“ரிலீஸான சமயத்தில் என்னுடைய ‘மதயானைக் கூட்டம்’ படத்தை ஜாதியைத் தூக்கிப் பிடிக்கிற படம் என்று விமர்சித்த அதே நபர்கள், காலம் கடந்து, இன்று என்னை அறிமுகம் செய்து எழுதுகிறபோது, அது ‘’பருத்தி வீரன்’, ‘தேவர் மகன்’க்கு இணையான படம் என்று கொண்டாடுகிறார்கள். அந்த தவறுதலான சித்தரிப்பால் அடுத்த படமே கிடைக்காமல் நான் 7 வருடங்கள் சும்மா இருந்தேன்” மென் சோகத்துடன் புன்னகைக்கிறார் விக்ரம் சுகுமாரன்.2013ல் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தயாரிப்பில் இயக்குநராய் களமிறங்கியவர், 10 ஆண்டுகள் கடந்து, தனது இரண்டாவது படமான ‘ராவணக்கோட்டம்’ ரிலீஸுக்கு தயாராகியுள்ள நிலையில், அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடினோம்..பத்து வருடங்கள் கழித்து ரெண்டாவது படம் வெளியாகிறது, ஏன்? “முதல் பட டைரக்டரா எனக்கு மிகப் பெரிய மரியாதையை சம்பாதிச்சுக் கொடுத்த படம் ‘மதயானைக் கூட்டம்’. ஆனா அந்த மரியாதை படம் ரிலீஸானப்ப எனக்குக் கிடைக்கலை. முழுக்க முழுக்க சாதி எதிர்ப்பு மனநிலை கொண்டவன் நான். அந்த எண்ணத்துல எடுக்கப்பட்ட படம்தான் ‘மத யானைக் கூட்டம். ஆனா அதை சாதியைத் தூக்கிப்பிடிக்கிற படமா சிலர் சித்தரிச்சாங்க. சில பேர் படத்தைப் பத்தி எதுவுமே எழுதாம தவிர்த்தாங்க.இன்னும் சிலர் ஒரு படி மேலபோய் இந்தப் படம் எடுத்ததுக்காக விக்ரம் சுகுமாரனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போடணும்னெல்லாம் எழுதினாங்க. ஒரு குறிப்பிட்ட சாதி மக்களோட வாழ்நிலையை இயல்பா படம் பிடிச்சது குற்றமா?ஆனா இன்னைக்கு என்னோட இரண்டாவது படத்துக்கு எனக்கு அறிமுக வார்த்தைகள் எழுதுறப்ப ‘மதயானைக் கூட்டம்’ ஒரு under rated movie. விக்ரம் சுகுமாரன் நாம் கொண்டாடத் தவறிய இயக்குநர்னு எழுதுறாங்க. என்ன பிரயோசம்.?... சரியான நேரத்துல அந்தப் படத்தை ஆதரிக்காததால எனக்கு ஒரு சோப்பு டப்பா கூட கிடைக்கலை .அடுத்த படம் கிடைக்க 7 வருஷம் காத்திருக்க வேண்டியதாப்போச்சி..ஜீ.பிரகாஷ் தொடங்கி ‘ம.யா.கூ’ பல பேருக்கு புதிய அடையாளம் கொடுத்த படம். அடுத்த படம் பண்ண ஒரு ஹீரோ கூடவா கிடைக்கலை..?“கசப்பா இருந்தாலும் உண்மை அதுதான். கதிர், ஓவியா, கலையரசன்னு பலபேருக்கு என் படம் தமிழ் சினிமாவுல முக்கியமான அடையாளம் கொடுத்துச்சி. எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி 20 வருஷங்களுக்கும் மேல சினிமா வாய்ப்பு தேடி போராடிக்கிட்டிருந்தவர். அவருக்கு சரியான ஒரு அடையாளத்தை என் படம் தான் கொடுத்துச்சு. இன்னைக்கு அவர் எவ்வளவு பிசியான நடிகர்னு எல்லாருக்கும் தெரியும்.