பட்ஜெட் தாக்கல் நிறைவு- பிப்-17 வரை சட்டபேரவை ஒத்திவைப்பு


தமிழக சட்ட பேரவையை வரும் பிப்ரவரி 17ம் தேதி வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார். மேலும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் முடிவடைந்த பின் இன்றைய அலுவல்கள் முடிந்ததாக தனபால் அறிவித்துள்ள்ளார்.

இன்று தமிழக அரசின் கடைசி முழு பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல கவர்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில்  தொடர்ந்து பத்தாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது தமிழக பட்ஜெட்டில் அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 34,181.73 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் உரை முடிவடைந்த நிலையில் சட்ட பேரவையை வரும் பிப்ரவரி 17ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். மேலும் இன்றைய அலுவல்கள் பணிகள் நிறைவடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17ம் தேதிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். பட்ஜெட் தாக்கல் முடிவடைந்த பின் இன்றைய அலுவல்கள் முடிந்ததாக தனபால் அறிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்