‘பூமிய நான் போடறேன், இனிமே கமிஷனை என்க்கு குடுங்க” ரவுடி ஒருவன் முதலாளிகளைக் கூட்டிவைத்து சவால்விட, அந்த நிமிஷமே ஸ்பாட்டுக்கு வந்த பூமி, பேசிய ரவுடியை போட்டுத் தள்ளுகிறார். கட் பண்ணினா, ஒரு அழகான இளம் பெண் டாக்டரை ரவுடி கும்பல் துரத்துது... அந்த பொண்ணோட வயித்துல எட்டி உதைத்து, இரும்பு கம்பியால் அடித்துக் கொல்ற செகண்ட்ல, ருத்ரன் வர்றார், மொத்த ரவுடிகளையும் வெட்டிச் சாய்க்கிறார். பூமி, சரத்குமார்... ருத்ரன், ராகவாலாரன்ஸ்... சரி, யார் இவங்க? கதையை சொல்லாம சீனை சொன்னா எப்படின்னு கேட்கலாம்... படத்துல சீன் தான் ஸ்ட்ராங், கதை ரொம்ப வீக்... அப்பா கடனை அடைக்க ஹீரோ வெளிநாட்டுக்கு வேலைக்கு போன கேப்ல, ஹீரோவோட அம்மா, பொண்டாட்டியல்லாம் கொன்னுட்டு சொந்த வீட்டை ஆட்டைய போடுகிறார் வில்லன் சரத். வெளிநாட்டில் இருந்து அம்மாவோட சாவுக்கு வந்த ஹீரோவுக்கு விஷயம் தெரியவர வில்லனை கொன்னு பழிதீர்க்கிரார். எம்.ஜி.ஆர். காலத்து கதைன்னாலும் விஜய் கெட்டப்ல, ரஜினி ஸ்டைல்ல ராகவா லாரன்ஸ் தெறிக்க விடுகிறார். சண்டை காட்சிகள் எல்லாம் சரியான கடப்பாரை என்றால் அம்மா, அப்பா, பொண்டாட்டி, மகள் செண்டிமெண்ட்லாம் பூ மாதிரி... பிரியா பவானி சங்கர் காதலியா, மனைவியா மனசைத் தொடுகிறார். நாசர், பூர்ணிமா பாக்கியராஜ், இளவரசு, காளி வெங்கட் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். வில்லன் சரத்குமார் கெத்து. .சுமாரா ஒரு 300 பேரை கொலை செய்த ஹீரோவுக்கு கிளைமேக்ஸ்ல போலீஸ் உயர் அதிகாரியே பூங்கொத்து குடுத்து கௌரவிப்பதெல்லாம் நம்ம காதுல வைக்கத்தான். படம் முழுக்க பணத்தை ரத்தமா கொட்டியிருக்காங்க. பாவம், படத்துக்கு வந்த பெண்கள், குழந்தைகள். ருத்ரன் - வெறியாட்டம் 2.5 ஸ்டார்.இந்திரலோகத்து மேனகை சந்திரலோகத்தில் தவமிருந்த விஸ்வாமித்திர முனியின் தவ மோடு கலைத்து மூடு வரவைத்ததால் பிறந்த சாகுந்தலையின் கதை.அப்படி முறை தவறி பிறந்த சாகுந்தலையைப் பிரிந்து மேனகை மீண்டும் இந்திரலோகம் செல்ல, கிராஃபிக்ஸ் பறவைகள் ஏழுகடல், ஏழு மலை தாண்டி கண்வ மகரிஷியின் ஆசிரமத்தில் சாகுந்தலையைச் சேர்க்கின்றன. அவளை தனது சொந்த மகளாக வளர்க்க ஆரம்பிக்கிறார் கண்வ ரிஷி. சிறுமி சமர்த்தாக வளர்ந்து சமந்தாவாக செழித்து நிற்க, ஆசிரமத்துக்கு வெகேஷன் லீவில் வரும் ஹஸ்தினாபுரத்து அரசன் துஷ்யந்தன், அவளைக் கண்டதும் காதல் கொண்டு, கூடல் கண்டு, கர்ப்பிணியாக்கிவிட்டுச் செல்கிறான்.