விஜயை சும்ம விடக்கூடாது...அர்ஜூன் சம்பத் கொந்தளிப்பு
திமுக ஒரு கார்ப்ரேட் கம்பெனியாக மாறிவருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் சம்பத். நடிகர் விஜய்க்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகளில் நடத்திய வருமான சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டதாகவும், சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த பிகில் படம் 400 கோடி ரூபாய் வசூலை கொடுத்ததாகவும், ஆனால் அதற்கு அவர் வரி செலுத்தமால் ஏமாற்றியுள்ளார் என்றும், அவரின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ரஜினி விஜயை போல், வரி ஏய்ப்பு செய்பவர் அல்ல என்றும், ரஜினி நேர்மையனவர் என வருமான வரித்துறையால் சான்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து திமுக ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருவதாகவும் திமுக கார்ப்ரேட் மயமாகி வருவதாகவும் அவர் பேசினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்