வாராவாரம் புதிதாக அறிமுகமாகும் செல்போன் போல, கோடம்பாக்கத்திலும் ஹீரோயின்கள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். உள்ளூர் தயாரிப்புகளுக்கு தற்போது மவுசு பெருகி வருவது போல், தமிழ் நடிகைகளுக்கான மார்க்கெட்டும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு, சாய் ரோஹிணி. வெயில் கொளுத்தும் வேலூரில் பிறந்தவராக இருந்தாலும், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறார்..உங்களைப் பற்றிச் சொல்லுங்க... "நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே வேலூர். அப்பா - அம்மா ரெண்டு பேருமே கூலித் தொழிலாளர்கள். அம்மா, பீடி சுத்துவாங்க. அப்பா, பேக்கரில கேக் மாஸ்டரா வேலை பார்க்கிறார். 4 அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தங்கச்சினு என்னோட குடும்பம் ரொம்பப் பெருசு. அதே அளவுக்கு வறுமையும் பெருசாவே இருந்துச்சு. அப்பா - அம்மாவுக்கு தினசரி சம்பளம்தான். அந்த வருமானம், குடும்பத்தை நடத்துறதுக்குப் போதுமானதா இல்லாததுனால, அண்ணன்களும் படிப்பை பாதியிலேயே நிறுத்திட்டு, வேலைக்குப் போகவேண்டியதா ஆயிடுச்சு.அரசுப் பள்ளியிலதான் படிச்சேன். பீடி சுத்தியே என்னை 12வது வரைக்கும் அம்மா படிக்க வெச்சிட்டாங்க. ஆனா, அதுக்கும் மேல படிக்கவைக்க அவங்களால முடியலை. அதனால, நானே பார்ட் டைமா வேலைக்குப் போய் சம்பாதிச்சு, அந்தக் காசை வெச்சு கல்லூரிப் படிப்பை முடிச்சேன். பார்ட் டைமா வேலை பார்த்துக் கிடைச்ச காசுல, வீட்டுக்கும் கொஞ்சம் பணம் அனுப்புவேன். ஏன்னா, அதுவரைக்கும் பீடி சுத்தி என்னைப் படிக்கவெச்ச அம்மாவுக்கு உதவியா இருக்கும். சில சமயங்கள்ல சாப்பிடக்கூட காசு இல்லாம பட்டினியா கெடந்துருக்கேன். ஆனா, அம்மாவுக்குப் பணம் அனுப்புறதை மட்டும் நிறுத்தவே இல்லை.காலேஜ் முடிச்சதும் அப்படியே சினிமாவுக்குள்ள நுழைஞ்சு, இன்னிக்கு கார் வாங்குற அளவுக்கு முன்னேறிட்டேன். என் பரம்பரையிலேயே முதன்முதலா காலேஜ்ல படிச்ச, இங்கிலீஷ் பேசத் தெரிஞ்ச, கார் வாங்குன முதல் ஆள் நான்தான்.”.முதல் வாய்ப்பு? “சொல்லப்போனா, 12வது படிக்கிற வரைக்கும் சினிமா பற்றிய ஐடியா இல்லாமத்தான் இருந்தேன். 12வது முடிச்சதும் என் ஃப்ரெண்ட் மூலமா சினிமாவுல நடிக்கிறதுக்கு ஆஃபர் வந்துச்சு. ஆனா, அப்பதான் ஸ்கூல் முடிச்சதுனால கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. காலேஜுக்காக சென்னை வந்ததும், அதுவரைக்கும் பொத்தி வெச்சிருந்த சினிமா ஆசை வெளில வந்துச்சு. ஆனா, எங்க போறது, யாரைப் பார்க்குறதுனு எதுவுமே தெரியலை. எந்தப் பின்புலமுமே இல்லாமல் சினிமாவுக்கு வர்றவங்க எப்படியெல்லாம் கஷ்டப்படுவாங்கனு அப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன். அப்புறம், காஸ்டிங் டைரக்டர் மூலமா ஒரு ஆடிஷன் அட்டண்ட் பண்ணேன். அங்க என்ன பண்ணணும்னு கூட தெரியாது. அவங்க சொன்னது மாதிரி நடிச்சுக் காண்பிச்சு, அந்தப் படத்துல சின்னதா ஒரு வேடம் கிடைச்சுது.அப்புறம் ‘நாட் ரீச்சபிள்’ படத்துல வாய்ப்பு கிடைச்சது. 4 பொண்ணுங்கதான் அந்தப் படத்துல முக்கியக் கதாபாத்திரங்கள். 4 பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணா நடிச்சேன். அந்தப் படம் ரிலீஸ் ஆகிடுச்சு. அதைத் தொடர்ந்து ‘துச்சாதனன்’ படத்துல ஹீரோயினா நடிச்சிருக்கேன். இதுதான் நான் ஹீரோயினா அறிமுகமாகுற முதல் படம். தளபதி இயக்க, ஹீரோவா விகாஷ் நடிச்சிருக்கார். போன வாரம்தான் ஷூட்டிங் முடிஞ்சது. அப்புறம் ‘மிடில் கிளாஸ்’ங்கிற படத்துல ராதாரவி சார் பொண்ணா நடிச்சிருக்கேன். இப்போ ஜீ தமிழ் தயாரிப்புல ஹீரோயினா ஒரு படத்துல நடிக்கப் போறேன். வெற்றி மகாலிங்கம் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுமட்டுமல்லாம, இன்னும் சில படங்கள்ல கமிட்டாகியிருக்கேன். தயாரிப்பு நிறுவனங்கள் முறைப்படி அறிவிக்கட்டும்னு காத்திருக்கேன்.”சினிமா வாய்ப்புக்காக முதன்முதல்ல என்னென்ன சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது? “பொதுவா, சின்னச் சின்ன வேடங்கள்ல நடிக்கிறவங்களுக்கு வர்ற சிக்கல்களையும் அவமானங்களையும், நானும் சந்திக்க ஆரம்பிச்சேன். அதனால, முதல்ல என்னோட தகுதியை உயர்த்திக்கிட்டு பெரிய பெரிய வேடங்கள்ல நடிக்கணும்னு முடிவு பண்ணேன். அதுக்காக முதல்ல என்னோட தோற்றத்துல கவனம் செலுத்தத் தொடங்கினேன். முதன்முதலா சென்னைக்கு வந்த வேலூர் பொண்ணு எப்படி இருப்பானு உங்களுக்கே தெரியும். இப்போ என்னைப் பார்த்தா, ‘வேலூர் பொண்ணா இது’னு அசந்து போவீங்க... அதோட ஆக்டிங் கிளாஸ், டான்ஸ் கிளாஸ், சிலம்பம் கிளாஸ்னு சினிமாவுக்குத் தேவையான எல்லாத்தையும் கத்துக்கிறேன். சின்ன வயசுல இருந்தே பரத நாட்டியம்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ, பரதமும் கத்துக்கிறேன்.” .என்ன மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை? “முதல்ல எல்லாருக்கும் தெரிஞ்ச முகமா மாறணும். அப்புறம், எல்லாவிதமான கேரக்டர்கள்லயும் நடிக்க ஆசைப்படுறேன். ஹீரோவை லவ் பண்றது, டூயட் பாடுறதுனு இல்லாம, ‘இப்படியெல்லாம் கூட இருப்பாங்களா?’னு எல்லாரும் ஆச்சரியப்படுற கேரக்டர்கள்ல நடிக்கணும்.”- சி.காவேரி மாணிக்கம்