ரவிக்குமாரைத் தேடி அவருடைய ஸ்பேர் பார்ட்ஸ் கடைக்கு ராகவன் போனபோது, அவர் கடையின் ஷட்டரை இறக்கிவிட்டுக்கொண்டிருந்தார். " என்ன ரவிக்குமார்… பகல் ரெண்டு மணிக்குக் கடையை பூட்டுறீங்களே?’' ஆச்சரியப்பட்டு கேட்டார், ராகவன். "மதியம் ரெண்டுல இருந்து நாலு மணிவரைக்கும் உணவு இடைவேளையாச்சே...’' "அது தெரியும்… அதுக்காக ஏன் கடையப் பூட்டறீங்க? கடைப்பையனை இருக்க வெச்சுட்டு, நீங்க சாப்பிட போகலாமே. நீங்க வந்ததும் அவனை சாப்பிட அனுப்பலாமே… இதுக்கு ஏன் பூட்டறீங்க?’' " நீங்க சொல்றதும் சரிதான். அப்படிப் பண்ணலாம்தான். ஆனா, சாப்பாட்டுக்குப் பிறகு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வந்தா, சாயந்தரம் கூடுதல் சுறுசுறுப்பா வியாபாரத்துல கவனம் செலுத்தலாமே, அதான்.” “அதுவும் சரிதான்!” என்று நகர்ந்தார், ராகவன். ஆறு மாதங்களுக்கு முன்புவரை சாப்பாடு நேரத்தில் ராகவன் சொன்னதுபோல்தான் செய்துகொண்டிருந்தார், ரவிகுமார். அவர் சென்றபிறகு தனியே இருந்த கடை ஆள், ரெகுலர் கஸ்டமர்களை பழக்கமாக்கிக்கொண்டு, போன மாதம் தனியே கடை வைத்துவிட்டான். இப்போது இருப்பவனும் அப்படிச் செய்துவிடக்கூடாது என்பதற்காகவே உணவு இடைவேளையில் கடை மூடும் அந்த உண்மையான காரணத்தை யாரிடமும் சொல்லிவிடக்கூடாது என்ற தீர்மானத்தோடு, பெருமூச்சு விட்டபடியே புறப்பட்டார், ரவிகுமார்.-சி. ஶ்ரீரங்கம்