முத்துராமலிங்கன்‘நடிகர் விஜய்யின் மாஸ் சினிமா இமேஜை அரசியல் தளத்துக்கு மாற்ற வேண்டும். விஜய் மக்கள் மன்றத்தின் ரசிகர்கள் பலத்தை தொண்டர்கள் தளத்துக்கு மாற்ற வேண்டும்’ - லேட்டஸ்ட்டாக விஜய் முகாமில் நடந்த அரசியல் ஆலோசனை அப்டேட் இதுதான்!யெஸ். இதுவரை அமைதி காத்தது போதும்; இனி அரசியல் அதிரடியைத் தொடங்கலாம் என்று அவர் உறுதியான, இறுதியான முடிவு எடுத்துவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதை உறுதிபடுத்துவதாக அமைந்தது ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விஜய் மன்ற நிர்வாகிகளுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு. ‘அம்பேத்கர் பிறந்தநாளை நமது மன்றத்தினர் விமரிசையாகக் கொண்டாடவேண்டும். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், அந்த நாளில் நலத்திட்ட உதவிகள், ரத்த தானம், விலையில்லா விருந்தகம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டும். அந்தந்த பகுதிகளில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் அம்பேத்கர் இயக்கத்தினருடன் கைகோத்து செயல்படவேண்டும்’ என்கிறது விஜய்யின் உத்தரவு!.சும்மாவே போட்டுத் தாக்கும் விஜய் மக்கள் மன்றத்தினர், இந்த அறிவிப்புக்கு பிறகு சும்மா இருப்பார்களா? மூலை முடுக்கெல்லாம் களத்தில் இறங்கினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத உளவுத்துறை விழிபிதுங்கிப் போனது. அனுமதி கொடுப்பதா, வேண்டாமா என்பதில் அந்தந்த ஏரியா காவல் அதிகாரிகள் மண்டையைப் பிய்த்துக்கொண்டார்கள். ஒருவழியாக விவகாரம் சித்தரஞ்சன் சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நீண்ட ஆலோசனை நடந்த பிறகே அனுமதி கொடுக்கலாம் என்று காவல் துறைக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தின் அத்தனை இடங்களிலும் மாலை மரியாதையுடன் அம்பேத்காருக்கு மரியாதை செய்துவிட்டு, ரத்த தான முகாம்களையும் நடத்திவிட்டு விஜய்யின் அடுத்த உத்தரவுக்காக காத்திருக்கிறார்கள் மன்றத்தினர்.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து பலத்த விவாதங்கள் எழும். பிறகு அப்படியே அமுங்கிவிடும் என்பதாக இருந்தது. கடந்த காலங்களில் விஜய்யின் பட ரிலீஸ்களின்போதும் இது நடந்தது. சில சமயங்களில் விஜய் படங்களுக்கு போதிய எண்ணிக்கையிலான தியேட்டர்கள் கிடைக்காதபோது, உதயநிதியுடன் அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடனும் மோதவிட்டுப் பார்த்தார்கள்.ஆனால்,உண்மையில்விஜய்அரசியலுக்குவரவிரும்பியது 2021-ல்தான். அப்போதுஅவரின் அப்பாஎஸ்.ஏ. சந்திரசேகர்அதற்கானவேலைகளில்தீவிரமாகஇருந்தார்..ஆனால், கடைசி நேரத்தில் அவர்களுக்கு வந்த சில அழுத்தங்கள் காரணமாக அந்த அரசியல் என்ட்ரியை தற்காலிகமாக தள்ளி வைத்தது விஜய் தரப்பு. ரஜினி அரசியலுக்குள் வருவதை கடைசி நேரத்தில் தடுத்தவர்களே, விஜய் அரசியலுக்கு வருவதையும் அப்போது தடுத்தனர். அப்படித் தடுத்தவர்கள், ‘வேண்டுமானால் 2024-ம் ஆண்டு தேர்தலின்போது அவரை கட்சி தொடங்க சொல்லுங்கள்’ என்று அப்போது ஐடியாவும் கொடுத்தனர்.அப்படி அந்த என்ட்ரி தாமதமானபோது, தந்தை எஸ்.ஏ.சி-யுடன் கசப்புணர்வு ஏற்பட்டு, அவரை சந்திப்பதைக்கூட முற்றிலுமாகத் தவிர்த்தார் விஜய். மீடியாவில் எஸ்.ஏ.சி உளறிக்கொட்டுவது தனக்கு பின்னடைவாக அமையும் என்று கருதியவர், அவரை தனது சினிமாவை விட்டே பிரித்தார்.இந்தநிலையில்தான், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் இயக்கத்தை கட்டமைக்க விஜய் முழு மூச்சாக முடிவெடுத்துள்ளார் என்று தகவல்கள் வருகின்றன. இதுபற்றி நம்மிடம் விரிவாக பகிர்ந்துகொண்டார் விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் அரசியல் ஆலோசகர் ஒருவர்...“விஜய் – பிரசாந்த கிஷோர் சந்திப்பு பல மாதங்களுக்கு முன்பே நடந்தது. ஆனால், பி.கே-வின் பாணி விஜய்க்கு செட் ஆகவில்லை. போட்டியில் முதலாவதாக ஓடும் குதிரையின் மீது பணம் கட்டுவதுதான் பி.கே-வின் வியூக பாணி. ஆரம்பத்தில் பா.ஜ.க-வுக்கு வியூகம் அமைத்தது தொடங்கி கடைசியாக தமிழகத்தில் தி.மு.க-வுக்கு வியூகம் வகுத்தது வரை பி.கே-வை உற்று கவனித்தால் இது புரியும். இந்தக் குதிரை ஜெயிக்கும் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே அவர் களம் இறங்குவார். ஆனால், இந்த வியூகம் விஜய் போன்ற புதிததாக அரசியல் கட்சி தொடங்குபவர்களுக்கு பொருந்தாது. அதனால்தான் பி.கே. விஜய்க்கு செட் ஆகவில்லை.