ஓபிஎஸ் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் - ஸ்டாலின் விமர்சனம்

ஓபிஎஸ் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் - ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்ட பேரவையில் துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்ட பேரவையில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பத்தாவது பட்ஜெட்டை இன்று காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக் அரசு வெளியிட்டது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் துணை முதல்வர் தாக்கல் செய்துள்ள பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது என விமர்சனம் செய்தார். மேலும் திமுக ஆட்சியில் இருந்த விலகிய  போது 1 லட்சம் கோடியாக இருந்த கடன் சுமை தற்போது 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதில் எந்தவித தொலைநோக்கு திட்டமும் இல்லை என்று கடுமையாக சாடினார்.

மேலும் குறிப்பிட்ட இலாகாகளில் உள்ள அமைச்சர்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மர்மம் என்ன என்று அவர் கேள்வி எழுபிய அவர், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நபர் மீது 50 ஆயிரம் ருபாய் கடனை அதிமுக அரசு சுமத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்