‘வந்த வேகத்தில் கானலாகும் உறவெல்லாம் கடவுளின் மனப்பிறழ்வில் உருவானவை’ - இப்படியொரு வினோதமான வாக்கியம் அவனது வாட்ஸ்அப் புரஃபைல் படத்தின் கீழ் எழுதப்பட்டிருந்தது. ஏதோ ஸ்டேட்டஸ் வைத்திருப்பான் என தொட்டுத் திறந்தால், ‘மறந்தாயே… மறந்தாயே… பெண்ணே… என்னை ஏன் மறந்தாய்?’ என்ற முப்பது வினாடி பாடல் ஒலித்தது..‘என்ன ஆயிற்று இவனுக்கு, திருமணம் முடிந்து ஆறு மாதங்கள்தானே ஆகின்றன, குடும்பத்தில் ஏதும் பிரச்னையோ?’ என்று மனம் கேள்விகளை எழுப்பியது. அவனைப் பற்றிய யோசனையில் இருந்தபோதே அவனது மற்றொரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் எனக்குக் காட்டியது. ஏதோ ஒரு திசையில் முகத்தை திருப்பியதுபோல் அவனது நிழற்படத்தை வைத்திருந்தான். கூடவே, ‘உன்னை மறக்க முடியல… உயிரை வெறுக்க முடியல…’ என்ற சோகப்பாடல் இசைந்தது. ஒரு நாளில் நான்கைந்து பாடல்களேனும் இப்படி வைத்துவிடுகிறான்..அவனது ஃபேஸ்புக்கும் கூட காதல் தோல்வி கவிதைகளால் ததும்பி வழிந்தது. ‘ஆண்களின் இதயத்தை விளையாடி உடைப்பதற்காகவே பெண்கள் படைக்கப்படுகிறார்கள்’ என்று உளறியிருந்தான். ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனிடம் கேட்டுவிட்டேன். “என்ன ராகவா, உனக்கும் உன் மனைவிக்கும் ஏதாவது பிரச்னையா?” என்று கேட்டதுதான் தாமதம்… “அதெல்லாம் இல்லையே” என்று பதறிக்கொண்டு பதில் கூறினான். “வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குன்னு எங்கிட்டு திரும்பினாலும் ஒரே சோகப் பதிவா இருக்கே, அதான் கேட்டேன்…” என்றேன். முதலில் மென்று விழுங்கியவன், பிறகு மெல்ல வார்த்தைகளை உமிழத் தொடங்கினான். சோகக்கீதம் அனிச்சையாக என் காதில் ஒலித்தது. “கல்யாணத்துக்கு முன்னாடி என் கூட வேலைப் பார்த்த ராதாவோட சிநேகம் ஆச்சு.ரெண்டும் பேருக்குள்ளும் நல்ல புரிதல். கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணப்ப, அவங்க வீட்ல ஏத்துக்கல… எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். எங்கேயாவது ஓடிப் போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னுகூட சொன்னேன். அந்த பயந்தாங்கொள்ளி கேட்கல. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி ‘கல்யாணத்துக்கு தயவுசெய்து வந்துராத ராகவா’ன்னு சொல்லிட்டு அழுதுட்டே போயிட்டா… அந்தக் காட்சி இன்னும் என் கண் முன்னாடி நிக்குது. என்னால இந்த நிமிஷம் வரைக்கும் ராதாவை மறக்க முடியல” என்று அவன் சொன்னபோது அவன் கண்கள் கசிந்தன. “சரி, அதுக்காக இப்படி சோகப்பதிவாவே இருக்கே. உன் மனைவி ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?” என்று கேட்டால், “அவளை ஹைடிங் பண்ணித்தான் போடுவேன்” என்றான்.. “என் மனைவியை ஒரு குறையும் சொல்ல முடியாது. ரொம்ப அப்பாவிப் புள்ள. அவளை சந்தோஷமாதான் பார்த்துக்கிறேன். அவளும் என் மேல