எந்தவொரு புதிய விதியின் அறிமுகமும் சலசலப்போடு பின்னப்பட்ட வரவேற்பையோ, சர்ச்சைகளோடு பிணைக்கப்பட்ட எதிர்ப்பையோ சமயத்தில் இரண்டையுமோ ஒருங்கே பெறும். அந்த வகையில் ஐ.பி.எல்லில் அறிமுகப்படுத்தப்பட்ட `இம்பேக்ட் பிளேயர்' விதி இதுவரை இதில் எத்திசையில் சென்றுக்கொண்டிருக்கிறது?ஐ.சி.சி-யின் ஃபெயிலியர் மாடலான `Super Sub', பிக்பேஷ் லீக்கால் கைவிடப்பட்ட `X Factor' ஆகியவற்றின் தாக்கத்தால் பி.சி.சி.ஐ-யின் மூளையில் உதித்த விதிதான் `இம்பேக்ட் பிளேயர்'. ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே அணிகள் தங்களுடைய பிளேயிங் லெவனை மட்டுமன்றி, ஐந்து மாற்று வீரர்களையும் அறிவித்து, பின் ஆட்டத்தின் எந்தவொரு புள்ளியிலும் அவர்களில் ஒருவரை களத்திலுள்ள இன்னொருவருக்கு பதிலாகக் கொண்டு வரும் விதி. புதிதாகத் தோன்றினாலும் இது 11:11 என்ற கணக்கை மாற்றி 12 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான போட்டியாகவே கருத வேண்டும்.முதலில் பேட்டிங் என்றால் பேட்டிங் பலமுள்ள அணியோடு இறங்கிவிட்டு இரண்டாவது பாதியில் இன்னொரு பௌலரை இறக்குவது, முதலில் பௌலிங் என்றாலோ இதற்கு நேரெதிரான அணுகுமுறையைப் பின்பற்றுவது என்பதைத்தான் இத்தொடரில் அணிகள் பெரும்பாலும் செய்துள்ளன. சரி... பெயருக்கேற்றாற்போல் அவர்களால் அந்தளவிற்கு தாக்குதலை ஏற்படுத்த முடிந்ததா என்று பார்த்தால் இருவிதமான விளைவுகளுமே அரங்கேறின.பலமுறை சாம்பியனான சி.எஸ்.கே. நடப்பு சாம்பியனான குஜராத்துக்கு எதிரான போட்டியில் பேட் செய்து 179 என்ற இலக்கையும் நிர்ணயித்த பின் துஷார் தேஸ்பாண்டேவைக் கொண்டு வந்தது. `Same Side Goal' என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அன்றைக்கு அவர் காட்டிவிட்டார். மற்ற பௌலர்களது எக்கானமி 9-ஐ தாண்டாத பட்சத்தில் அவரது எக்கானமி 15.3-ஐ எட்டியது. வீசியது 3.2 ஓவர்கள்தான் ஆனால் அதிலேயே அரைசதம் அடித்து சி.எஸ்.கே-யின் தோல்வியை உறுதிப்படுத்தினார். காவலாளியே கொள்ளை சம்பவத்துக்கான திட்டத்தை வகுத்தது போன்ற நிகழ்வே இது..இதற்கு நேர்மாறாக நன்மையையும் தொடர் கண்டுற்றது. கே.கே.ஆர் Vs ஆர்.சி.பி. போட்டியில் வெங்கடேஷை விடுவித்து சுயாஸ் ஷர்மா என்ற ரகசிய ஆயுதத்தைக் களமிறக்க, சத்தமேயில்லாமல் கத்தியை ஆர்.சி.பி-யின் விலா எலும்புகளில் சொருகிவிட்டுச் சென்றுவிட்டார். ஆக காவலர்களே கொள்ளையர்கள் ஆவது அல்லது காவல் தெய்வங்களாவது என இருவேறு விளைவுகளையுமே இவ்விதி பார்த்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இதன் சாதக பாதகங்கள் என்னென்ன?