“என்கூடப் படிச்ச பசங்கள்லாம் பொம்மை கேட்டுட்டு இருந்தப்போ, நான் ராக்கெட், ஏரோபிளேன்ல பறக்கணும்னு கேட்பேனாம். எங்கப்பா, ‘இப்போ டிக்கெட் கிடைக்கல.!’, ‘டிரைவர் வரல..’ன்னு ஏதாவது காரணம் சொல்லி சமாதானம் செய்வாராம். எட்டாத தூரத்துல இருக்குற வானத்துக்குப் போகணும்ங்கிற எண்ணம், எப்படியோ எனக்குள்ள விதையா விழுந்திருச்சு..” - கதை போலச் சொல்லும் உதய கீர்த்திகா, விண்வெளி வீரராகத் தயாராகிக் கொண்டிருக்கும் 24 வயது பயிற்சி மாணவி. தமிழ்நாட்டின் தென்மேற்கு எல்லையை ஒட்டியிருக்கும் தேனியில் இருந்து, விண்வெளியை எட்டிப் பிடிக்கப்போகும் தமிழ்ப்பெண். சின்ன வயதில் மனதில் தோன்றியதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதனையே வேள்வியெனச் செய்து வருகிறார். ‘இஸ்ரோ’வின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டப்படி, அக்குழுவில் இடம் பெற்றுவிட எல்லா வகைகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்காக அவர் பெற்ற பயிற்சிகளும், எடுத்த பிரயத்தனங்களும் சினிமா ஹீரோயிசக் காட்சிகளை மிஞ்சியவை. தற்போது தென்ஆப்ரிக்காவில் பைலட் பயிற்சி பெற்று வருகிறார் உதய கீர்த்திகா. மெடிக்கல் ரெனிவலுக்காக தேனி வந்திருந்தவரைச் சந்தித்துப் பேசினேன்..விண்வெளி வீரர் ஆவதற்கான படிப்புகளை எப்படித் தேடிப் படிச்சீங்க.?“நான் பத்தாவது படிச்சப்போ ‘இஸ்ரோ’ நடத்திய ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு’ குறித்த கட்டுரைப் போட்டியில பங்கேற்று தமிழ்நாடு அளவில் முதல் மாணவியா தேர்வானேன். அதுக்கு, ராக்கெட் பாகங்களை உற்பத்தி பண்ற ‘மகேந்திரகிரி ஆய்வு மைய’த்துல ‘சந்திராயன் 1’ சாட்டிலைட் வடிவத்துல ‘ஷீல்டு’ கொடுத்தாங்க. அதேபோல, ப்ளஸ் டூ படிக்கிறப்பவும் போட்டியில கலந்துக்கிட்டு ஃபர்ஸ்ட் வந்திட்டேன். அதுக்கு ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் வடிவத்துல பரிசு கொடுத்தாங்க. இதெல்லாம் என்னோட ஆர்வத்தை ரொம்பவே தூண்டி, உத்வேகம் கொடுத்துச்சு. விண்வெளி, ராக்கெட் சயின்ஸ், சேட்டிலைட்தான் நம்மளோட பாதைன்னு தோண வச்சது. அப்புறம் விண்வெளிக்குப் போகணும்னா என்ன படிக்கலாம்னு தேட ஆரம்பிச்சிட்டேன். உக்ரைன் ‘கார்க்கிவ் விமானப்படை பல்கலைக்கழக’த்துல, ‘ஏர்கிராப்ட் டெக்னீசியன் என்ஜினியரிங்’ படிப்பு இருக்குன்னு தெரிஞ்சது. அந்த நாட்டோட பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிற பல்கலை., அது. ப்ளஸ் டூ வரை தமிழ் வழியில படிச்சிருந்தாலும் வைராக்கியத்தோடு, அங்கே 4 வருஷம் படிச்சு ‘ஏ’ கிரேடுல தேர்ச்சியானேன். விண்வெளி வீரர் ஆகணும்னா அது மட்டும் போதாது. அடுத்தகட்ட திறமைகளை வளர்த்துக்கணும்னு, ‘போலந்து மிலிட்டரி ஏவியேசன் இன்ஸ்ட்டிட்யூட்’ல விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக பயிற்சி எடுத்துக்கிட்டேன்”..