சிஏஏவுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதற்கு டிடிவி கண்டனம்…

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய இஸ்லாமிய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டிய கடமை காவல்துறையினருக்கு இருக்கிறது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது” என பதிவிட்டுள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.4% -
அனுபவக் குறைவு
24.39% -
கிரிக்கெட் அரசியல்
35.54% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.67%