ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை ஏற்படும்.அதுபோல என் வாழ்க்கையிலும் ஒரு மறக்க முடியாத திருப்பம் நிகழ்ந்தது.ஜூலை 27ம் நாள் 2022ம் வருடம் நிகழ்ந்தஎன்னுடைய எழுபதாவது நட்சத்திரப் பிறந்தநாள்தான் அது.!எப்பொழுதுமே ஆடம்பரம், ஆரவாரக் கொண்டாட்டங்களுக்கு ஆசைப்படாதவன் நான்..என் எழுபதாவது பிறந்த நாளை என் மனைவி விஜயலட்சுமிக்காக என் பிள்ளைகளிடம் கூறி ஒரு சிறிய நிகழ்வாகக் கொண்டாடலாம் என ஆசை துளிர்விட்டது. திருக்கடையூர் கோயிலுக்கு எல்லோருமாகச் சென்று பூஜை செய்ய வேண்டும் என்கிற ஆசை... இது பெற்றோருக்குப் பிள்ளைகள் செய்ய வேண்டிய கடமை என்பதைஅவர்களும் உணர்ந்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை! .என் மூத்த மகன் செல்வராகவனை முதலில் தொடர்பு கொண்டேன்.“என்னப்பா?”“எழுபது வயசு ஆரம்பம்பா...”“அப்படியா,சந்தோஷம். ஆல் தி பெஸ்ட்!” போனை துண்டித்து விட்டார். மீண்டும் முயற்சித்தேன்.“என்னப்பா?” இப்போது குரலிலே சற்று கோபம் தொனித்தது. சற்று தயக்கத்துடனே தான் பேசினேன்.“அறுபது, எழுபது, எண்பதுன்னு தாண்டினா திருக்கடையூர் கோயிலுக்குப் போயி, கணவன் மனைவிக்கு மறுபடியும் கல்யாணம், பண்ணி பூஜை பண்ணினா, ஆயுள் விருத்தின்னு பெரியவங்க சொல்லுவாங்கப்பா… அம்மாவைக் கூட்டிக்கிட்டு திருக்கடையூர் போகணும்பா...”“எதுக்கு?”இது என்ன கேள்வி? பக்குவப்பட்ட ஓர் இயக்குநரிடமிருந்து? புரியாமல் குழம்பினேன். செல்வராகவன் எப்போதுமே அப்படித்தான், துண்டித்துத் துண்டித்துப் பேசுவதுதான் அவரது வழக்கம். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது, அடுத்து என்ன செய்வது?.இளைய மகன் தனுஷைத் தொடர்பு கொண்டேன்.“என்னப்பா..” அதே என்னப்பா…“எழுபதுப்பா, திருக்கடையூர்...” என்னுடைய அதே பழைய பல்லவி..தனுஷிடமிருந்து உடனே பதில் வரவில்லை. சற்றே மௌனம். இருவரிடமிருந்தும் மௌனம். இந்த மௌனங்களுக்கு என்ன அர்த்தம்?“அதெல்லாம் வேண்டாம், சும்மாருங்க!”அவரும் போனை துண்டித்துக் கொண்டார். அடுத்து? வேறுவழியில்லை, என் மகள்களிடம் முறையிட முனைந்தேன்.“என்னப்பா?”மீண்டும் அதே என்னப்பா...“எழுபதும்மா, திருக்கடையூர்...”“அதெல்லாம் வேண்டாம், சும்மா இருங்க!”இங்கு மௌனமே இல்லை, வெடி போல் வெடித்தது, மறுப்பு பதில். மருமகளை போனில் அழைத்தேன். “என்னப்பா?”“எழுபதும்மா, திருக்கடையூர்...”“அதெல்லாம் வேண்டாம், சும்மா இருங்க...” மருமகள்கூட காது கொடுத்துக் கேட்கவில்லை!