போலந்து ராணுவ மையத்துல பயிற்சியா.?“ஆமாங்கண்ணா.. ராணுவம், விமானப்படையினருக்கு மட்டுமே பயிற்சி தர்ற மையம் அது. சாதாரண குடிமகளா அங்க பயிற்சி பெற்ற முதல் பெண் நான்தான். நிலவு, செவ்வாய்க் கிரகத்துல அழுத்தம், ஈர்ப்பு விசை எப்படியிருக்குமோ அதே மாதிரி செட் பண்ணி வச்சிருப்பாங்க. அதை நாம தாங்குகிறோமா? திடீர்ன்னு ஆக்சிஜன் நின்னு போனா சமாளிக்கிறோமா? மொத்தத்துல உடல் வலிமை, மன வலிமை சோதனைன்னு 360 டிகிரில நம்மைச் சோதிக்கிற கடுமையான ட்ரெயினிங் அது. அந்த சமயத்துல இதய அழுத்தம் அதிகமாவும், மூச்சு விட சிரமமாவும் இருக்கும். அதையெல்லாம் தாக்குப் பிடிச்சு வந்தாத்தான் நாம தகுதியானவங்கன்னு சர்டிபிகேட் தருவாங்க. நான் அதுல ஃபிட் ஆயிட்டேன்”. நிலவுக்கான ட்ரெயினிங்ல சாப்பாடு உண்டா, மாத்திரைகள்தானா.?“நிலாவுக்கு போறவுங்க மாத்திரைகள்தான் சாப்பிடுவாங்கன்னு நினைக்கிறாங்க. சீஸ், பட்டர் சேர்த்து பதப்படுத்திய உணவுகள், காய்கறி சாலட்கள் மாதிரியான உணவுகள் இருக்கும். சாப்பிடுற கலோரி அளவுகள்தான் முக்கியம். நம்மளோட இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் உறுப்புகளின் இயக்கம்ன்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ணிட்டே இருப்பாங்க. கொஞ்சம் பிசகினாலும் சிக்கல்தான். விண்வெளிக்கு ஈ, எறும்பு, கரப்பான்பூச்சி, எலி போன்ற உயிரினங்களையும் சோதனைக்காக எடுத்திட்டுப் போறது வழக்கம். திடீர்ன்னு உணவு கிடைக்காதப்போ, அதைச் சாப்பிட்டு உயிர் வாழணும். அந்த ட்ரெயினிங் எனக்குத் தந்தப்போ, கரப்பான் பூச்சிகளைத்தான் சாப்பிட்டேன். விண்வெளிக்குப் போகணும்னா, இந்த மாதிரி எல்லா வகையான ட்ரெயினிங்களையும் எடுக்கணும்”..நீங்க ராக்கெட் தயாரிச்சீங்களாமே.?“ராக்கெட்ல போறதும், ராக்கெட் தயாரிக்கிறதும் இந்தப் பயிற்சியோட ஒரு அங்கம். பல ஆயிரம் அடி உயரத்துல ராக்கெட் அதிவேகத்துல பறக்குறப்போ, காது சவ்வு கிழிய வாய்ப்பிருக்கு. மூச்சைக் கன்ட்ரோல் பண்றது மூலமா அதை எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக்கிரணும். விண்வெளிக்குப் போறப்போ, ஒருவேளை அசம்பாவிதங்கள் நடந்துச்சுன்னா, தற்காத்துக்கிட்டு தப்பிக்கிறதுக்கான பயிற்சிதான் ராக்கெட் தயாரிக்கிறது. ஆறடி உயரத்துல ஆளில்லா ராக்கெட் தயாரிச்சு, ஆயிரம் அடி உயரத்துக்கு வெற்றிகரமா இயக்கிட்டேன். தவிர, ராக்கெட்ல போறப்போ வெடிச்சதுன்னா தப்பிக்கிறதுக்கு 10 ஆயிரம் அடி