காயமடைந்த வீரர்தான்... ஆனால் பேட்டிங், பௌலிங் என்ற இரண்டில் ஒன்றை மட்டும் அவரால் செய்ய முடியும் என்றால் அவர்களை அதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை இவ்விதி கொடுத்துள்ளது. ஆர்.சி.பி-யில் காயத்தால் அவதியுற்று வரும் டூ ப்ளஸ்ஸிஸ், ஹர்சல் படேல் முறையே பேட்டிங் மற்றும் பௌலிங் மட்டுமே செய்தனர். மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாகூட உடல்நலக்குறைவால் இரண்டாவது பாதியில் பேட்டிங்கின்போது மட்டும் வந்து ஆடினார். இம்பேக்ட் ப்ளேயர் விதி நடைமுறையில் இருந்திராவிட்டால் இதற்கு வாய்ப்பு இருந்திருக்காது.இரண்டாவதாக ப்யூஸ் சாவ்லா, அமித் மிஸ்ரா போன்ற சிறப்பாக ஃபீல்டிங் செய்ய முடியாதவர்களாகவோ, சற்றே வயது முதிர்ந்தவர்களாகவோ இருக்கும் வீரர்களால் அதிகபட்சமாக என்ன செய்ய முடியுமோ அதனை மட்டுமே செய்ய வைத்துக்கொள்வது போன்ற வாய்ப்புகளை இது உருவாக்கியது.மூன்றாவதாக சர்வதேச போட்டிகளில் ஆடாத அதிகமான உள்ளூர் வீரர்களுக்கு இது வாய்ப்புகளை வழங்கியது. அதேபோல் அதிகமான இந்திய வீரர்களும் ஆடவைக்கப்படுகின்றனர். பாதி தொடர் முடிந்துள்ள நிலையில் 91 இந்திய வீரர்கள் மட்டுமே கடந்தமுறை ஆடியிருந்தனர். இம்முறையோ அது 110-ஐ நெருங்குகிறது..சரி வரங்கள் மட்டும்தானா சாபங்கள் இல்லையா என்று பார்த்தால் இதனையே தூக்கிச் சாப்பிடும் அளவிலான பாதிப்புகளும் உண்டு. முதலாவதாக ஆல்ரவுண்டர்களை அரியவகை உயிரினங்களாக மாற்றிவிடும் அபாயத்தை இவ்விதி ஏற்படுத்தியுள்ளது. உடலின் ஒவ்வொரு பாகத்திற்குமான ஸ்பெஷலிஸ்டுகளிடம் குறைவான பணத்திலேயே மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியுமேயானால் பொது மருத்துவர்களை யார் பெரிதாக அண்டப் போகிறார்கள். இதே நிலைதான் இங்கேயும். பிரதான பேட்ஸ்மேனை பௌலர்களைக் கொண்டோ, பிரதான பௌலரை பேட்ஸ்மேனைக் கொண்டோ மாற்றிக் கொள்ளவே அணிகள் விரும்பின. `Jack Of all trades' ஆக வலம்வரும் ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் பிரதான வீரர்கள் இருக்கையில் அவர்களுக்கான தேவை என்ன?இதனால்தான் முந்தைய போட்டியில் லக்னோவுக்கு எதிராக நின்று போராடி பஞ்சாப்பை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருதைப் பெற்ற சிக்கந்தர் ரசா அடுத்த போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இருந்து மாற்றுவீரர்களுக்கான பட்டியலுக்கு நகர்த்தப்பட்டார். மிதாலி ராஜ், வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட பலரும் இதனை சுட்டிக் காட்டியிருந்தனர். பார்ட் டைம் பௌலர்களையும் இது வழக்கொழித்து விடும். ஆகமொத்தம் தொடர்ந்து பின்பற்றப்படின் பன்முக வீரர்கள் காணாமல் போய் ஒரே பரிமாணத்தில் பயணிக்கும் வீரர்களையே இது உருவாக்கும்.