போலி பெண் மருத்துவர் சிறையில் அடைப்பு..!

இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு.. போலி பெண் மருத்துவர் சிறையில் அடைப்பு..!
திருச்சியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு இளம்பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா வேப்பந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் அடைந்துள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி மண்ணச்சநல்லூர் துறையூர் சாலையில் ராஜி என் பெண் மருத்துவர் கருக்கலைப்பு செய்துள்ளார். 
சரியான முறையில் கருக்கலப்பு செய்யாத நிலையில், இளம் பெண்ணுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த பெண், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு கருப்பை நீக்கப்பட்டு, சிறுகுடல் மற்றும் சீறுநீர்ப்பையிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த பெண், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 
இந்த நிலையில், ராஜி என்பவர்  10ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு போலி டாக்டராக பணியாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்