“அன்று காதல் பண்ணியது... உன் கன்னம் கிள்ளியது... அடி இப்போதும் நிறம் மாறாமல் நெஞ்சில் நிற்கிறது...” அன்று ஆசை நாயகன் காதல் பண்ணியது இன்னமும் நெஞ்சில் நிற்கிறதுதான். ஒரு ஹீரோவுக்கு முதல் வெற்றி என்பது தலைப்பிரசவம் போன்றது. அப்படி அஜீத்தின் திரைப் பயணத்தில் முதல் வெற்றியாக மட்டுமல்லாமல் மாபெரும் வெற்றியாகவும் அமைந்தது ‘ஆசை.’ தொடர்ந்து 285 நாட்கள் தமிழக மக்களை ஆசை ஆசையாக தியேட்டர்களில் கட்டிப்போட்ட திரைப்படம் அது. இளமையும் குறும்பும் கொப்பளித்த அந்த அஜித்தை பார்த்தால், இன்றைய அஜித்தே பொறாமைப்படுவார். அந்த வாய்ப்பை அஜித்துக்கு அளித்தவர் இயக்குநர் வசந்த் எஸ் சாய். அஜீத்தின் பிறந்த நாள் ஸ்பெஷல் குமுதம் இதழுக்காக அவரிடம் பேசியதிருந்து....உண்மையை சொல்ல முடியுமா... ‘ஆசை’ படத்துக்கு எப்படிப்பட்ட ஹீரோவைத் தேடினீங்க? “16 வயதினிலே படத்தால கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினின்னு மூணு பேருமே வேற லெவலுக்குப் போனாங்க. அதுபோல என் படத்துலயும் ஹீரோ, ஹீரோயின், வில்லன் மூணு ரோலும் ரொம்ப ஸ்ட்ராங்கானதுங்கிறதுனால, மூணு பேரும் ரொம்பப் பெரிய ஆளா வருவாங்கங்கிற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்தது. அதுக்கு ஏத்த மாதிரியான நடிகர்களைத்தான் தேடினேன். குறிப்பா, ஹீரோ. அந்த மாதிரி மக்கள் மனசுல நிக்கக்கூடிய, மக்களுக்குப் என்னென்னைக்கும் பிடிக்கக்கூடிய ஒரு ஹீரோவா இருக்கணும்னு நினைச்சேன். ஜெனரலாவே ஹீரோன்னா அழகா இருக்கணும், அந்தப் படத்துக்காக அழகனை மட்டும் இல்ல, ஒரு பேரழகனையே நான் தேடினேன். அப்படி எனக்குக் கிடைச்சவர்தான் அஜீத்.”.”ஒரு ஹீரோவுக்கு அழகு மட்டும் போதுமா?“எப்பவுமே எனக்கு அழகுங்கிறது ஒரு அப்சஷன். சிம்ரன் ஏற்கெனவே அழகுதான், அந்த சிம்ரனை இன்னும் அழகா காட்றதுக்கு கவலைப்பட்ட ஒரே ஆள் நான்தான். அதுக்காக ஒவ்வொரு தடவையும் எக்ஸ்ட்ரா கேர் எடுக்கற ஆள். அழகாவும் இருக்கணும், அட் த சேம் டைம், மேன்லியாவும் இருக்கற ஒருத்தரை தேடிகிட்டிருந்தேன். டி.வியில வந்த ஒரு விளம்பரப் படத்துலதான் நான் முதன்முதலா அஜித்தைப் பார்த்தேன். அப்புறம்தான் அவர் ஏற்கெனவே ’அமராவதி’படத்துல நடிச்சவர்ன்னு தெரியவந்தது. அதுக்கப்புறம் அவரைப் பார்க்கறதுக்காக வரச் சொன்னேன். ஆழ்வார்பேட்டையில இருந்த ஆஃபீசுக்கு பைக்ல தனியாதான் வந்தாரு. அவரைப் பார்த்தவுடனே எனக்கு ரொம்பப் பிடிச்சிடுச்சி. அந்த ஸ்மைல் எல்லாருக்குமே பிடிக்குமே? ’நான் தேடிகிட்டிருந்த அழகன் இவர்தான்னு பார்த்தவுடனே தெரிஞ்சுது. தொடர்ந்து தமிழ் சினிமாவுல ஒரு பெரிய ஆளா வரணும்கிற ஒரு ஆர்வம் இருக்கான்னு அஜித்துகிட்ட தனியா பேசிப் பார்த்தேன். அந்த ஆர்வம் அவருக்கு ரொம்பவே இருந்தது. அவர் பழகறதுக்கு ரொம்ப ப்ளசன்ட்டான பர்ஷன். அந்தப் படம் முழுக்க எனக்கும் அவருக்கும் நடுவுல ஒரு அன்பும் நட்பும் ஒரு பியூட்டிஃபுல் ரிலேஷன்ஷிப்பும் இருந்தது. அது ஒரு ப்ளசன்ட் மெமரி.” .