டெல்லியின் ப்ரித்வி ஷா அணி ஃபீல்டிங் செய்யும் போது வெளியே அமர்த்தப்பட்டு இரண்டாவது பாதியில் பேட்டிங் செய்ய மட்டும் அழைத்து வரப்பட்டார். இதனால் ரன் எடுக்க ஓடக் கூடத் திணறினார். ரவி சாஸ்திரி இதனை கடுமையாகவே சாடியிருந்தார். ப்ரித்வி ஷா போன்ற ஒரு இளம் வீரர் சோம்பலோடு வெளியே உட்கார வைக்கப்படுவது எவ்வகையில் நன்மை பயப்பது என்று கேட்டிருந்தார்.மூன்றாவதாக தங்களது பணி முடிந்தது என ஷிஃப்ட் போட்டு வேலை செய்யும் இடமல்ல களம். அணியின் ஓட்டத்தோடு தடையற பிணைக்கப்பட்டே இருந்தால்தான் தங்களை வீரர்கள் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இந்த On and Off கேம் எந்த வகையிலும் அணிக்கோ தனிப்பட்ட வீரருக்கோ நல்லதல்ல என்பதே பலரது வாதமாகவும் இருக்கிறது..நான்காவதாக முதலில் ஃபீல்டிங் செய்யும் அணிக்கு இது சற்றே அதிக ஆதரவைத் தருகிறது. பௌலர்களின் பணியை முடித்துவிட்டு வைக்கப்படும் இலக்குக்கு ஏற்றாற் போல் ஒரு வீரரை அவர்களால் களமிறக்க முடிகிறது. இரண்டாவது பாதியில் இது பௌலிங் செய்யும் அணியின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கிறது. காரணம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனை ஆட்டமிழக்க வைக்க வேண்டிய பளு கூடுகிறது. இதனை மனதில் நிறுத்தி இன்னமும் அதிக ரன்களை குவிக்க வேண்டுமென்ற அழுத்தமும் அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு முதல் பாதியில் தரப்படுகிறது.இறுதியாக பிளேயிங் லெவனுக்கு மட்டுமின்றி மாற்றுவீரர்களுக்கும் சேர்த்தே திட்டம் வகுக்க வேண்டியுள்ளது. கேப்டன்களுக்கும் பயிற்சியாளர்களுக்குமான சவால்களை இது சற்றே கூட்டியுள்ளது. பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவுகள் போலவே கால்பந்தாட்டத்தில் மேனேஜர்கள் வலம் வருவார்கள். அதைப் போலவே இங்கேயும் நெஹ்ரா உள்ளிட்ட சில பயிற்சியாளர்கள் பவனி வருகின்றனர். இதே அழுத்தம் களத்தில் ஆடும் வீரர்களிடமும் கடத்தப்படுவதுதான் வருத்தம்.ஆகமொத்தம் பெயருக்கோற்றாற்போல் மாபெரும் தாக்கத்தை இது ஏற்படுத்தவே இல்லை. மாறாக பலவகைகளிலும் ஆட்டத்தின் ஆத்மாவையே குலைப்பதிலேயே இவ்விதி அதிகமாக ஈடுபட்டிருந்தது. எனினும் அதற்கு அவ்விதியை சரியான வகையில் பயன்படுத்தும் சூட்சுமத்தை அணிகள் கண்டறியாததும் காரணம். சுவாரஸ்யமான தந்திரோபாயங்களையும் வியூகங்களையும் வகுத்து பயிற்சியாளர்களும் கேப்டன்களும் கண்டறிந்தார்களேயானால் எதிரணியை இன்னமும் வேகமாக யோசிக்க வைக்கலாம். ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அது பன்மடங்காக்கும்.விதியின் விதி அவர்கள் கையிலேதான்!-அய்யப்பன்