இருக்கேன்.“சாம்பசிவம் கவலையுடன் பார்த்தார்.“எப்போ அந்த வீட்டுலேருந்து விடுதலை கிடைக்கும்னு இருக்கு..““கவலைப்படாதீங்க... எல்லா பிரச்னைக்கும் ஏதாவது ஒரு முடிவு இருக்கும். வாழ்க்கையில நான் மட்டும்தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன்னு நினைச்சேன்... நீங்க சொல்றதைப் பாத்தா, என் பிரச்னை பரவாயில்லன்னு தோனுது..“கற்பகம் அவரைப் புரியாமல் பார்த்தாள்.“எனக்கு சொந்தமான பத்து வீட்டுலேருந்து வாடகை வருது. அது தவிர, கவர்மென்ட்லேருந்து பென்ஷன் வருது. பணத்துக்குக் கஷ்டம் இல்ல. ஆனா நிம்மதி..? ரெண்டு புள்ளைங்க இருந்தும் அநாதையாதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். அவங்களுக்கு அவங்க குடும்பம் மாத்திரம்தான்.ஒரு நல்ல நாள்ல கூட போன் பண்ணி பேச மாட்டாங்க.. நாம பேசலாம்னா, இங்க பகலா இருந்தா அங்க இரவா இருக்கு. ஒரு ரிங் அடிச்சதுமே கட் பண்ணிடுவாங்க. திருப்பி கூப்பிடுவாங்கன்னு பார்த்தா, கூப்பிட மாட்டாங்க.. அப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த நாட்கள் எவ்வளவோ... மனசுதான் வலிக்கும். படுக்கைல விழுந்து ஓன்னு அழுவேன்..!“கற்பகம் அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள்.“சரி விடுங்க… உங்க மூடையும் நான் ஸ்பாயில் பண்றேன்..““அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. என்கிட்ட சொல்றதுனால உங்களுக்கு நிம்மதி கிடைக்குதுன்னா, தாராளமா சொல்லுங்க..!“கற்பகம் அந்த டிபன் பாக்ஸை அருகில் இருந்த பைப்பில் கழுவி சாம்பசிவம் கொண்டு வந்த பையில் வைத்துக் கொடுத்தாள். “கவலைப்படாதிங்க.. நீங்க சொன்னதுதான்.. எல்லா பிரச்சனைக்கும் எதாவது ஒரு முடிவு இருக்கும்… இதுக்கு மேல தாமதிச்சா என் மருமக ராத்திரி சாப்பாட்டை கட் பண்ணிடுவா.. நா வரேன்..“ என்று கூறி புறப்பட்டாள். அவளிடம் பேசியது, சாம்பசிவத்திற்கு மனம் லேசானது போலிருந்தது.அடுத்தடுத்த நாட்களிலும் அவர்கள் பார்க்கில் சந்தித்து பேசி ஒருவரைப்பற்றி மற்றவர் நன்கு தெரிந்துகொண்டார்கள். நன்றாக சமைக்கத் தெரிந்தும் மருமகள் சமையலறை உள்ளேயே விட மாட்டாள் என்று கற்பகம் சொல்ல, சாம்பசிவம் தான் யூ ட்யூபை பார்த்து சமைக்கக் கற்றுக் கொண்டதைச் சொன்னார்.அவர்கள் நட்பு, பார்க்கைத் தாண்டி அருகே இருந்த அம்மன் கோயில் வரை நீண்டது. சாமி கும்பிட்டு அங்கும் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள். மனசுக்கு நிம்மதி கிடைக்க ஆரம்பித்தது. ஒருநாள், சாம்பசிவம் மதிய சமையலில் ஈடுபட்டிருந்தார். அப்போது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்க, யாராக இருக்கும் என்ற யோசனையுடன் வந்து கதவை திறந்தார். வாசலில் கற்பகம் முகமெல்லாம் வெளிறி, தலையில் கட்டுடன் நின்றிருந்தாள். அதைப்பார்த்து பதறிப்போன அவர், அவளை உள்ளே அழைத்து வந்து உட்கார வைத்தார். “என்னாச்சு?“அவள் அழ ஆரம்பித்தாள்.“என்னங்க ஆச்சு..“ பதட்டத்துடன் கேட்டார்.“எதாவது அநாதை ஆசிரமம் இருந்தா என்னைச் சேர்த்துவிட்டுடுங்க..““பதட்டப்படாதீங்க.. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க..““என் மருமக கரண்டியால தலையில அடிச்சுட்டா. என் புள்ளையும் அவளுக்கு சப்போர்ட்டா, ’உங்களால என் நிம்மதி போச்சு… எங்கயாவது போய்த் தொலைங்க’ன்னு துரத்தி விட்டுட்டான்..“ என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். சாம்பசிவத்திற்கு என்ன செய்வது என்று புரிய வில்லை. அவள் மகன், மருமகள் மேல் ஆத்திரமாக வந்தது. அதை வெளிக்காட்டாது, “கொஞ்சம் அமைதியா இருங்க..“ என்று கூறி, அவளுக்கு காபி போட்டுக் கொடுத்தார். குடித்ததும் அவளுக்கு நிம்மதி வந்தது. “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா? நா உங்களுக்குத் தேவையானதையெல்லாம் செஞ்சு குடுத்துட்டு இங்க ஒரு ஓரமா இருந்துக்குறேன்..“ கற்பகம் கேட்க,சாம்பசிவம் திடுக்கிட்டார்.“நீங்க கேட்டதுல ஒண்ணும் தப்பு இல்ல. ஆனா, அது கேலி கூத்தா ஆயிடக் கூடாது. உங்க புள்ளையும் சரி, என் புள்ளைங்களும் சரி, நம்மை நிம்மதியா வாழவிடுவாங்கன்றீங்க? வார்த்தையாலயே நம்மைக் கேவலப் படுத்திடுவாங்க… அதனால, கொஞ்சம் வேற மாதிரி யோசிக்கலாம்.. கல்யாணம் பண்ணிகிட்டாதான் நாம சேர்ந்து வாழ முடியுமா… ஏன் ஃபிரண்ட்ஸா சேர்ந்து இருக்கக் கூடாதா? எனக்கு என் சொத்தையெல்லாம் வித்து ஒரு முதியோர் இல்லம் ஆரம்பிக்கணும்குற ஐடியா இருக்கு.. அதை சீக்கிரமாவே பண்ணிடுவேன்.. அந்த முதியோர் இல்லத்த நாம ரெண்டு பேருமே சேர்ந்து பார்த்துக்குவோம்.. உங்கள மாதிரி, என்னை மாதிரி புள்ளைங்களால அடிபட்டு வந்துசேருறவங்கள குறை இல்லாம நிம்மதியா பார்த்துக்குவோம்.. என்ன சொல்றீங்க..“கற்பகம் அவரை ஆச்சரியமாகப் பார்த்தாள்.“கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க… உங்களுக்கு அந்த வீட்டுலேருந்து நிச்சயம் விடுதலை கிடைச்சுடும்!““சரி..“ என்றவள், அவரைக் கையெடுத்து கும்பிட்டாள். - மணிபாரதி