பிரியமாகத்தான் இருக்கா, ஆனாலும் ராதா இல்லாத வெறுமையை யாராலும் நிரப்ப முடியாது” என்றான் தீர்மானமாக. அவனுடைய முன் முடிவான தீர்மானம் எனக்கு வித்தியாசமாக பட்டது. இப்போது கிடைத்திருக்கும் மனைவியையும் இவன் ஒப்புதல் பேரில்தானே திருமணம் செய்துகொண்டான். பழையனவற்றை கழிக்க விரும்பிதானே, புதியவளை ஏற்றான். அப்படியொரு சரியான வாழ்வு அமைந்தும், சோகத்தை ஏன் வலிந்து திணித்துக்கொள்கிறான்? மனிதர்கள் ஆழ்மனதில் நிலைத்துவிட்ட நிகழ்வுகளையும் உறவுகளையும் அவ்வளவு சீக்கிரம் விடுவித்துக்கொள்வதில்லை. வலிக்கும் என்று தெரிந்தும் வலிய சென்று நினைவுகளை மீட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அறுபட்ட விரலிலேயே சோக வீணையை மீட்டி, ரத்தம் வர ரசிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலர் மட்டும் தொடர்ந்து கனவில் வருவதும்கூட அப்படித்தான் நிகழ்கிறது. மனித மனம் இயல்பிலேயே சோகம் உள்ளிட்ட எதிர்மறை உணர்வுகளையே அதிகம் விரும்புகிறது. தன்னைத் தானே வருத்திக்கொள்ளவும் விழைகிறது. உதாரணமாக, குடிபோதை உடலுக்கு பழகிவிட்டால், அதிலிருந்து மீள்வது கடினம். அதுபோலவே இந்த காதல் வலி எனும் போதைக்கு பழகிவிட்டாலும், மீள்வது கடினம். ராகவன் அந்தத் தவறைத்தான் செய்கிறான். அவனாக மனதார நினைத்தால் அன்றி அவனை மாற்றுவது கடினம்..இங்கு எல்லோரிடமும் அழுது தீர்த்துக்கொள்ள அவரவர் வாழ்வில் ஒரு துயரம் எஞ்சியிருக்கிறது. அவையெல்லாம் கடந்தக் காலத்தில் நிகழ்ந்தவை. இல்லாத டைம் மிஷினில் டிராவல் செய்து, முடிந்துப்போன சம்பவங்களில் முடிச்சிப்போட்டு, மனதைக் கீறி காயப்படுத்தி ரத்தம் பார்த்த பிறகே திரும்புகிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் எனில் குரங்கு அதன் புண்ணைக் கீறி கீறி நக்குவதுபோலத்தான் இதுவும். இங்கே இன்னொன்றையும் குறிப்பிடுவது அவசியமாகிறது. ’அவளை மறக்கத்தான் குடிக்கிறேன்’ என்று மது போதையையும்கூட ஆண்கள் நியாயமாக்குகிறார்கள். உண்மையில் மனிதர்கள் சோகங்களுக்காக குடிப்பதில்லை . உடலுக்குப் பழக்கிவிட்ட போதையை விரும்பியே பலரும் தொடர்ந்துக் குடிக்கிறார்கள். குடியை நியாயப்படுத்த அவரவருக்கு ஒரு கெளரவக் கோப்பை தேவைப்படுகிறது, அவ்வளவுதான்! காதல் தோல்வியின் வலி ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதுபோல் இந்த சமூகம் கட்டமைத்துவிட்டது. காதலில் பெண்கள் மட்டுமே ஏமாற்றுக்காரர்கள், ஆண்கள் தியாகிகள் என்பதுபோல் கவிஞர்கள் பலரும் பிதற்றுகிறார்கள். ஆணின் காதல் தோல்வியை பகிரங்கப்படுத்துவது அவனுக்கு கெளரவம் எனவும், பெண்ணின் காதல் தோல்வியை மறைப்பதுதான் குடும்பத்தின் கெளரவம் எனவும் சமன்பாடற்ற சூழலே சமூகத்தில் நிலவுகிறது..