துஷ்யந்தன் நினைவால் துவண்டு கிடக்கும் சாகுந்தலை துர்வாச முனிவரின் அழைப்பை அலட்சியம் செய்ய, ‘உன் காந்தர்வ கனவன் உன்னை மறந்து போகட்டும்’ என்று சாபம் விட, அதன்படியே, ‘நீ யார் என்று தெரியவில்லையே’ என்று அவன் இவளை முற்றிலும் மறந்துபோக, அடுத்து என்ன நடந்தது என்பதுதுதான் சாகுந்தலம்..தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர் இயக்கியிருக்கிறார். புலிகளும் சிங்கங்களும் முனிவர்களின் பூஜைகளை நட்பாக யானைகளின் மேல் அமர்ந்து பார்க்க, அந்த பூஜை மந்திரங்களை கிளிகள் திரும்பச் சொல்ல என்று குணசேகரின் கற்பனை வனம் அத்தனை ரம்மியமாக இருக்கிறது. புராணகாலத்து சாகுந்தலையாகவே தரிசனம் தருகிறார் சமந்தா. துஷ்யந்தனாக வரும் மலையாள நடிகர் தேவ் மோகனும் கச்சிதமான தேர்வு.சேகர் வி.ஜோஸப்பின் ஒளிப்பதிவும் கணினி வரைகலைகளும் பிரமிக்க வைக்கின்றன. குறிப்பாக ஹஸ்தினாபுரத்துக்கு தனது காதலனைத் தேடி சாகுந்தலா வரும் காட்சியில், ‘பார்ப்பது இந்தியப் படம்தானா?’ என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.2கே கிட்ஸ் காலத்து காதலுக்கு கொஞ்சமும் பொருந்தாத கதை. சமந்தாவின் தீவிர ரசிகர்கள் பார்க்கலாம்.சாகுந்தலம் – சமந்தாயணம்2.5 ஸ்டார் .வாய் பேச முடியாது, காதும் சுமாரகத்தான் கேட்கும். சிவில் என்ஜினீயரிங் பட்டதாரி அருள் நிதி. கன்ஸ்ட்ரக்ஷன் காண்ட்ரக்டராக இருக்கும் அப்பா பாரதிராஜாவுக்கு உதவியாக இருக்கிறார். வாய்பேச முடியாத மகனுக்கு அவனை விரும்பும் தன் தங்கை மகள் ஆத்மிகாவை கல்யாணம் செய்துவைக்க நினைக்கிறார் பாரதிராஜா. அந்த நேரத்தில், வேலை பார்க்கும் இடத்தில் ஒரு விபத்து. தலையில் படுகாயமுற்ற பாரதிராஜாவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கிறார் அருள்நிதி. அதற்குப் பின் பாரதிராஜா குணமடைவாரா, அருள் நிதியின் காதல் கல்யாணத்தில் முடியுமா? என வழக்கமான ரூட்டில் நாம் சிந்திக்க, புது ரூட்டில் போகிறார் இயக்குநர் ஹரிஷ் பிரபு. அந்த ஆஸ்பத்திரியில் லிப்ட்மேன், வாட்ச்மேன் என நாலு சைக்கோக்கள் இருக்கிறார்கள். அவர்கள் காரணமே இல்லாமலும் கொலை செய்கிறார்கள், காசுக்காகவும் கொலை செய்கிறார்கள். டாக்டரையும் கொலை செய்கிறார்கள், பேஷண்டையும் கொலை செய்கிறார்கள். .