பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் சீனாவுக்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்!

பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் சீனாவுக்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்!

கடந்த 2 ஆண்டுகளில் 629 பாகிஸ்தான் பெண்கள், சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக பணத்துக்காக விற்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ஏழை பெண்கள், சீன மணமகன்களுக்கு அவர்களது குடும்பத்தினரால் பணத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 629 பெண்கள் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. 

பாகிஸ்தான் பெண்கள் பலர், திருமணம் செய்யப்பட்டு சீனாவுக்கு கடத்தப்பட்டு விபச்சாரத்துக்கு தள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து சீனாவுக்கு மணமகள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இருப்பினும், பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்படும் என்பதால், பாகிஸ்தான் அரசு தயக்கம் காட்டி வருகிறது. பெண்கள் கடத்தல் வழக்கில் சீனர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்