தேர்தல் களத்திற்கு தயாராகும் மக்கள் நீதி மய்யம்
2021-ஆம் ஆண்டு நடக்க இருக்க தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் இப்போதே முழு வீச்சில் தயாராக தொடங்கி இருக்காங்க. இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல குரல்கள் எழுந்து வந்தாலும் இப்போது மக்களிடம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பல கட்சிகள் தங்களோட கட்சியின் நல்ல விஷயங்களை பற்றி மக்கள் கிட்ட எடுத்து சொல்லி மெல்ல காய் நகர்த்திட்டு வராங்க.
இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்னைக்கு நடந்தது. திடீரென அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு அதன்பின் மின்னல் வேகத்தில் கட்சி பணிகளை செய்து வருகிறார் கமல்.
கொரோனா காலகட்டத்தில் அக்கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மக்களை மெல்ல மெல்ல திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு மேலும் மக்களிடம் தங்களது கட்சியை சென்றைடைய வைக்க கமலும், கட்சி தொண்டர்களும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதற்கிடையில் கட்சி பணிகளையும், களப்பணிகளையும் துரிதப்படுத்துகுறித்தும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்தும் மாவட்ட செயலர்களுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் எந்த அளவுக்கு அவருக்கு கைகொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு