வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்

வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்.. கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு..
திண்டிவனத்தில் வரதட்சணையாக ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாக கணவர் மீது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் பரத்குமார். அவருக்கு வயது 36. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி கவிதா (வயது 29). இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. 
திண்டிவனத்தில் கூட்டுக் குடும்பமாக வசித்த வந்த கவிதாவுக்கு செங்கல்பட்டில் ஆசிரியை பணி கிடைத்ததால், கணவருடன் செங்கல்பட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வாகன விபத்தில் காயமடைந்த கவிதா, தாய் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு பின்னர் செங்கல்பட்டு வந்துள்ளார். இதனிடையே, திண்டிவனத்தில் இருந்த கணவர் பரத்குமாரை செங்கல்பட்டுக்கு அழைத்தபோது அவர் வரவில்லை. உடனடியாக கவிதா, தனது கணவர் வீட்டுக்கு நேரில் சென்று செங்கல்பட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது, பரத்குமார், அவரது தாய் சம்பூரணம், சகோதரர் நரேஷ்குமார், அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அதிர்ச்சி அடைந்த கவிதா, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். கணவர் பரத்குமார் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்