மரியாதை போய் விட்டதா? எல்லா இடத்திலும் ஒரே பதில். பாறையில் மோதி மண்டை உடைந்தது போலாகி விட்டது எனக்கு! அப்பாவுக்கு எழுபது என்றால், எழுச்சிகொண்டு விழா எடுக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையில்லையா? சொல்லி வைத்தது போல் எல்லோருமே வேண்டாமென்கிறார்களே...காற்று, இடி, புயல், மழை, வெயில், துயர், வறுமை, பசி, இத்தனையும் தாங்கி குழந்தைகளை வளர்த்தது இதற்காகத்தானா? அதன்பிறகு யாரிடமிருந்தும் எந்த அழைப்பும் இல்லை, அறிவிப்பும் இல்லை. நீண்ட அமைதி… என் வாழ்க்கை சற்று மன பாரத்துடன் எப்பொழுதும் போல போய்க் கொண்டிருந்தது. இல்லை, காலத்தை போபோ என்று கடத்திக் கொண்டிருந்தேன். 27- ம் தேதி எழுபது பிறக்கப் போகிறது, 26 ஆம் தேதி என் பிள்ளைகளிடமிருந்து அலைபேசி அழைப்பு…“காரை எடுத்துக்கிட்டு, அம்மாவைக் கூட்டிக்கிட்டு வாங்க!”ஆஹா, பிள்ளைகளின் இறுகிய மனம் உருகிவிட்டது.அப்பா ,அம்மாவின் தேவை புரிந்து விட்டது. ஆவல் பூத்தது எனக்குள்ளே...“திருக்கடையூர் போறோமா?”“ இல்ல...”“ வேற எங்கே?” “கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது, நாங்க சொல்ற இடத்துக்கு வாயமூடிக்கிட்டு வந்தா போதும்..”ஒரு பக்கம் உற்சாகம், இன்னொரு பக்கம் பரபரப்பு... ஒரு வேளை, திருக்கடையூர் தான் போகப் போகிறோமா? என்ன உடை அணிவது? சாதாரணமாகவா, வேட்டி சட்டையா? கல்யாணக் கோலமா?போராட்டம்...காரில் ஏறினோம். பயணத்தின் போதும் குழப்பம் தான். அவர்கள் குறிப்பிட்ட இடத்திலே போய் நானும் என் மனைவியும் இறங்கினோம்.அது கிழக்கு கடற்கரைச் சாலையிலே உள்ள பிரமாண்டமான ஐந்து நட்சத்திர ஹோட்டல். மலைத்துப் போனேன், இங்கே நமக்கென்ன வேலை?திருக்கடையூர் போக வேண்டாம் என்று எல்லோருமே தடுத்தது, இது போன்ற பெரிய நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி வைக்கவா? புரியவில்லை! பார்ட்டியே தான். திரையுலகமே திரண்டிருந்தது. ஆடம்பர பார்ட்டி... ஆட்டம், பாட்டு, இசை, நாகரிக நடனம் என அமர்க்களப்படுகிறது. எழுபது வயது கல்யாணத்தை பார்ட்டி வைத்தா கொண்டாடுவார்கள்?ஒரு கோயிலிலே போய் முறைப்படி பூஜைகள் செய்ய வேண்டாமா?எங்கள் குழப்பம் அந்த ஹோட்டலுக்குள் நுழைவதா, வேண்டாமா? வந்த கார்லேயே திரும்பி வீட்டுக்கே போய்விடலாமா? கலக்கத்துடன் செய்வதறியாது திகைத்து நின்றுகொண்டே இருந்தோம். எங்களை வா என்று வரவேற்கக் கூட யாருமே இல்லை. ஏக்கம், ஏமாற்றம், சோர்வு... இவை தான் துணை..