ஆத் ஆத்மியுடன் கூட்டணி? காங்கிரஸ் எம்.பி பதில்!

ஆத் ஆத்மியுடன் கூட்டணி? காங்கிரஸ் எம்.பி பதில்!

டெல்லி சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. மாலை 6 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 56 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை அமைக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லியில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். 

பாஜகவின் இந்த கருத்தால். பிப்ரவரி 11ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கேரளா மாநிலம் திரிசூர் தொகுதி எம்.பி பி.சி.சாக்கோ கூறுகையில், ‘டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைப்பது என்பது தேர்தல் முடிவை பொறுத்தே அமையும். முடிவுகள் வெளியான பிறகு தான் அது பற்றி விவாதிக்க முடியும். கருத்துக்கணிப்புகள் சரியாக இல்லை என நினைக்கிறேன். இதனால் கணித்ததை விட காங்கிரஸ் சிறப்பான வெற்றி பெறும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்