மக்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது.. முதல்வர் பேட்டி!

மக்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது.. முதல்வர் பேட்டி!

சேலம் வந்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சிஏஏ குறித்து சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் செய்தி வெளியிடுகிறார்கள். இதுகுறித்து சட்டசபையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த சிறுபான்மையினரும் பாதிக்கப்படமாட்டார்கள்.

தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அதனை குலைக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள். அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு மு.க.ஸ்டாலின் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். 

சேலத்தில் உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை. ஆனால் முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் மற்றும் திமுகவினர் வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்