செல்பி எடுக்க முயன்ற பெண்ணை தாக்கிய மான்..!

இங்கிலாந்தில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண்ணை முதுகில் தாக்கிய மான்..!
செல்பி எடுக்க முயன்றபோது, இங்கிலாந்தில் பெண் ஒருவர் காட்டு மானால் தாக்கப்பட்டார்.
லண்டன் ரிச்மண்ட் பூங்காவில் சுமார் 1,000 இலவச ரோமிங் மான்கள் உள்ளன. இளம் பெண் ஒருவர், லண்டனின் ரிச்மண்ட் பூங்காவில் மானால் தாக்கப்பட்டார். ஏனெனில் அந்த இளம்பெண், முட்டாள்தனமாக காட்டு மிருகத்தை நெருங்கிச் செல்ல முயன்றார்.
அந்த பெண், தனது புத்தியில்லாமல் மானை நோக்கிச் செல்ல முயன்றார். அப்போது, கேமரா மானிடம் சிக்கிக்கொண்டது. அந்த மான், இளம்பெண்ணை அவரது முதுகில் பலமாக உதைத்தது. 
இந்த நிலையில், ராயல் பார்க்ஸ் காவல்துறையினர், டுவிட்டரில் அந்த பெண்ணின் தவறை சுட்டிக்காட்டி இது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.
"அக்டோபர் 11ஆம் தேதி ரிச்மண்ட் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை பதிவிட்ட போலீசார், நீங்கள் ஏன்? 50 மீ தொலைவில் இருக்க வேண்டும் என்பதை விளக்கியுள்ளனர்.  அவை காட்டு விலங்குகள் மற்றும் உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தும்" என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்