ஒருவன் சோம்பேறியாக, திருடனாக, ஊதாரியாக, தவறானவனாக தெரியவருகையில் அவனைக் காதலிக்கும் பெண் அந்தக் காதலை கைவிடுதல்தான் நியாயம். எப்படி இருந்தாலும் காதலைக் கைவிடக்கூடாது என பெண்ணைப் புறம் பேசி காதல் தோல்வியைக் கொண்டாடுவது அயோக்கியத்தனத்தை அன்றி வேறென்ன? இந்த நேரத்தில் பத்மாவின் கதையையும் சொல்லியாக வேண்டும். அவளது வாழ்வு முழுவதும் சோகத்தின் சாயம் பூசப்பட்டது. சிறு வயதிலிருந்தே தாயிடம் மட்டுமே வளர்ந்தவள். அவளின் தந்தை வேறு பெண்ணுடன் கிளம்பிவிட்டார். சிங்கிள் மதராக பத்மாவை வளர்த்துப் படிக்க வைத்தது எல்லாமே அவளின் அம்மாதான். தந்தையின் பாசத்தை துளியும் பெறாத பத்மாவின் மனதில், ‘ஆண்கள் பெரும்பாலும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல’ என்ற தீர்மானப் பலகை ஆணியடித்து பொருத்தப்பட்டிருந்தது. இப்படியான கல் மனதைக் கரைக்க வந்துசேர்ந்தவன்தான் ரவி. பெண்ணடிமைத்தனம் தன்னால்தான் நீக்கப்படவிருக்கிறது என்ற உச்ச நம்பிக்கையில் இருக்கும் பெண்ணியவாதியும்கூட. பத்மாவின் தைரியத்தையும் ஆண்களை எதிர்க்கும் குணாதிசயத்தையும் வியந்தோதி, அவளாகவே நின்றான். ஆண்களுக்கெதிரான அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டி வரவேற்றான். ஒட்டுமொத்த ஆண் உலகத்தில் தன்னை புரிந்தவன் ரவி மட்டும்தான் என்ற பெருமிதத்தில் திளைக்கத் தொடங்கினாள் பத்மா. அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவன் மீதான மதிப்பை உயர்த்தியது. நாட்கள் செல்லச் செல்ல அதுவே காதலாகவும் மாறியது..உண்மையில் புரிதல் என்பது வேறொன்றுமில்லை. யார் நமக்கு சாதகமாக, யார் நமக்கு பிடித்ததை செய்கிறார்களோ அவர்களே நம்மை புரிந்தவர்கள் என்ற முடிவிற்கு நாம் வந்துவிடுகிறோம். அப்படிதான் ரவியின் மீதான காதலையும் கனவுகளையும் வளர்த்துக்கொண்டாள் பத்மா. வாழ்நாள் முழுவதும், தான் சொல்வதைதான் இவன் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அவளோடு வளரத் தொடங்கியது. காலப்போக்கில் ரவியின் சிறு தவிர்ப்புக்கும் தவித்துப்போனாள். ப்ளூ டிக் காட்டாத அரை நொடிக்குக்கூட ஆவேசமானாள். அவளுக்காகவே கையும் போனுமாக காத்திருக்க ஆரம்பித்தான் ரவி. அவனது இதர வேலைகள் முடங்கிப்போயின. அவளை ஆவேசப்படுத்தக் கூடாதென்ற பதற்றத்திலேயே அவன் நாட்கள் நகரத் தொடங்கின. நாளைடைவில் அவை நரகமாகின. ஆசுவாசத்துக்காக சற்றே அவன் ஒதுங்கத் தொடங்கினாலும், ‘நீ இல்லாவிட்டால் இறந்துபோவேன்’ என்று காதலின் பெயரில் மிரட்டத் தொடங்கினாள். பத்மாவின் அதீத அன்பில் மயங்கியவன், பின்னாளில் அதுவே ஆக்ரோஷமாக மாறுவதை கண்டு அஞ்சினான். ‘ஏன்டா இவளைக் காதலித்தோம்?’ என்று நினைக்கும் அளவிற்கு காதலில் காரப்பொடியை தூக்கலாகவே தூவினாள் பத்மா. பெண்ணியத்திற்கு ஆதரவாக பேசும் ஆணாக இருந்தாலும் அவனது சுயம் பத்மாவின் முன் தரைத் தாழ விரும்பவில்லை. பயமும் தன்மானமும் பத்மாவிடமிருந்து ரவியைப் பிரித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பத்மாவை நிராகரிக்கத் தொடங்கி, ஒருகட்டத்தில் கண்காணாமல் தொலைந்துப் போனான். ரவியின் பிரிவு பத்மாவின் வாழ்வையே புரட்டிப் போட்டது. யார் இன்றி தன்னால் வாழ முடியாதென நினைத்தாளோ, இப்போது அவனே இல்லை என்பதை அவள் மனம் நம்ப மறுத்தது. ‘அன்பைத்தானே அள்ளிக் கொட்டினேன், அதற்காகவா பயந்தான், விலகினான்?’ என்று குழம்பித் தவித்தாள். ஓட்டெடுப்பு நடத்தாமலேயே அவளது நம்பிக்கையற்ற ஆண் சமூகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியானான் ரவி..முன்பைவிட மூர்க்கமானாள் பத்மா. தீவிர பெண்ணியவாதியாக இருந்தவள், படு பயங்கர பெண்ணியவாதியானாள். ஒரு பக்கம் ஆண்களைத் திட்டிக்கொண்டும், மறுபக்கம் காதலின் வலியைக் கட்டிக்கொண்டும் வாழ்க்கையின் வசந்தங்களைத் தொலைத்தாள். இவளது வரிகளில் வழிந்த சோகத்தை துடைக்க வந்த ஆண்களைக்கூட வறுத்தெடுத்தாள். எளிதாக முடிக்க வேண்டியதை ஏன் இவ்வளவு கடினமாக்குகிறார்கள்? காயங்களும் காலப்போக்கில் உதிர்ந்துவிடும் மலரென்றும், கனிந்துவிடும் கனியென்றும் இவர்களுக்கு எப்படி புரியவைப்பது? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் தன் ஒட்டுமொத்தக் குறைகளையும் சகித்துப்போகும்படியான ஒருவரைத்தான் காதல் எனும் பெயரில் மனிதர்கள் தேடுகிறார்கள். காதலில் வெற்றிபெற்றவர்களின் கதைகளைவிட இங்கே காதலில் தோல்வியடைந்தவர்களின் கதைகளே அதிகம் பேசப்படுகின்றன. காதலின் வெற்றிக்கதை ஒருநாளைய கொண்டாட்டம் எனில் காதலின் தோல்விக்கதை வாழ்நாள்தோறும் தொடரும் போதையாகிவிடுகிறது. அதனாலேயே சினிமாக்களிலும்கூட காதல் தோல்விகளே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன. காதல் தோல்வியில் ஒருவன் இறந்துப்போவதுதான் காதலை உன்னதமாக்கும் என்று காதலின் இலக்கணத்தை வடித்துவிட்டார்கள். சோகத்தை போதையாக்கியவர்கள், அதிலிருந்து மீள விரும்புவதில்லை. இன்னொரு பிரிவினரும் இருக்கிறார்கள். இயலாமையால் காதலை தொலைத்தவர்கள் அவர்கள். அதனாலேயே அதிக குற்றவுணர்ச்சியில் உழல்கிறார்கள். அந்த குற்றவுணர்வை மறைக்கவே சிலர் காதலையும் குற்றம் சொல்கிறார்கள்.. உறவுகளைப் பொருட்படுத்தாது தன் சுயநலத்துக்கு தீனி போட்டுப் பழக்கியவர்களால், அதிலிருந்து வெளியேற முடிவதில்லை. சுழன்று சுழன்று தவிக்கிறார்கள். இதற்கான தீர்வு, சோகத்தின் மீது மோகம் கொள்வதை நிறுத்தினாலே போதும், மனிதர்களுக்கு மனஅழுத்தம் குறைந்து, ஆயுள் பெருகும். நிறைவாக ஒன்று… நம் எண்ணம்போலவே உறவுகளை உருவாக்க முயன்று தோற்கிறோம் என்பதுதான் உண்மை. சக மனிதர்களுக்காக தன்னை கொஞ்சமேனும் மாற்றிக்கொள்பவர்களே இந்த வாழ்வை மகிழ்வோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்! அறம் பேசுவோம்