கட்டிப்பிடித்து தூங்க இவ்வளவு சம்பளமா?…

கட்டிப்பிடித்து தூங்க இவ்வளவு சம்பளமா?…

உலகில் சம்பாதிக்க பல வழிகள் உள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மேரி என்ற பெண்மணி எந்தவொரு கஷ்டமும் இன்றி, ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5 ஆயிரம் சம்பாதிக்கிறார். 

அமெரிக்காவில் கன்சாஸ் சிட்டியில் வசிக்கும் மேரி என்ற பெண் அனைவரையும் கட்டிப்பிடித்து உறங்க ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் வசூல் செய்கிறார். ஒரு நபருக்கு இங்கு உறங்க 4 மணி நேரம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

மேரிவுடன் உறங்க வேண்டும் என்றால், உறங்க வரும் நபர் தங்கள் உடலை முழுமையாக கவர் செய்யப்பட்ட ஆடை அணிந்து வரவேண்டும், அத்துடன் அந்த நபர் உடல் ரீதியாக எந்த ஒரு தவறான எண்ணங்களுடன் வரக்கூடாது என சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேரி இதுவரை திருமணமான, திருமணமாகாத நபர்கள், பெண்கள் மற்றும் விவாகரத்து பெற்றவர்கள் என பலருடன் உறங்கியுள்ளார். 

இதுகுறித்து மேரி கூறுகையில் ”இவ்வாறு கட்டிப்பிடித்து உறங்கினால், உடலில் இருந்து ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது” என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்