ரவுடி பினு ஸ்டைலில் பிறந்த நாள் கொண்டாட்டம்... 4 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

ரவுடி பினு ஸ்டைலில் பிறந்த நாள் கொண்டாட்டம்... 4 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு!

ரவுடி பினு ஸ்டைலில் பிறந்தநாளை கொண்டாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி பினு ஸ்டைலில் பிறந்த நாளை கொண்டாட இளைஞர்கள் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளனர். ரவுடி பினு பொது இடத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது, ரவுடி பினு ஸ்டைலில் இளைஞர்கள் தங்களது பிறந்த நாளையொட்டி, பொது இடத்தில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை கிண்டியிலுள்ள கணபதி காலனி தெருவில், ஆபத்தான முறையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலையில் கிண்டியில் ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த ஆகாஷ் (20) என்பவர் தனது பிறந்த நாளையொட்டி, நண்பர்களுடன் பட்டாக் கத்தியால் கேட் வெட்டி கொண்டாடியுள்ளார். 

இதனை பார்த்து அச்சம் அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ரோந்து போலீசாரை கண்டதும், அங்கிருந்த இளைஞர்கள் பைக் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இருப்பினும், அந்த பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான டிக்-டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதன் அடிப்படையில், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த ஆகாஷ் (20), ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த மதன் நாயுடு (21), ஆலந்தூரைச் சேர்ந்த சதீஷ் (19), சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜானகிராமன் (23) ஆகியோர் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். மற்ற இளைஞர்களை அழைத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.37%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  5.14%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.56%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்