ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் தேதியை அறிவித்த பிசிசிஐ...

2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் இந்த ஆண்டு 13வது சீசனாக நடைபெறவுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்தார்.  

இதில் பேசிய அவர் இறுதி போட்டி மும்பையில் நடைபெறும் என அறிவித்தார். இந்த முறை ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடத்தப்படும் முறையை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்றுவீரரை களமிறக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்