இன்னும் சொல்லப்போனா என் முதல் படத்தால, அதுல வேலை செஞ்ச தொழில் நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள் எல்லாருமே பலனடைஞ்சாங்க. என்னைத்தவிர.முதல்ல இந்தப் படத்தை தனுஷை ஹீரோவா வச்சி ஆரம்பிக்கிறதாதான் இருந்தது. அப்பா ரோல்ல பாரதிராஜா, செவனம்மா ரோல்ல ’முதல் மரியாதை’ ராதா நடிக்கிறதாத்தான் இருந்தது. அது நடந்திருந்தா இந்தப்படம் வேறமாதிரி கூட பேசப்பட்டிருக்கும்.”.இந்த 7 வருட காலத்துல வேற என்னதான் செஞ்சீங்க? சில படங்கள்ல நடிகராவும் தலை காட்டுனீங்க?“ எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். கமலோட ’தேவர் மகன்’ பார்த்துட்டு தான் சினிமாவுக்கே வந்தேன். ஒருவேளை நாமளும் ஹீரோ ஆயிடமாட்டோமான்னு மனசு மூலையிலே ஒரு ஆசையும் இருந்துச்சி. ஆனா என் குருநாதர் பாலுமகேந்திரா சார் கிட்ட அசிஸ்டெண்டா வேலை செய்யுறப்ப அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கிட்டேன்.அதையும் மீறி நண்பர் வெற்றிமாறனுக்காக ‘பொல்லாதவன்’லயும், நண்பர் முத்தையாவுக்காக ‘கொடி வீரன்’லயும் நடிச்சேன். ஒரு கட்டத்துல இப்பிடி நடிப்புன்னே போனா டைரக்டரா ஆக முடியாதுன்னு தோணுன உடனே நடிக்கிறதை நிறுத்திக்கிட்டேன். நடுவுல, ‘அட்டக்கத்தி’ தினேஷை வச்சி ‘தேரும் போரும்’னு ஒரு படம் ஆரம்பிச்சேன். 5 நாட்கள் ஷூட்டிங்கும் நடந்தது. அப்பவே படத்தோட பட்ஜெட் பத்தி புரடியூசர் கூட ஒரு சின்ன மனத்தாங்கல். படம் அப்படியே நின்னுடுச்சி.”.ராவணக் கோட்டம், அதுக்குள்ள சாந்தனு வந்தது எப்படி?“ஒரு கட்டத்துல ரொம்ப டயர்டாகி, மறுபடியும் வெற்றிமாறன் கூட ‘ஆடுகளம்’ படத்துல வேல செய்ய ஆரம்பிச்சேன். 3 வருஷ கடுமையான உழைப்பு அது. அந்த உழைப்புக்கு வெற்றிமாறன் நல்ல அங்கீகாரமும் கொடுத்தார். ‘ஆடுகளம்’ படத்துக்கு விக்ரம் சுகுமாரன் அளித்த பங்களிப்பு மகத்தானதுன்னு ஓபனா சொன்னார். சினிமாவுல வேற யார்கிட்டயும் எதிர்பார்க்க முடியாத அபூர்வ குணம் அது.அடுத்து ஆரம்பிச்சதுதான் இந்த ‘ராவணக்கோட்டம்’. நண்பர் ஆதவன் கண்ணதாசன் மூலமா சாந்தனு என்னைப் பார்க்க வந்து ‘உங்க ம.யா.கூ’ எனக்கு ரொம்பப்புடிச்சிருந்தது. உங்க கூட சேர்ந்து படம் பண்ணனும் சார்னு வந்தார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி சாரையும் சாந்தனுதான் அறிமுகப்படுத்தினார். அவருக்கும் தயாரிப்பாளருக்கும் ரெண்டு மூணு கதைகள் சொன்னேன். அவங்களுக்கு இந்த ராவணக் கோட்டம் சப்ஜெக்ட் புடிச்சிருந்தது.”.இந்தப் படமும் ரொம்ப லேட். படம் துவங்கி 3 வருடங்களுக்கு மேல ஆச்சே?” கருவேல மர அரசியல் பேசுற படம் இது. 