செருப்பை கழற்ற சொன்ன விவகாரம்: டிஜிபி.,க்கு நோட்டீஸ்!

திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை வைத்து கழற்றவைத்த விவகாரத்தில் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக வனத் துறை அமைச்சராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலையில் யானைகள் முகாமை தொடங்கிவைக்க சில தினங்களுக்கு முன்னர் சென்றார்.அப்போது, தூரத்தில் நின்றிருந்த பழங்குடியின மாணவர் ஒருவரை அழைத்து தனது செருப்பை கழற்றிவிடுமாறு கூறினார். அந்த சிறுவனும் ஏதும் அறியாது அமைச்சரின் செருப்பை கழற்றி விட்டு சென்றார்.நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மூத்த அதிகாரிகள் ஆகியோர் உடனிருக்கும் போது நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பழங்குடியின சிறுவனை அழைத்து செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார். என்னுடைய பேரன் போல் நினைத்துதான் காலணியை கழற்ற சொன்னேன். இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. செருப்பு பக்கிளை கழட்டிவிடு என்று சொன்னதில் பெரிய தவறு இல்லை என நினைக்கிறேன் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து , அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்