இப்பொழுது என் மகள்களும், மருமகளும் வந்தார்கள். தொடர்ந்து என் பேரப்பிள்ளைகள். பறவைக்கூட்டம் போல பறந்து வந்து எங்களை மொய்த்தார்கள். குழப்பம் அதிகமாகியது. என் மகள்கள் என் கண்களையும் மருமகள் என் மனைவியின் கண்களையும் பொத்தினார்கள். என் பேரப்பிள்ளைகள் என் கையைப் பிடித்தார்கள். என் பேத்திகள் என் மனைவியின் கையைப் பிடித்தார்கள்.அந்த நவநாகரிக இரவுப் பார்ட்டியை நோக்கி எங்கோ அழைத்துச் சென்றார்கள். கிட்டத்தட்ட ஒரு கடத்தல் நாடகமே தான். லிஃப்ட்டிலே பலவந்தமாக ஏற்றப்பட்டோம். எத்தனை மாடி என்று தெரியவில்லை, லிஃப்ட் பயணித்தது. பின் லிஃப்ட் நின்றது. கதவு திறந்தது, பிடித்தபிடி விடவில்லை. நடத்தியே அழைத்துச் செல்லப்பட்டோம். ஓரிடத்தில் நிற்க வைக்கப்பட்டோம். சற்று நேரம் அசையவில்லை, என் கண்களை மூடியிருந்த என் மகள்களின் கைகள் அகன்றன. அங்கே கோலாகலமான பார்ட்டிக்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை. இசை இல்லை, நடனம் இல்லை, கூட்டம் இல்லை, நிசப்தம்...கண்முன்னே கனவுக் காட்சி... அது அந்த ஆடம்பர ஹோட்டலின் அதி ஆடம்பரமான சூட் அறை. அகன்ற மெத்தை, தலையணைகள், வண்ணவண்ணமாய் அறை முழுக்க பலூன்கள் பறந்தபடி... படுக்கை முழுவதும் அழகிய சிவப்புநிற ரோஜா மலர்கள் தூவப்பட்டிருந்தன. அதிர்ச்சி தான்! என்ன நிகழப் போகிறது இங்கே? முதலிரவாம்!சொன்னது யார் தெரியுமா, பேரப்பிள்ளைகள். சொல்லிக் கொடுத்தது யார்? என் பிள்ளைகள். நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன், அவர்கள் என் முகத்தைப் பார்த்தார்கள். திடீரென்று என் பேரப் பிள்ளைகள் அத்தனை பேரும் “ஓஹோ” என்று கூட்டுச் சேர்ந்து உரக்க கூச்சல் எழுப்பினார்கள். அந்தப் பிஞ்சுக் குரல்களின் ஓசை நெஞ்சைக் கசக்கியது.“ஹேப்பி பர்த் டே தாத்தா... பாட்டி... ஹேப்பி ஹனி மூன்!” என்று பாடிவிட்டு விருட்டென்று பறந்துவிட்டார்கள். ஹனிமூனாம், எழுபதிலே... கேட்க உற்சாகமாகத் தான் இருந்தது. ஆனால், ஒத்துழைக்குமா வயது? சம்மதிக்குமா மனது? திரும்பி வருமா இளமை? இது போன்ற ஆடம்பர வசதிகளும் வாய்ப்புகளும் வாலிபத்திலே வாய்க்கவே இல்லையே. இழந்தவற்றை எண்ணி இதயம் ஏங்கத்தான் செய்தது. அறை, மெத்தை, மலர்கள், வாசம், தனிமை, நாணம்... இது முதலிரவாம்!.வயதோ எழுபது, இதற்கா நான் ஆசைப்பட்டேன்? திருக்கடையூர் பூஜையல்லவா நான் வேண்டினேன். இது என்ன? ஏக்கங்களுடனும், குழப்பங்களுடனும், திருக்கடையூர் போகாத மனக் குறையுடனும் அன்று இரவு போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு திகில் காட்சி அங்கே அரங்கேறியது... துள்ளும்படங்கள்: ஞானம்