உயரத்துல இருந்து குதிக்கிற ‘ஸ்கை டைவிங்’, ஆழ்கடல்ல விழுந்துட்டா கரைக்கு மீண்டு வர ‘ஸ்கூபா டைவிங்’, மிருகங்கள் வாழுற காட்டுக்குள்ள விழுந்திட்டா, அங்கிருந்து தப்பிக்க ‘சர்வைவல் ட்ரெயினிங்’, ‘துப்பாக்கி சுடுதல்’ன்னு 10 விதமான பயிற்சிகள் எடுத்துக்கிட்டேன். இந்த ட்ரெயினிங் எல்லாமே போலந்து நாட்டுல இருக்குற காடுகள், மலைகள், கடல்ல ஒரிஜினலா கொடுத்தாங்க”. இதுக்கெல்லாம் செலவு ரொம்ப ஆயிருக்குமே..?“ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்க்கவே கஷ்டப்படுற குடும்பம் எங்களோடது. விண்வெளி வீரர் பயிற்சியெல்லாம் கனவுலயும் சாத்தியம் இல்லதான். டைப்பிஸ்ட்டான அப்பா தாமோதரனும், அம்மா அமுதாவும் என்னோட கனவை நனவாக்க அவங்க வாழ்க்கையை அர்ப்பணிச்சுட்டாங்க. என்னோட அப்பா ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டு, என்னைப் படிக்க வைக்குறதுக்கான வேலைகள்ல இறங்கிட்டாரு. அதுக்கு நிதி திரட்டுறதுலயே அவருக்கு நேரம் சரியா போயிருச்சு. ஏ.ஆர்.ரஹ்மான் சார், சாலமன் பாப்பையா ஐயா, நடிகர் ராகவா லாரன்ஸ் உட்பட என்னோட வளர்ச்சியில நல்ல மனசு கொண்ட முகம் தெரியாத பல பேரோட உதவி இருக்கு. நிறைய ட்ரஸ்ட்ல இருந்தும் உதவி பண்ணிருக்காங்க. இப்போ பைலட் ட்ரெயினிங் எடுக்க 50 லட்சம் ஃபீஸ் கட்டணும். நல்ல மனசுக்காரங்களோட உதவியால இது நடந்திடும்னு நம்புறேன்”. ‘ககன்யான்’ பயணத்திட்டத்தில இடம் பிடிச்சிருவீங்களா?“அதை நோக்கிய பயணம்தான் என்னோடது, நிச்சயமா இடம் பெறுவேன். விண்வெளிக்குப் பறந்த முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மா, இந்தியா சார்பில் ரஷ்யா மூலமாகத்தான் போனார். கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ரெண்டு பேரும் அமெரிக்க இந்திய விஞ்ஞானிகளாகத்தான் பயணிச்சாங்க. எனக்கு வாய்ப்புக் கிடைச்சா, ‘விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வீராங்கணை’ என்ற பெருமை என்னைச் சேரும்”.விண்வெளி வீரர் குறித்த விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இருக்கிறதா?“ஒரு சதவீதம் அளவுக்குக் கூட இல்லைங்கிறதுதான் உண்மை. அதற்கான தரவுகளை இணையத்தில் தேடினாலும் கிடைப்பதில்லை. என்னோட அப்பா அறிவியல் தொடர்பான புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கி வருவார். அப்படிக் கிடைச்ச அறிவை வச்சுத்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். அடுத்து வரும் மாணவர்களுக்கு உதவியாக, ‘என் வழி விண்வெளி’ங்கிற புத்தகத்தை நானும், அப்பாவும் சேர்ந்து எழுதி வெளியிட்டிருக்கோம். அது ஒரு மாணவருக்குப் பயன்பட்டாலும் சந்தோஷம்தான்”.