அதன் பிறகு அரசியல் ஆலோசகர் சுனிலும் விஜய்யை சந்தித்தார். ஆனால், சுனில் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாலும், அவர் எடப்பாடியுடன் நட்பில் தொடர்வதாலும் அவரும் விஜய்க்கு செட் ஆகவில்லை. அதன் பிறகு நண்பர்கள் சிலர்தான் அவருக்கு அரசியல் ஆலோசனைகளை அளித்துவருகிறார்கள். சொல்லப்போனால், விஜய்யிடம் அரசியலில் உடனடியாகவும் அதிரடியாகவும் இறங்குவதற்கான திட்டங்கள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் அவருக்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் இருந்ததால், அந்தத் திட்டங்களின் தீவிரத்தை நாங்கள் சற்று குறைத்துள்ளோம். குறிப்பாக, கமல்ஹாசனைப் போல அரசியலுக்குள் நுழைந்துவிட்டு, வெளியேறவும் முடியாமல் முன்னேறவும் முடியாமல் சிக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் விஜய்..அதன்படி விஜய்க்கு சினிமா தளத்தில் இருக்கும் பெரும் செல்வாக்கை சிந்தாமல் சிதறாமல் ஓட்டுகளாக மாற்றுவதே எங்கள் இலக்கு. சில புள்ளிவிபரங்களை சொல்கிறேன்... இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பத்து லட்சம் ஃபாலோயர்ஸை தொட்ட உலகின் மூன்றாவது செலிபிரிட்டி விஜய். இதுவே இந்திய மற்றும் ஆசிய அளவில் நெம்பர் ஒன் செலிபிரிட்டி விஜய்தான். ஆசிய அளவில் கூகுலில் தேடப்படுவதில் முதல் நபராக இருக்கிறார் விஜய். ஆசியளவில் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகர்களில் டாப் 10-ல் இருப்பதும் விஜய்தான். சமீபத்தில் நடிகர் ஷாருக்கான், தனது ‘பதான்’ படத்தின் பிரமோஷனை விஜய்யை வைத்து விஜய்யின் ட்விட்டரில் வெளியிட்டதற்கு காரணம் இந்த மாஸ்தான். இப்போது எங்கள் நோக்கம் விஜய்யின் மக்கள் மன்றம் என்கிற ரசிகர்கள் செல்வாக்கை அரசியல்மயப்படுத்துவது; அதாவது அவரின் ரசிகர்கள் அனைவரையும் அரசியல் தொண்டர்கள் ஆக்குவது. இன்னொரு பக்கம், விஜய்க்கு சினிமாவில் இருக்கும் மாஸ் இமேஜை அரசியல் தலைவர் என்கிற இமேஜாக மாற்றுவது. இந்த வேலைகளை புஸ்ஸி ஆனந்த முன்னெடுத்து வருகிறார். 2024 அல்லது 2026 இந்த காலகட்டத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் விஜய்யின் அரசியல் என்ட்ரி நடக்கும். ஆனால், நிச்சயமாக அது ரஜினியின் அரசியல் என்ட்ரி முயற்சி போலவோ கமலில் அரசியல் என்ட்ரி போலவோ அமையாது” என்றார் விரிவாக. இந்த நிலையில்தான் வரும் மே மாதம் முதல் மாவட்டவாரியாக விஜய் மக்கள் இயக்கத்தின் கூட்டத்தை நடத்த மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, மாவட்ட அளவில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் வரை உள்ள அனைத்து நிர்வாகிகளும் உறுப்பினர்கள் படிவம், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான விவரங்களோடு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், உற்சாகம் அடைந்த விஜய் மன்றத்தினர், விரைவில் அரசியல் இயக்கத்திற்கான வெளிச்சம் தெரிய ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.மறுமுனையில் ஏழரைகள் எழாமலும் இல்லை. ஏற்கெனவே விஜய்க்கு வருமான வரித்துறை விவகாரத்தில் சில சிக்கல்கள் இருந்தன. இதை சரிக்கட்டித் தருவதாக பேச்சுவார்த்தை நடத்திய சிலர், ‘அசுர பலம் கொண்ட திராவிட கட்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்றால், பா.ஜ.க பக்கம் விஜய் இருப்பது நல்லது’ என்று தூண்டில் வீசியுள்ளனர். இதுபற்றியும் தனது நட்பு வட்டாரத்தில் விஜய் ஆலோசித்தபோது, ’பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செல்வதும் கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்றே சொல்லியிருக்கிறார்கள். இதுகுறித்தும் பலத்த யோசனையில் இருக்கிறார் விஜய்.லேட்டஸ்ட்டாக விஜய்யின் ரசிகர்கள் வட்டாரத்தில் பரபரக்கும் தகவல் இதுதான்... காஷ்மீரில் ‘லியோ’படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து, தற்போது சென்னை பிரசாத் லேப்பில் இண்டோர் செட் போடப்பட்டு 10 வது நாளாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்னும் 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. படப்பிடிப்பின் ஷாட் இடைவெளியிலும் நண்பர்கள், மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் சூடான அரசியல் ஆலோசனையில் ஈடுபடும் விஜய், ‘லியோ’ படத்தின் டீஸரை வெளியிடும்போது அரசியல் என்ட்ரி குறித்த பஞ்ச்சையும் சேர்த்தே வெளியிடுவார் என்பதே அந்த அனல் பறக்கும் தகவல்!