மறைமுக தேர்தல்.. திமுகவை பின்னுக்கு தள்ளிய அதிமுக!

மறைமுக தேர்தல்.. திமுகவை பின்னுக்கு தள்ளிய அதிமுக!

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், கிராம ஊராட்சி துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் பிரச்சனை காரணமாக தேர்தல் நடத்தப்படவில்லை. மற்ற 26 மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக 14 மாவட்ட ஊராட்சிகளிலும், திமுக 12 மாவட்ட ஊராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

அதே போல 314 ஊராட்சி ஒன்றியத்தில் 285 ஊராட்சி ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக 150 இடங்களிலும், திமுக 135 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. துணை தலைவர்களுக்கான தேர்தல் இன்று மாலை நடைபெறும் என கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்