1957ல் ராமநாதபுரம் முதுகுளத்தூர் பக்கம் இருக்கிற தூவல் என்கிற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை, இன்றைய அரசியல், கார்ப்பரேட்காரர்களுடன் தொடர்புபடுத்தி கதை பண்ணியிருக்கேன்.ஸோ முழுக்க முழுக்க ராமநாதபுரம் நிலப்பரப்பில் அனல்பறக்கும் வெயிலில் எடுக்கவேண்டிய படம். தயாரிப்பாளர் துபாய்ல பிசியா இருக்கவர்ங்குறதால துவக்கத்தில தயாரிப்பு நிர்வாகத்தையும், பண நிர்வாகத்தையும் சாந்தனுவே பார்த்துக்கிட்டார். பெரிய பெரிய ஜாம்பவான்களையே விழுங்கி ஏப்பம் விடுகிற சினிமா துறை இது. பாவம் சாந்தனு எம்மாத்திரம்? அவரால அதை வெற்றிகரமா செயல்படுத்த முடியலை. அவர் நம்பின சிலபேர் அவரை ஏமாத்தினாங்க. நிறைய பணம் விரயம் ஆகிடுச்சி.இன்னொரு பக்கம் ரெண்டு கொரோனா சீஸனாலயும் கடுமையா பாதிக்கப்பட்டோம். அடுத்து எங்க ஹீரோயின் கயல் ஆனந்தி கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டார். உள்ளூர்ல ஷூட்டிங் நடத்துறதுல வெளிய சொல்ல முடியாத சில இடைஞ்சல்கள். அதனால சுமார் 20 சதவிகித படப்பிடிப்பு முடிஞ்ச நிலையிலேயே படம் டிராப் ஆகுற மாதிரி சூழ்நிலை. ஆனா கதை மேலயும் என் மேலயும் இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால தயாரிப்பாளர் கண்ணன் ரவிசார் கிட்ட பேசி மறுபடியும் படம் நகர கடுமையான சிரத்தைகள் எடுத்துக்கிட்டார் சாந்தனு. பட்ஜெட் ரொம்ப ஓவராயிட்டாலும், அவரோட தரப்பை புரிஞ்சிக்கிட்டு தயாரிப்பாளர் கண்ணன் ரவி சாரும் பெருந்தன்மையா படத்தை முடிக்க முன்வந்தார். அவர் இடத்துல வேற யார் இருந்திருந்தாலும் இந்தப் படத்தை தூக்கிப் போட்டுட்டு வேற வேலையைப் பார்க்கப் போயிருப்பாங்க. இன்னும் ரெண்டு வாரத்துல படம் ரிலீஸ். படம் பார்த்த தயாரிப்பாளர் படு ஹேப்பிங்குற ஸ்டேஜுக்கு கொண்டு வந்துட்டார் சாந்தனு.”.அடுத்த படத்துக்கு முன்னால ஒரு வெப் சீரிஸ் இயக்கப்போறதா தகவல்?“நடிகர் வடிவேலுக்கு இணையான ஒரு நடிகன் சூரி. இவ்வளவு நாளும் அவர் தன்னை ஒரு காமெடியனாவே சுருக்கிக்கிட்டார். இப்ப ‘விடுதலை’ அவரோட இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கு. என்னோட வெப் சீரிஸ்க்கும் ஹீரோ சூரிதான். கதையும் அவரோடது தான். ரஜினி,கமல்,விஜயகாந்த், அஜித், விஜய்னு கெட் அப் போட்டுக்கிட்டு நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் நடத்துறாங்களே கூத்துக் கலைஞர்கள்… அவங்க வாழ்க்கையை ரத்தமும் சதையுமா பதிவு செய்கிற கதை இது. இனியும் அஞ்சு வருஷம், ஆறு வருஷம்னு காத்திருக்கிற பொறுமையெல்லாம் கிடையாது. இனி கிடைக்கிற பந்துகளை அடிச்சி விளையாட ஆரம்பிக்கப்போறேன்” - உற்சாகமாக முடிக்கிறார் விக்ரம் சுகுமாரன். -விக்ரம் சுகுமாரன் வேதனை