அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்திருக்கும் ‘கேப்டன் மில்லர்’படத்துக்கு சோதனை மேல் சோதனை. தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் முதலே நடந்துவருகிறது. விவசாய நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் சில குறிப்பிட்ட சமாச்சாரங்களுக்கு மட்டுமே அனுமதி வாங்கிய படக்குழுவினர், லோக்கல் அரசியல்வாதிகளுக்கு, வனத்துறை அதிகாரிகளுக்கு கணிசமாக கட்டிங் கொடுத்துவிட்டு துப்பாக்கிச் சூடு, மரங்களை வெட்டுவது, குண்டு வெடிப்பு என்று இஷ்டத்துக்கு புகுந்து விளையாடியது ஹாட் டாபிக் ஆக மாறவே... திடீரென்று கட்டையைப் போட்டுவிட்டது வனத்துறை. மீண்டும் கட்டிங் பரிமாறப்படவே ரிவர்ஸ் கீர் போட்டு படப்பிடிப்புக்கு ஓகே சொல்லிவிட்டது வனத்துறை. இவையெல்லாம்கூட பெரிய பிரச்னை இல்லை... படப்பிடிப்பு இடைவேளைகளில் தினசரி கெடா வெட்டும் அசைவ விருந்தும் களைகட்டியது ஒருபக்கம் என்றால், அப்பகுதியில் நடமாடிய மான்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது என்று கொந்தளிக்கிறார்கள் வன ஆர்வலர்கள்!.ஆகஸ்ட் 11ம் தேதி ‘மாவீரன்’ரிலீஸ் என்று தேதியை அறிவித்து தெம்பாக இருந்த சிவகார்த்தியன், தற்போது கொளுத்தும் வெயிலிலும் குளிர் ஜுரத்துடன் அலைகிறார். காரணம், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை இன்னும் ஒருநாள் முன்னதாக, ஆகஸ்ட் 10ம் தேதி அன்றே வெளியிடப்போவதாக இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்க இருக்கிறார்கள்.’ஜெயிலர்’ ரிலீஸ் செய்தி வேகமெடுத்துவரும் நிலையில், ‘அப்படி ரஜினி படமும் ஆகஸ்ட் ரிலீஸ் என்றால் ’மாவீரன்’ படத்தை அட்லீஸ்ட் மூன்று வாரங்களாவது தள்ளி ரிலீஸ் செய்யுங்கள்’ என்று விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலிருந்து சி.கா.வுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். இன்னொரு பக்கம் ‘மாவீரன்’னு பேரை வச்சுக்கிட்டு பயப்படலாமா? என்று உடன் இருக்கும் ஒரு குரூப் அவரை உசுப்பேற்றிவிட குழப்பத்தில் சிக்கித்தவிக்கிறார் சி.கா..‘ஜெயிலர்’ படப்பிடிப்பிலிருந்து ரிலீஸ் ஆகி மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’க்காக மும்பையில் முகாமிட்டிருக்கும் ரஜினி, மே இறுதியில் சென்னை திரும்பி ஜூன் மாதத்திலிருந்து த.செ.ஞானவேலின் ‘ரஜினி 170’ க்கு ஷிஃப்ட் ஆகிறார்.இப்போது, லேட்டஸ்டாக, இந்த 170க்கும் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வமான செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அப்படத்தை இயக்கவிருப்பவர் லோகேஷ் கனகராஜ். ஆனால், தயாரிப்பு நிறுவனம் அதிகம் பேர்களால் கிசுகிசுக்கப்படும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அல்ல. இப்படத்தை தயாரிக்கவிருப்பது கமலின் ராஜ்கமல் நிறுவனம். இதற்கான முறையான ஒப்பந்தமும் கையெழுத்தாகிவிட்டது. ரஜினிக்கு செஞ்சுரியும் லோகேஷுக்கு அரை செஞ்சுரிக்கு சற்றே குறைவாகவும் சம்பளம் நிர்ணயித்திருக்கிறார்களாம்.