மேலும் ஒரு பட்டியலின பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை..!

உ.பி.யில் மேலும் ஒரு பட்டியலின இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கொடூரம்..!

உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலின இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், இதேபோன்று வயலுக்குச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வயலுக்குச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாகவும், கொல்லப்படுவதற்கு முன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹத்ராஸ்  பகுதியில் 19 வயது இளம்பெண், கூட்டு பாலியல் பலாத்காரம்  செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது இதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது அந்த மாநிலத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்