நாட்டின் பொருளாதாரம் ஐசியு.,வில் உள்ளது.. ப.சிதம்பரம் விமர்சனம்!

ராஜ்யசபாவில் பேசிய ப.சிதம்பரம், பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டதாக குற்றஞ்சாட்டினார். மிகவும் திறமையற்ற, தகுதியற்ற மருத்துவர்களால் இந்திய பொருளாதாரம் ஐசியு.,வுக்குள் தள்ளப்பட்டு விட்டதாக விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர், ‘பொருளாதாரம் ஐசியு.,வில் இல்லை. அதனை இவர்கள் தான் வற்புறுத்தி தள்ளியுள்ளனர். அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற மருத்துவர்கள், தங்களுக்கு தகுதி இல்லை என்பதையும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் போன்ற திறமையான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் போன்றவர்களும் வெகு காலம் இருக்க முடியாது’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்