டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்த ப.சிதம்பரம்!

டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. அதனால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்க முடியவில்லை. இந்நிலையில் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ‘ஆம் ஆத்மி கட்சி வெற்றியடைந்துள்ளது. பிரித்தாளும் மோசமான சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவை டெல்லி மக்கள் தோற்கடித்துள்ளனர்.

2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் மக்கள் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை காட்டிய டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார். காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத நிலையில் ப.சிதம்பரம் ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்