வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக சீமான் மீது வழக்கு...

வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2.10.2018ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் .

ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்ட போது, தமிழக அரசு சட்ட சபையை கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது தமிழக அரசு என்று குற்றம்சாட்டிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்றார்கள். ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே, அதற்கான நிதியும் ஒதுக்கவில்லையே என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால், நாங்கள் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்று தமிழக அரசு சொல்லிக்கொண்டிருக்கின்றது.  அப்படி என்றால் அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன? எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம் என கிண்டலாக பேசினார்.

இதனை தொடர்ந்து கோட்டுர்புரம் காவல்துறை ஆய்வாளர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 153,505,(1) (பி) (சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்