அருள் நிதியின் காதலி மார்பை முறைக்கிறார்கள், கல்யாணமான அவரது அக்காவின் இடுப்பு, உதட்டை பார்வையால் மேய்கிறார்கள். அக்காவின் 13வயது மகளுக்குக் ஸ்கெட்ச் போடுகிறார்கள். அருள் நிதியிடம் சவால்விட்டு வீட்டுக்கே வருகிறார்கள், ராத்திரியில் அந்த சிறுமியை ரோட்டில் துரத்துகிறார்கள்... இப்படி காட்சிக்கு காட்சி இயக்குநரின் கற்பனை வக்கிரத்தின் உச்சத்தை எட்ட, நாமும் சைக்கோ ஆகிவிடுவோமோ என்கிற பயமே வந்துவிட்டது. நடித்தவர்கள் அனைவருமே சிறப்பு. பாரதிராஜா அருமை. அரசு மருத்துவமனையின் காட்சிகள் யதார்த்தம்.ஆனால், ஒரு சிறுமியை நாலு நாய்கள் கெடுக்கப் போகிறதா? கொலை செய்யப் போகிறதா? என்பதை இரண்டு மணி நேரம் கூசாமல் பார்த்துக் கொண்டிருக்க ஒரு சராசரி மனிதனால் சத்தியமாக முடியாது! திருவின் குரல் - வக்கிரம்1.5 ஸ்டார் .வேலைவெட்டி இல்லாமல் ஊர் சுத்துற ஹீரோ தன் நண்பர்களோடு சேர்த்து, ‘வாயில வையுங்க’ன்னு ஒரு சமையல் சேனல் நடத்துகிறார். அதுக்கு லைக் போட்ட ஒரு பெண்ணை அவர் லவ் பண்ண, அந்தப் பெண்னைத் தேடி அவளோட ஊருக்குப் போகிறார். அவளோட வீட்டை தேடிக் கண்டுபிடித்து காலிங் பெல் அடித்தால் ஒரு பேய் வந்து கதவை திறக்கிறது. அந்தப் பேய்க்கு ஒரு ஃபிளாஷ் பேக்... அந்தப் பேய் மனுஷனாய் இருக்கும் பொழுது ஒரு நர்ஸைக் காதலிக்கிறது. அந்த நர்ஸை ஐந்து பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொன்று விடுகின்றனர். கற்பழித்தவர்களைப் பழிவாங்க ஒரு சாமியார் குடுத்த ஐடியாவின் பேரில் தானும் செத்து பேயாகி அந்த ஐந்து பேரை கொல்கிறது. அதோடு அதன் கோபம் தனியவில்லை. ஆறாவதாக ஒரு ஆளைத் தேடுகிறது. அவர் தான் ஹீரோ.... ஹீரோவை ஏன் பேய் தேடுகிறது? அவனை என்ன செய்தது? ஹீரோவின் காதலிக்கும் பேய்க்கும் என்ன தொடர்பு? இதுதான் ‘ரிப்பப்பரி...’ - கதையை நாமதான் கொஞ்சம் ஸ்வாரஸ்யமா சொல்லியிருக்கோம்… படத்தில் ஹீரோவின் பெயர் சத்யராஜ், அவரது நண்பர்கள் பாக்கியராஜ், பாண்டியராஜ். கதை, மேக்கிங் எல்லாம் கூட அந்த ராஜாக்கள் காலத்தை சேர்ந்ததுதான். சின்னத்திரை காவ்யா, யூ டியூபர் தனம் அம்மாவை தவிர்த்து, ஹீரோ உட்பட படத்தில் அனைவருக்கும் நடிப்பு என்பது பரங்கிமலை ரகசியம்தான், தேடிக்கொண்டே இருக்கிறார்கள். 200 ரூபாய்க்கு வாங்கிய நாய் பொம்மையையும், குரங்கு பொம்மையையும் வைத்து ஒரு பேய் படம் எடுத்துவிடலாம் என்கிற இயக்குநர் அருண் கார்த்திக்கின் துணிச்சலை பாராட்டியே தீர வேண்டும். படத்தில் பேய் சமூக நீதி பேசுவது தான் புதுமை, காமெடி எல்லாம். ரிப்பப்பரி - ரம்பம்பம், பேரின்பம்1.5 ஸ்டார்