மனைவி டார்ச்சர் தாங்க முடியாமல் 62 ஆண்டுகளாக காது கேளாதவராக நடித்த கணவர்... என்ன ஒரு புத்திசாலித்தனம்!

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்தவர் பாரி டவ்சன் மற்றும் டோரத்தி தம்பதியர். 84 வயதான பாடி டவ்சன் தன் மனைவியிடம் 62 ஆண்டுகளாக காது கேட்காதவர் போல் நடித்து ஏமாற்றியிருக்கிறார். மனைவி பேசுவதை கேட்க முடியாமல் தான் இப்படி ஒரு ஐடியா செய்திருக்கிறார்.
இதனை உண்மை என்று நம்பிய அவரது மனைவியும், இத்தனை வருடங்களாக சைகை மொழியில் அவரிடம் பேசியுள்ளார். இதற்காக அவர் 2 ஆண்டுகளாக சைகை மொழியை கற்றாராம். ஒரு கட்டத்தில் பாடி டவ்சனுக்கு அதுவும் பிடிக்கவில்லை போல. சைகையில் பேசுவது கூட கண்களுக்கு சரியாக தெரியவில்லை என கூறிவிட்டாராம்.
ஒரு நாள் அவரது மனைவி யூடியூப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கணவர் பார் ஒன்றில் கரோக்கி பாடலை கேட்டுக் கொண்டு நடனமாடியதை பார்த்து அதிர்ந்துள்ளார். அப்போது தான் அவருக்கு கணவர் தன்னை இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதனால் கடுப்பான அவரது மனைவி, விவாகரத்து வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தம்பதிக்கு 6 பிள்ளைகள், 13 பேரன், பேத்திகள் உள்ளனர். மனைவி அடிக்கடி சண்டை போட்டதால் தான் இப்படி ஒரு டிராமா செய்து குடும்ப அமைதியை டவ்சன் காப்பாற்றியதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு

'அ.தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்' என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது
-
சரியானது
-
காலம் கடந்தது
-
விவாதிக்கலாம்
-
கருத்து இல்லை
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

60 மணிநேரத்திற்கு 7 மில்லியன் டாலர்!