தமிழ்ப் படங்கள் என்றாலே அலர்ஜி என பல ஆண்டுகள் தவிர்த்து அஜித்துக்காக மட்டும் ‘நேர்கொண்ட பார்வை’யில் கவுரவப் பார்வை பார்த்த வித்யாபாலன்தான் மணிரத்னம், கமல் மெகா கூட்டணியின் நாயகி என்று ஆழ்வார்ப்பேட்டை ஏரியாவிலிருந்து தகவல்கள் கசிகின்றன.இந்த இடத்துக்கு முதலில் ஆலோசிக்கப்பட்டவர் நயன்தாராதானாம். ஆனால், அவர் கேட்ட சம்பளம் ராஜ்கமல், மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரு நிறுவனக் கட்டிடங்களையும் கிடுகிடுக்க வைக்க, சற்றும் யோசிக்காமல் மணிரத்னம் டிக் அடிக்க, கமல் டிக் டிக் அடிக்க ஓ.கே. ஆகவிருக்கிறார் வித்யா பாலன். ஆனால், இந்த இடத்தை அடைவதற்கு ஆரம்ப காலங்களில் அவர் பட்ட அவமானங்கள் கொஞ்சநஞ்சமல்ல...தவிர, பாலக்காட்டு பச்சைத் தமிழச்சியான வித்யா தமிழ்ப்படங்களை ஏன் தவிர்த்தார் என்பதையும் இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? துவக்க காலத்தில் ராசியில்லா நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட வித்யா 2002ல் ஒரே சமயத்தில் இரு படங்களில் கமிட் ஆனார். முதல் பட சமாச்சாரம் சீக்ரெட். தரமான ஒரு குடும்பப்படம் கொடுத்துவிட்டு அடுத்து தவ நடிகருடன் ஓட்டம் பிடிக்க... ஒரு படம் எடுக்க தயாராக இருந்த இயக்குநர் வித்யாவை தனியே டிஸ்கஷனுக்கு அழைக்க, இவர் நோ சொல்லிவிட்டார். இதனால், மற்றொரு மலையாள மல்லிகையை அப்படத்துக்கு நாயகியாக்கிவிட்டார் அந்த இயக்குநர்..அடுத்த சம்பவம், ‘காதலிக்க நேரமில்லை’ மாதிரி எவர்கிரீன் நகைச்சுவை சித்திரம். ஸ்ரீகாந்த், ஸ்ரீகாந்த் என்றொரு நடிகர் இருக்கிறார் அல்லவா? அவரது முதல் படமான ‘ரோஜாக்கூட்டம்’ பெரும் ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்த படங்களிலிலேயே சகல முடிவுகளும் எடுக்கும் அந்தஸ்துக்கு ஆளாகியிருந்தார். அவரது இரண்டாவது படமான ‘மனசெல்லாம்’க்கு இயக்குனர் சந்தோஷ் வித்யா பாலனைத்தான் நாயகியாக்கி ஏ.வி.எம்மில் ஷூட் பண்ணிக்கொண்டிருந்தார். இரண்டாவது நாள் படப்பிடிப்பு. சுமார் ஒரு மணி நேரப்பிடிப்பு முடிந்த நிலையில், ‘எனக்கு இந்த ஹீரோயினைப் பிடிக்கல. வேற யாரையாவது ஃபிக்ஸ் பண்ணுங்க’ என்றபடி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வாக் அவுட் செய்துவிட்டார் ஸ்ரீகாந்த்.அப்படியே ஏ.வி.எம்.மிலிருந்து அவமானத்துடன் வெளியேறியவர்தான் வித்யாபாலன். அடுத்த சில வருடங்களில் பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாகி, ஹீரோக்களுக்கு இணையாக சம்பளம் வாங்கி, தேசிய விருது வாங்கி, இன்றுவரை தனது 40 களிலும் நாட்டு ஜனத்தொகையில் 40 சதவிகிதம் பேரின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார். வாங்க வித்யா... வாங்க!- முத்துராமலிங்கன்