அஜீத்தை வைத்து இயக்கியதில் மறக்க முடியாத ஒரு விஷயம்? “ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் ஈஸ் த பெஸ்ட் இம்ப்ரஷன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி அவர் அழகுன்னு நான் நினைச்சதை ஆடியன்ஸ் மனசுலயும் பதிய வைக்க விரும்பினேன். அவரைப் பார்த்தவுடனே அழகுன்னு ஆடியன்ஸுக்கும் தெரியும், ஆனாலும் அதை அவங்களோட சப் கான்ஷியஸ் மைண்ட்ல ஏத்தணும்கிறதுக்காக, நான் அவருக்கு வெச்சிருந்த இன்ட்ரொடக்ஷன் சீனே என்னன்னா... மூணு குட்டிப் பொண்ணுங்க குளத்துல குளிச்சிகிட்டிருப்பாங்க. அஜித்தும் குளிப்பாரு, அவர் குளிச்சி எழுந்திருக்கும்போது அந்த மூணு குழந்தைங்களும் வெட்கப்பட்டு சிரிச்சுகிட்டே இவரைப் பார்த்து ‘எங்க மூணு பேரையும் நீ கல்யாணம் பண்ணிக்கறியா?’ன்னு கேட்பாங்க, உடனே அஜித், ’ஏன்’னு கேட்பாரு. அதுக்கு அவங்க, ’ஏன்னா நீ கொஞ்சூண்டு அழகா இருக்கே’ன்னு சொல்வாங்க. அந்த ’அழகா இருக்கே’ங்கிறதை ஆடியன்ஸ் மைண்டுல ஏத்தணும்கிறதுதான் என்னோட எய்மா இருந்தது. அதுக்காகதான் அந்தக் காட்சியை ரொம்பப் புடிச்சி பண்ணேன்.”உங்களால் முதல் வெற்றிப் படத்தைப் பெற்றவர், இன்னைக்கு இவ்ளோ பெரிய ஸ்டாரா வந்திருக்கறதைப் பத்தி எப்படி ஃபீல் பண்றீங்க? “அவர் இன்னைக்கு இவ்ளோ பெரிய ஆளா வந்திருக்கறதுங்கிறது, அவரே ஒரு படத்துல சொன்ன மாதிரி அவருடைய சொந்த உழைப்பு... ஒவ்வொரு செங்கல்லும் அவரே வெச்சுக் கட்டினது. ’ஆரம்ப காலகட்டத்துல நாமளும் அதுல இணைஞ்சோம்கிறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. ‘ஆசை’ படப்பிடிப்பு சமயத்துல அவர் ’ராபர்ட் ரெட் ஃபோர்ட்’மாதிரி இருக்கார்னு உதவியாளர்கள்கிட்ட அடிக்கடி சொல்லுவேன். அவரை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போலேர்ந்து அதைத்தான் சொல்லிகிட்டிருக்கேன். அவரைப் போலவே தான் இவரும் இருப்பார். நம்ம ஊர் ’ராபர்ட் ரெட் ஃபோர்ட்’ அஜீத் தான். ஹாலிவுட்லயேகூட ஜென்ரலா நிறைய ஸ்டார்ஸ் இருப்பாங்க. ஆனா ’ஸ்டார் ஆக்டர்ஸ்’ கம்மி. அப்படிப்பட்ட ஸ்டார் ஆக்டரா அஜீத் வருவாருன்னு அப்பவே நம்பினேன்.”.அஜீத்திடம் நீங்க வியக்கற விஷயம் என்ன? “தன்னோட ஆரம்பகால தோல்விகளையெல்லாம் வெற்றிப் படிக்கட்டா மாத்தி இன்னைக்கு இந்த உயரத்துல உட்கார்ந்திருக்காரே அதுதான் நான் வியக்கற விஷயம். எளிமையா இருக்கறது, நிறைய பேருக்கு வெளியில தெரியாம உதவி பண்ற குணம், இந்த மாதிரி அவரைப் பத்தி நான் கேள்விப்படற எல்லாமே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவருக்கு இருக்குற இவ்ளோ பெரிய ஃபேன் பாலோயர்ஸைப் பார்த்தால் எனக்கு அதைவிட ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.”அஜீத் இப்போ ரொம்ப ரிசர்வ்டு டைப்பா இருக்கறார், மீடியாகிட்டல்லாம் பேசவே மாட்டேங்கிறார்... ஆனா ஆரம்ப காலத்துல அவர் ஜோவியலா இருந்தாரா? “என்கூட வொர்க் பண்ணப்போ என்கிட்ட எப்பவும் ரொம்ப நல்லா கலகலப்பா, ரொம்ப ஃப்ரண்ட்லியா பேசுவார். ஒரு பாசிடிவ் எனர்ஜியை எப்பவும் ஸ்பிரட் பண்ணிகிட்டே இருப்பார்.”உங்க குரு பாலச்சந்தரால ஒரு கட்டத்துக்கு மேல ரஜினியை இயக்க முடியாமப் போயிடுச்சி. ஆனா உங்களால இப்போ அஜீத்தை இயக்க முடியுமா? “ஏன் லேட்டாகூட ரஜினியை வச்சு ’தில்லுமுல்லு’படமெல்லாம் டைரக்ட் பண்ணினாரே? அஜீத்தை மறுபடி இயக்குற சூழல் அமைஞ்சா ’ரிதம்-2’ மாதிரி நல்ல கதையை கண்டிப்பா நான் பண்ணுவேன். ஏன்னா என்னோட சிக்னேச்சரை ... என்னோட டைப் ஆஃப் ஃபிலிமை நான்தானே கொடுக்க முடியும்?”.அஜீத் பிறந்த நாளுக்கு உங்களின் வாழ்த்துச் செய்தி என்ன? “அவரும் அவர் மனைவியும் குழந்தைகளும் எப்பவும் மகிழ்ச்சியாக வாழ எனக்கும் அஜீத்துக்கும் பிடிச்ச சாய்ராம் கிட்ட ப்ரே பண்ணிக்கறேன்.”