ரஜினிகாந்த் ஒருபோதும் கட்சி தொடங்க மாட்டார்.. கே.எஸ்.அழகிரி அதிரடி கருத்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியல் கட்சியை தொடங்க மாட்டார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். 

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து அழகிரியிடம் வினவியபோது, ரஜினிகாந்த் ஒருபோதும் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என அதிரடியாக கூறியுள்ளார். 

அதே நேரத்தில் ரஜினிகாந்த் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் கூட, அதில் தமிழருவி மணியன் இருக்க மாட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். கே.எஸ்.அழகிரி பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.78%
 • தவறானது
  17.78%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.92%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.51%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்