அன்பொழுகிய நிமிடங்கள்அத்தனை எளிதாய் மறக்கும் சாத்தியம் என்னிடத்திலில்லை உன் ஞாபகங்களைக் கிளறியெடுக்கும் இந்த பிரபஞ்சத்தின் சுழற்சியை மட்டும் மாற்றிவிடும் பிரயத்தனத்தில் இறங்குகிறேன்..வலிகளோடு உறவாடி அதனை நாய்க்குட்டியைப் போல் பழக்கிவிட்டேன் மீண்டு வருவதாக இருப்பின் அத்தீர்மானத்தை நிறுத்திவைத்துக்கொள் ப்ரியத்தின் இணக்கம் இப்பிரிவுக்கு இனி சுமையானது..முடிவு எழுதப்படாமலே மெளனித்துக் கடக்கும் உன்மத்தக் காதலின் வலியானதுவழியற்றுப் போன கானகத்தில்தனித்தலையும் யானையின் மதமேறிய பித்துநிலை என்பதை மறவாதே ..இருட்டை அசைத்துப் பார்க்கும் சிறு ஒளி ஊடுருவலின் வலிமையைநீண்ட வெயில் பொழுதில் களமாடும் உன்னிடம் காட்டியது வாழ்வின் பிழையானத் தருணம் என்பதை மனமுவந்து ஒப்புக்கொள்கிறேன் . .பிரிவில் எந்த மாற்றமும் இல்லையெனநேசத்தை கைவிட்டஉன் பாவத்தின் பொருட்டுமனம் உதிர்ந்த இக்காலத்தைஏழாவது பருவமாகஇயற்கை தன் வானிலைக் குறிப்பேட்டில் இந்நேரம் எழுதிக் கொண்டிருக்கக்கூடும்.- நிறைந்தது-மதுரை சத்யா